Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா?

KANIMOZHI Updated:
WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா? Representative Image.

லிஃப்ட்-ல ஏறுனதுமே எத்தனையாவது மாடிக்கு போகனுங்கிற பட்டனை அழுத்துறோமோ இல்லையா... நம்ப கண்ணு நேரா அங்க இருக்குற கண்ணாடிக்கு தான் போகும். அப்படி கண்ணாடி பார்க்கும் போது எல்லாம் நம்ப மூளையில் இருந்து ஒரு சந்தேகமும் உதயமாகும். ஆமா, லிஃப்டி-ல எதுக்கு கண்ணாடி வச்சியிருக்கிறாங்கன்னு... அதுக்கான காரண காரியத்தை பத்தி தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்... 

WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா? Representative Image

லிஃப்ட் சுவற்றில் ஏன் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்குன்னு நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?... உடனே  நம்முடைய தோற்றத்தைப் பார்க்க, உடை மற்றும் சிகை அலங்காரங்களைச் சரிசெய்ய, செல்ஃபி எடுக்கத் தான் என நினைத்தால்,  நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று பொருள்.
 

WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா? Representative Image

லிஃப்ட் டிசைன் செய்யும் நிறுவனங்கள் இன்ஜினியரிங் உடன்,  ஒரு நபரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த லிஃப்ட்டில் கண்ணாடி பொருத்தியுள்ளனர். 

சேஃப்டி முக்கியம் பிகிலு: 

லிஃப்டிற்குள் அடையாளம் தெரியாத தனிநபருடன் ஏறுகிறீர்கள் என்றால், அவர் என்ன செய்கிறார்?, அவரால் உங்களுக்கு ஏதேனும் அசெளகரியம் நேரக்கூடுமா? என்பதை கண்ணாடிகள் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இது கொள்ளை, தாக்குதல் போன்ற சூழ்நிலைகளையும் முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது. 

WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா? Representative Image

அனைத்து லிஃப்ட்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம் என்று ஜப்பான் எலிவேட்டர் அசோசியேஷன் கூறுகிறது. சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் லிஃப்டில் நுழைவதையும் வெளியேறுவதையும் எளிதாக்கும் வகையிலான லிப்ட்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 

கிளாஸ்ட்ரோஃபோபியாவைக் குறைக்க:

மூடப்பட்ட அல்லது நெருக்கமான அறைகளில் சிலருக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற பதற்றம் மற்றும் பயம் கலந்த நிலை உருவாகலாம். அப்படிப்பட்ட மனரீதியான பதற்றத்தை தவிர்க்க கண்ணாடி உதவியாக இருக்கும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. இதனால் லிஃப்டில் கண்ணாடி பொருத்தப்படுகிறது. 

WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா? Representative Image

கவனச்சிதறல், ஈடுபாடு: 

 

WHY: லிஃப்ட்-ல ஏன் கண்ணாடி வச்சியிருக்காங்க தெரியுமா? Representative Image

லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் அதில் கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை.  இதனை மக்கள் வேகமாக ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு செல்லக்கூடிய வசதியாக மட்டுமே பார்த்தனர். அப்போது பலரிடமும் கேபிள் கட் ஆகிவிட்டாலோ, பவர் இல்லாமல் லிஃப்ட் பாதியில் நின்றாலோ நமது நிலை என்ன என்ற கவலையும், பயமும் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே அந்த எண்ணத்தை திசை திரும்பும் முயற்சியாகவே லிஃப்டிற்குள் கண்ணாடிகளை பொருத்தும் சூப்பரான யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்