Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile Heat

Gowthami Subramani Updated:
மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile HeatRepresentative Image.

குளிர் காலத்தை விட, வெயில் காலத்தில் மொபைல் அதிகமாக வெப்பமடைவதை நாம் இயற்கையாகவே பார்த்திருப்போம். அதிலும், மொபைலை சார்ஜ் செய்யும் போதோ, இன்டர்நெட்டை ஆனில் வைத்திருக்கும் போதோ அதிகமான சூட்டில் மொபைல் இருப்பதைப் பார்த்திருப்போம்.

மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile HeatRepresentative Image

மொபைல் பாதிப்பு

அதிலும் குறிப்பாக, வெயில் காலங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்பமான சூழ்நிலையில் செல்போன் பேட்டரி பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, கோடை காலத்தில் மொபைல் ஏற்படும் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில வழிகளைக் காணலாம்.

மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile HeatRepresentative Image

மொபைல் வெப்பமடைவதைத் தவிர்க்கும் முறைகள்

நீண்ட நேர பயன்பாட்டைக் குறைத்தல்

மொபைலை எந்த காலநிலையாக இருப்பினும், நீண்ட நேரமாக பயன்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் மொபைலைப் பயன்படுத்தும் போது, சீக்கிரமாகவே வெப்பமாகி விடுகின்றன. கோடைக்காலத்தில் சொல்லவா வேண்டும். வெயில் காலத்தில் அதிக அளவில் மொபைல் வெப்பமாவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile HeatRepresentative Image

சூரிய ஒளியில் இருந்து தவிர்த்தல்

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனும், சூரிய ஒளியை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. எனவே, முடிந்த வரை ஸ்மார்ட்போனை சூரிய ஒளியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், குளிர்ச்சி நிறைந்த பகுதிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்.

மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile HeatRepresentative Image

அதிக நேரம் சார்ஜ் செய்வதைத் தவிர்த்தல்

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள், சார்ஜ் செய்யும் போது இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதாவது மொபைல் போனை 10%-ற்கு குறைவாக இருக்கும் போது மற்றும் 90%-க்கு அதிகமாக இருக்கும் போது சார்ஜ் செய்யக் கூடாது எனக் கூறுவர். இந்த கோடைக் காலத்தில் அதிக நேரம் சார்ஜ் போடுவது மொபைலுக்குப் பாதிப்பை உண்டாக்கும்.

மொபைல் ஹீட்-ஐ குறைக்க இத ஃபாலோப் பண்ணுங்க… | How to Control Mobile HeatRepresentative Image

ஸ்மார்ட்போன் கவரை நீக்குதல்

ஸ்மார்ட்போன் அதிக அளவிற்கு வெப்பமாகும் சமயத்தில், அதன் கவரை நீக்கி விட வேண்டும். இவ்வாறு நீக்கும் போது சிறிது நேரமாவது ஸ்மார்ட்போன் காற்றோட்டமாக இருக்கும். இவ்வாறு செய்வதால், ஸ்மார்ட்போனின் வெப்பநிலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

இது போன்ற சில எளிமையான நடவடிக்கைகள் மொபைல் அதிக வெப்பமாவதைத் தவிர்க்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்