Mon ,May 27, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57

தமிழ்நாடு உலா

Weekend ட்ராவலுக்கு ரெடியா...சென்னை டூ பாண்டி...சீப் அண்ட் பெஸ்ட் இடங்கள்!

Priyanka Hochumin December 09, 2022

சென்னை வாசிகள் வாரம் முழுவம் மெஷின் போல ஓடி ஓடி வேலைக்குச் செல்வார்கள். வார கடைசியில் தான் அப்பாடா என்று நல்ல ரெஸ்ட் எடுப்பார்கள். அப்படி இருக்கையில் மனைவி, குழந்தைகள் மற்றும் காதலியுடன் எங்கையாவது வெளிய செல்லலாம் என்றால் மால், பீச், காபி ஷாப் போல இடங்களுக்கு செல்வார்கள். இப்படி போன இடத்துக்கே போயி அழுத்து போச்சா? கவலைய விடுங்க. இதோ சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரை ரோட் ட்ராவல் செல்லும் வழியில் இருக்கும் பல இடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த இடத்தைப் பத்தி தெரிஞ்சா… நீங்க போகாம இருக்க மாட்டீங்க…!

Gowthami Subramani September 16, 2022

கோடைக் காலம் வந்து விட்டால் மக்கள் படையெடுத்து நீர் இருக்கும் பகுதிக்கு அதிகம் சென்று வருவது வழக்கம். அணை, அருவி என நீர் நிறைந்து காண்போர்களை கண்கவர் பகுதியாக இருப்பது தான் கொடிவேரியில் உள்ள பகுதிகள். இது சுற்றுலாத் தளமாக, அனைவரும் விரும்பிச் செல்லக் கூடிய ஒரு இடமாகும். இந்தப் பகுதியில் உள்ள அணைகள், அருவிகள் காண்பவர்களை இந்த இடத்திலேயே இருக்க வைக்கும் எண்ணம் தோன்ற வைக்கக் கூடியது. கொடிவேரி அணை குறித்த சிறப்புகளைப் பற்றி இதில் காண்போம்.

தமிழ்நாட்டுல ஒரு சுவிட்சர்லாந்து இருக்கு தெரியுமா..?

Bala August 11, 2022

திண்டுக்கல்லில் இருந்து 84 கீ.மீட்டரும், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் தான் பூண்டி. மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படும் நிலையில், கொடைக்கானல் அருகே சுவிட்சர்லாந்து இணையான கிராமமாக இது பார்க்கப்படுகிறது.

ஏழைகளின் ஊட்டி மஞ்சோலை தெரியுமா உங்களுக்கு..?

Bala July 08, 2022

ஏழைகளின் ஊட்டி மஞ்சோலை தெரியுமா உங்களுக்கு..? தமிழகத்தில் மனிதர்கள் கால் தடம் பதியாத அழகிய இடம் என்றால் அது மஞ்சோலை தான்...!

Lemur Beach :-குமரியில் ஒரு குட்டி மாலத்தீவு...!

Bala May 25, 2022

கன்னியாகுமாரிக்கு வரும் அனைவரும் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு சென்று கடலில் கால் நனைத்து விட்டு அவ்வளவு தான் என கிளம்பி விடுகிறார்கள், உண்மையில் கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள குட்டி மாலத்தீவைப் பற்றி பார்க்கலாம்.

Most Visited Tourist Place in Tamilnadu: சம்மர் லீவுக்கு ஜில்லுனு ஒரு டூர் போலாமா..? சீசன் ஆரம்பிச்சாச்சு...குறைந்த செலவில் சொர்க்கம்..

Nandhinipriya Ganeshan April 18, 2022

Most Visited Tourist Place in Tamilnadu: இப்போது இந்த சம்மர் சீசனில் டூர் செல்ல வேண்டிய இடங்கள் (Hills Tourist Places in Tamilnadu) என்ன என்பதை பார்க்கலாம்

நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்த இடங்கள்… இந்த இடத்துக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா? | Top 10 Highest Statues in Tamil Nadu

Nandhinipriya Ganeshan April 16, 2022

வாங்க! நம்ம நாடும் மற்ற நாடுகளுக்கு சலித்ததில்லை என்பதற்கு ஏற்ப வீரம் நிறைந்த தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் மிக உயரமான சிலை (Top 10 Highest Statues in Tamilnadu) அழகை உலகிற்கு காண்பிப்போம்…

27 Nakshatras in Tamil: இந்த கோயில்தான் உங்க வாழ்க்கையையே மாத்தப் போகுது!

Nandhinipriya Ganeshan March 21, 2022

27 Nakshatras in Tamil: ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. பொதுவாக, நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தை தான் ஜென்ம நட்சத்திரம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தெய்வங்கள், மலர்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய நட்சத்திர தெய்வங்களோட ஆலயத்திற்கு செல்லும் போது நட்சத்திர மலர்களை பயன்படுத்தி வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுங்கள். இவ்வாறு உங்கள் நட்சத்திர தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நாடிய செல்வம் தேடி வரும், வெற்றி மேல் வெற்றி குவியும், எப்போதும் மனநிம்மதி கிடைக்கும். இதன் அடிப்படையில் 27 நட்சத்திரத்திற்குரிய தெய்வங்கள் மற்றும் கோயில்கள், மற்றும் மலர்களை பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.  அஸ்வினி நட்சத்திரம் (Ashvini): அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த அற்புத திருக்கோயில் திருவாரூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் திருத்துறைப்பூண்டியிலிருந்து உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேப்போல் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் உள்ள கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயத்திற்கும், சென்று வழிபடலாம். இந்த ஆலயங்களுக்கு செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "சாமந்தி".  பரணி நட்சத்திரம் (Bharani): பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம், அக்னீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நல்லாடை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "முல்லை". கார்த்திகை நட்சத்திரம் (Krittika): கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த திருத்தலம் மயிலாடு துறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ தூரத்தில் கஞ்சா நகரம் இருக்கிறது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் 1/2 கி.மீ சென்றால் ஆலயத்தை காணலாம். இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "செவ்வரளி". ரோகிணி  நட்சத்திரம் (Rohini): ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "பாரிஜாதம், பவளமல்லி". மிருகஷிரீஷம் நட்சத்திரம் (Mrigashirsha): ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆதிநாராயணப் பெருமாள் கோயில். இந்த திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50கி.மீ தொலைவில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. "ஜாதி மல்லி" பூவை வைத்து வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.  திருவாதிரை (Ardra): திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டியது அபய வரதீஸ்வரர் ஆலயம். இந்த திருத்தலம் தஞ்சாவூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்கு முதலில் சென்று, அங்கிருந்து 12 கி.மீ பயணித்தால் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "வில்வம், வில்வப் பூ".  புனர்பூசம் நட்சத்திரம் (Punarvasu): புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் போது நட்சத்திர மலரான "மரிக்கொழுந்து" வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த திருத்தலம் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கி.மீ தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ பழைய வாணியம்பாடி இருக்கிறது.  பூசம் நட்சத்திரம் (Pushya): பூசம் நட்சத்திரத்தில் (pushya nakshatra in tamil) பிறந்தவர்கள் பட்டுக்கோட்டைக்கு அருகில் விளங்குளம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ  அட்சய புரீஸ்வரர் ஆலயத்திற்கு (kadagam rasi natchathiram) சென்று வழிபடலாம். இந்த ஊர் பட்டுக்கோடையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2கி.மீ சென்றால் விளங்குளத்தை அடையலாம். மற்ற கோயில்களாவன திருச்சேறையில் உள்ள சாரபரமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். பூசம் நட்சத்திரத்திற்கான நட்சத்திர மலர் "தாமரை". ஆயில்யம் நட்சத்திரம் (Ashlesha): இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடற்கடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இந்த ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் திருத்தேவன்குடி என்ற ஊரில் உள்ளது. நட்சத்திர மலர் "செவ்வரளி". மகம் நட்சத்திரம் (Magha): மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடலாம். இந்த திருத்தலம் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள விராலிப்பட்டி விளக்கு என்ற ஊரில் உள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "மல்லிகை". பூரம் நட்சத்திரம் (Purva Phalguni): பூரம் நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ தூரத்தில் உள்ள திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. நட்சத்திர மலர் "தாமரை". உத்திரம் நட்சத்திரம் (Uttara Phalaguni): இந்த ராசிக்காரர் வழிபட வேண்டிய கோயில் மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில். இந்த திருத்தலம் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து 27 கி.மீ தூரத்தில் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "கதம்பம்" மலரை வைத்து வழிபாடு வேண்டும். அஸ்தம் நட்சத்திரம் (Hasta): அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயிலாடுதுறையில் (கோமல்) ஸ்ரீ கிருபாகூரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "வெண்தாமரை".  சித்திரை நட்சத்திரம் (Chitra): சித்திரை நட்சத்திரக்காரர்கள் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயத்திற்கு செல்ல மதுரையில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து பஸ் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "மந்தாரை" மலரை வைத்து வழிபாடு வேண்டும். சுவாதி நட்சத்திரம் (Swati): சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து 8 கி.மீ தொலைவில் சித்துக்காடு என்ற ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.   விசாகம் நட்சத்திரம் (Vishakha): விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் முத்துக்குமாரசாமி திருக்கோயில். மதுரையில் இருந்து 155 கி.மீ தொலைவில் உள்ள செங்கோட்டையிலிருந்து 7கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "இருவாட்சி" மலரை வைத்து வழிபாடு வேண்டும். அனுஷம் நட்சத்திரம் (Anuradha): அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோயில். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ தூரத்தில் திருநின்றியூர் ஊரில் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "செம்முல்லை" மலர் அல்லது செந்நிற மலர்களை வைத்து வழிபாடு வேண்டும்.  கேட்டை நட்சத்திரம் (Jyeshtha): தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள். இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "பன்னீர் ரோஜா" மலர்களை வைத்து வழிபாடு வேண்டும். மூலம் நட்சத்திரம் (Mula): சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் சிங்கீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "வெண்சங்கு" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம்.  பூராடம் நட்சத்திரம் (Purva Ashadha): பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம் ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில். தஞ்சாவூரில் இருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் கடுவெளி என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நட்சத்திர மலர் "விருட்சி" பூ. இந்த மலரை இட்லிப்பூ என்றும் சொல்வார்கள்.  உத்திராடம் நட்சத்திரம் (Uttara Ashadha): உத்திராட நட்சத்திரக்காரர்கள் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். பூங்குடி என்ற ஊரில் இந்த திருத்தலம் உள்ளது. இந்த ஊர் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்தில் ஓக்கூர் உள்ளது. அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ சென்றால் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலைச் சென்றடையலாம். இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "சம்பங்கி" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம்.  திருவோணம் நட்சத்திரம் (Shrvana): திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருப்பாற்கடல் என்ற இடத்தில் இருக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். வேலூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் காவேரிப்பாக்கத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "ரோஜா" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம்.  அவிட்டம் நட்சத்திரம் (Dhanishtha): அவிட்ட நட்சத்திரக்காரர்கள் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு கும்பகோணத்திலிருந்து முழையூர், தாராசுரம், வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் செல்லலாம். இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "செண்பகம்" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம்.  சதயம் நட்சத்திரம் (Shatabhisha): சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ தூரத்தில் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "நீலோற்பவம்" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம். பூரட்டாதி நட்சத்திரம் (Purva Bhadrapada): பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் திருவையாறில் இருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை செல்லும் வழியில் 2கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த திருத்தலத்திற்கு செல்லும் போது "வெள்ளரளி" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள்.  உத்திரட்டாதி நட்சத்திரம் (Uttara Bhadrapada): உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபடவேண்டியது சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயமானது புதுக்கோட்டையில் இருந்து 61 கி.மீ தூரத்தில் தீயத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு செல்லும் போது உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் "நந்தியாவட்டம்" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள்.  ரேவதி நட்சத்திரம் (Revati): இந்த ராசிக்காரர் வழிபட வேண்டிய கோயில் கயிலாயநாதர் ஆலயம். இந்த திருத்தலம் திருச்சியிலிருந்து கிட்டதட்ட 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுடி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு செல்லும் போது ரேவதி நட்சத்திரக்காரர்கள் "செம்பருத்தி" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள்.    இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சென்று தரிசித்து வருவது மிக மிக முக்கியமானது. மிக மிக நல்லதும் கூட. அதேப்போல், இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை நீங்க எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அவசியம் பயன்படுத்துங்கள். இந்த மலர்களை வீட்டு பூஜை அறை, அலுவலகம், வியாபார ஸ்தலங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம், இது மேலும் நல்ல பலன்களைத் தரும். 

Queen of Hills in Tamil Nadu: நம்ப ஊர்ல இப்படியெல்லாம் ஒரு இடம் இருக்கா? இத்தன வருசமா இது தெரியாம போச்சே!

Priyanka Hochumin March 10, 2022

Queen of Hills in Tamil Nadu: மே கோடை காலம் வருவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை.