Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tecno Pova 3 Price in India: இந்தியாவில் ஜூன் 20 இன்று முதல் களமிறங்குகிறது டெக்னோ போவா 3 போன்! இது யாருக்கெல்லாம் யூஸ் ஃபுல் தெரியுமா?

Priyanka Hochumin June 20, 2022 & 13:00 [IST]
Tecno Pova 3 Price in India: இந்தியாவில் ஜூன் 20 இன்று முதல் களமிறங்குகிறது டெக்னோ போவா 3 போன்! இது யாருக்கெல்லாம் யூஸ் ஃபுல் தெரியுமா?Representative Image.

Tecno Pova 3 Price in India: இந்த மாதம் அடுக்கடுக்காக வெளியான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனும் ஒன்றாகிவிட்டது.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன், இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சார்ஜிங் பற்றிய கவலை, குட்டி ஷ்கிரீனில் பார்க்க முடியவில்லை என்ற கவலை இருக்கும் அனைவருக்கும் ஏற்ற ஸ்மார்ட்போனாக இது திகழ்கிறது. அது எப்படி இவ்ளோ உறுதியாக சொல்கிறோம் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.


Realme C30 Launch Date in India: புது போன் என்ன வாங்கலாம்னு தேடுறீங்களா? மதியம் 12.30 வரைக்கும் வெயிட் பண்ணுங்க!


டெக்னோ போவா 3 அம்சங்கள்

6.9 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. மிகவும் பெரிய ஷ்கிரீன் கொண்டு இருப்பதால் கவலை இன்றி நீண்ட நேரம் பயன்படுத்தலாம். மேலும் 1080 x 2460 பிக்சல் ரிசொல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றை கொண்டது இந்த பிராண்ட் நியூ ஸ்மார்ட்போன். மற்றும் கேமர்களுக்கு ஏற்ற அம்சங்களாக மீடியாடெக் ஜி88 சிப்செட் வசதியுடன் Mali-G52 2EEMC2 ஆதரவும் உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்தை கொண்டு வெளியாகியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கிரிஸ்டல் கிளியர் இமேஜ்

மிகவும் துளியாமான போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க இதில் இருக்கு அசத்தலான கேமராக்கள். பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்று மொத்தமாக மூன்று ரியர் கேமராக்கள் உள்ளது. பிறகு செல்ஃபி எடுக்க மற்றும் வீடியோ கால் பேச, முன்பக்கத்தில் 8எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. இப்ப பாத்துக்கோங்க போட்டோ எப்படி பளிச்சுனு வரும்னு.


Vivo X80 Lite 5G Price in India: அல்ட்ரா பவர் கொண்டு தயாரிக்கப்படும் Vivo X80 Lite மற்றும் Vivo X80 Pro+ ஸ்மார்ட்போன்! அதுவும் எப்படி?


ஸ்டோரேஜ் விவரம்

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி வசதியைக் கொண்டுள்ளது. கூடுதல் மெமரி வேண்டும் என்றால், அதுக்காக மெமரி கார்டு பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன நிறங்களில் வெளியாகும் என்றால், ஈகோ பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் டெக் சில்வர் ஆகிய நிறங்களில் வருகிறது. இதில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் வாங்கி பயன் பெறுங்கள்.

பேட்டரி மற்றும் விலை

பேட்டரிக்காகவே இந்த போனை நிறைய பேர் வாங்குவாங்க. ஏன்னா, 7000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன். அதனால் ஒரு முறை சார்ஜ் போட்டால் பல மணி நேரம் தாங்கும் பாத்துக்கோங்க. இதில் இருக்கும் மற்ற பயனுள்ள அம்சங்கள் - பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி என்று இவை அனைத்தும் உள்ளடங்கும். இந்தியாவில் வரும் ஜூன் 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு தாயாரும் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன். மேலும் அமேசான் மூலம் விற்பனையாகும் இந்த புது ஸ்மார்ட்போன் ரூ. 11,499/-க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் பாத்துட்டு நம்பி வாங்குங்க!


WhatsApp Pay Cashback: வாட்ஸ்அப்பில் மாதம் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கு தெரியுமா?


Tecno pova 3 price in india, tecno pova 3 price in india flipkart, tecno pova 3 air, tecno pova 3 plus, tecno pova 3 specifications, tecno pova 3 specs, tecno pova 3 snapdragon, tecno pova 3 silver, tecno pova 3 flipkart, tecno pova 3 full specifications, tecno pova 3 features, tecno pova 3 finger print sensor, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்