Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup News Today: வேதாந்து, அனாகாடமி, லிடோ நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருகையில், இந்த ஸ்டார்ட்அப் இவ்வளவு மில்லியன் நிதியை திரட்டி அதிர்ச்சி!!

Nandhinipriya Ganeshan June 02, 2022 & 10:35 [IST]
Startup News Today: வேதாந்து, அனாகாடமி, லிடோ நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருகையில், இந்த ஸ்டார்ட்அப் இவ்வளவு மில்லியன் நிதியை திரட்டி அதிர்ச்சி!!Representative Image.

Cuemath Funding: 70க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னிலை வகிக்கும் எட்டெக் ஸ்டார்ட்அப்பான கியூமத் நிறுவனம், ஆல்பா வேவ் தலைமையிலான புதிய ஈக்விட்டி நிதி சுற்றில் 57 மில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது. இந்த சுற்றில் தற்போதைய முதலீட்டாளர்களான Alphabet’s CapitalG, Lightrock India, Manta Ray, Sequoia Capital India, மற்றும் Unitus உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். 

எட்டெக் ஸ்டார்ட்அப் கியூமத்

கடந்த 2013 ஆம் ஆண்டு மனன் குர்மா மற்றும் ஜிக்ஜித் குர்மா ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த ஆன்லைன் லேர்னிங் தளம், K-12 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. கியூமத் கணிதத்தை (Online math class platform cuemath) மையாகக் கொண்ட ஒரு ஆன்லைன் தளம். ஒருவகையில், நன்றாக செயல்பட்டு இந்த நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு LGT Lightstone Aspada, Alpha Wave Incubation, Sequoia Capital, Google's Capital G மற்றும் Manta Ray ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சீரிஸ் C நிதிச் சுற்றில் 40 மில்லியன் டாலர் நிதியை திரட்டியது. 

இரண்டு மடங்கு உயர்வு

அதற்கு முன்பு, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்தும், சில புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து அதன் சீரிஸ் B நிதிச் சுற்றில் 5.45 Mn திரட்டியது. தற்போது, இந்த சுற்றில் திரட்டப்பட்ட நிதியின் அடிப்படையில், ஸ்டார்ட்அப்பின் மொத்த மதிப்பு 407 மில்லியன் டாலர் ஆகும். இந்த மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

100 நாடுகளுக்கு இலக்கு

மேலும், வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் 100 நாடுகளுக்கு மேல் அதன் தரத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல், உலகின் பணக்கார நாடுகளான தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, UK, ஐரோப்பா, APAC, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய முக்கிய நாடுகளில் தனது வணிகத்தை வளர்க்க திட்டமிட்டுள்ளது. 

இந்திய எட்டெக் துறை

சமீபத்தில், கொரோனா கட்டுபாடு நீங்கி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், பல எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நஷ்டத்தை கண்டு வருகின்றன. இதனால், பெரிய நிறுவனங்கள் கூட தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த கசப்பான காலத்தில், இந்த எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் இவ்வளவு மதிப்புடைய நிதியை திரட்டியிருப்பது மற்ற பிரபல ஆன்லைன் வகுப்பு நிறுவனங்களான பைஜூஸ், கான் அகாடமி, அனாகாடமி, வேதாந்து, லிடோ, Eupheus மத்தியில் அதுர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

உதய் ஸ்டார்ட்அப்

2025 ஆம் ஆண்டிற்குள் 10.4 பில்லியன் டாலராக உயர தயாராக இருக்கும் இந்திய எட்டெக் துறை, சமீபத்தில் நிறைய பணிநீக்கங்களை கண்டுவருகிறது. இதனை சமாளிக்க அனாகாடமி மற்றும் பைஜூஸ் போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆஃப்லைன் சந்தையில் நுழைந்துள்ளன. இதற்கிடையில், எட்டெக் ஸ்டார்ட்அப் தளமான உதய் (Udayy) தனது செயல்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் நிறுத்திவிட்டு அதன் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8.5 மில்லியன் டாலர்களை திருப்பி கொடுத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்