Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

அசத்தலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன்..

Nandhinipriya Ganeshan Updated:
அசத்தலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன்.. Representative Image.

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தான் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை - பேஸ், பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடலுடன் உலகம் முழுவதும் அறிமுகம் செய்தது. அடுத்ததாக, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்தவகையில், தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை, மாடல் எண் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 

அசத்தலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன்.. Representative Image

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி சிறப்பம்சங்கள்:

கேமரா

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். எனவே அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன் என்றாலே நாம் முதலில் தேடுவது செல்ஃபி எடுக்க கேமரா குவாலிட்டி எப்படி இருக்கும் என்று தான். அந்தவகையில், இந்த கேலக்ஸி  ஏ34 5ஜி 13எம்பி முன்பக்க கேமராவை கொண்டிருக்கும். 

டிஸ்ப்ளே

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A346M என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சில்வர் (Silver), வயலட் (Violet), லிம் (Lime), கிராஃபைட் (Graphite) என 4 விதமான வண்ணங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். 

அசத்தலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன்.. Representative Image

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டிருக்கும். எனவே சார்ஜ் பற்றிய கவலை வேண்டாம். மேலும், 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம்

சாம்சங்கின் ஒன் யுஐ 5.0 இடைமுகத்துடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அசத்தலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன்.. Representative Image

மெமரி

ஆண்ட்ராய்டு 13 ஐ கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வசதிகளுடன் வருகிறது. அதோடு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. 

விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ34 இன் விலை 27,990 ஆக இருக்கும் எனவும், வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்