Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57

சன் டிவி

மீனா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Meena Serial

Nandhinipriya Ganeshan July 28, 2023

மீனா சீரியல்: சன் டிவியில் கடந்த ஜூலை 24, 2023 அன்றிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 12.00 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் 'ஆனந்தராகம்' சீரியலில் கதாநாயகியான இந்து சௌத்ரி மற்றும் 'சுந்தரி' புகழ் நடிகர் ஜெய் ஸ்ரீனிவாச குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், பிரபல நடிகையான சோனியா வெங்கட் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது மீனா சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். மீனா சீரியல் நடிகை, நடிகர்கள்: மீனா சீரியல் முழு விவரம்: மீனா சீரியலின் கதை.. நெருங்கிய நண்பர்களான, சிதம்பரம் & சத்தியமூர்த்தி இருவரும் 25 வயதில் இருந்து பகையாளியாக ஒரே ஊரில் வாழ்ந்து வருகின்றனர். கதையின் கதாநாயகியான மீனா கிராமப் பள்ளி ஆசிரியையாக அடியெடுத்து வைத்து, அங்குள்ள மக்களின் நல்வாழ்வுக்காக அந்த இரண்டு குடும்பத்தையும் மீண்டும் ஒன்றிணைப்பதாக சபதம் எடுக்கிறாள். அதற்காக அவள் என்னென்ன போராட்டங்களை சந்திக்கப்போகிறாள் என்பதே கதைக்களம். கதையின் மற்றொரு கதாநாயகியான சோனியா வெங்கட் இந்த பிரச்சனைகளுக்கு இடையில் தனது இரண்டு மகள்களை எப்படி வளர்க்க போகிறார் என்பது கதையின் மற்றொரு விறுவிறுப்பான பகுதியாக இருக்கும்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம்.. | Sun Tv Ethir Neechal Serial

Nandhinipriya Ganeshan July 06, 2023

தமிழ் சின்னத்திரையில் "கோலங்கள்" என்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் இயக்குநர் திருச்செல்வம். இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான "எதிர்நீச்சல்" சீரியலை இயக்கி வருகிறார். பெண்கள் அடிமைத்தனம், ஆண்களின் அதிகாரம் என்பதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  அதுவும் கடந்த சில நாட்களில் இந்த சீரியலை பலரும் அதிகமாக பார்க்க தொடங்கி இருக்கின்றனர். சீரியல் ப்ரோமோ வெளியான அடுத்த நொடியே பல்லாயிரக்கணக்கான லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சீரியலின் வெற்றிக்கு இயக்குனர் ஒரு பக்கம் காரணம் என்று சொன்னாலும், சின்னத்திரை நடிகர், நடிகைகளின் எதார்த்தமான நடிப்பும் மற்றொரு காரணம். அனைவருமே அந்தந்த கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது. மாரிமுத்து - ரூ. 20,000 ஹரிப்பிரியா - ரூ. 15,000 சபரி - ரூ. 12,000 சக்தி - ரூ. 12,000 கனிகா - ரூ. 12, 000 பிரியதர்ஷினி - ரூ. 10,000 மதுமிதா - ரூ. 15,000 கமலேஷ் - ரூ. 15,000

நேத்ரா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Nethra Serial

Nandhinipriya Ganeshan June 26, 2023

நேத்ரா சீரியல்: தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் 'நேத்ரா' சீரியலின் டப்பிங் தான் தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இச்சாதாரி நாகினியான நேத்ரா நாகமணியை எடுப்பதற்காக பூலோகத்தில் நடத்தப்படும் போராட்டங்களை மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திகில் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஷிவானி தோமர், பரத்வாஜ் ரங்கவாஜுல்லா, பிரேம் ஜேக்கப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது நேத்ரா சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். நேத்ரா சீரியல் நடிகை, நடிகர்கள்: நேத்ரா சீரியல் முழு விவரம்: நேத்ரா சீரியலின் கதை.. இச்சாதாரி நாகினியான நேத்ரா, உலக அமைதியை பாதுகாக்கும் சக்திவாய்ந்த நாகமணியை பெற வேண்டும் என்றால், ஒரு மனிதப்பிறவை திருமணம் செய்ய வேண்டும். அதற்காக அர்ஜுனை தனது கணவனாக தேர்ந்தெடுக்கிறாள். இதை பொறுக்காத கரண் என்ற அசுரன் அர்ஜுனை கொன்றுவிடுகிறான். இப்படி நாகமணியை அடைவதற்கான போராட்டம் ஆறு ஜென்மங்களாக தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் கரண் அர்ஜுனை கொன்று நாகமணியை அடைய முயற்சிக்கிறான். ஆனால் நேத்ரா தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டு அடுத்தடுத்த ஜென்மத்தில் பிறந்து வருகிறாள். தற்போது ஏழாவது மற்றும் கடைசி ஜென்மத்தில் உள்ள நேத்ரா, அர்ஜுன், கரண் ஆகிய மூவரும் தங்கள் முன்ஜென்ம நினைவின்றி வாழ்ந்து வருகின்றனர். ஆறு ஜென்மங்களாய் பரம விரோதிகளாக இருந்த அர்ஜுன் மற்றும் கரண் தற்போது உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். மேலும், அர்ஜுனின் அலுவலகத்தில் கரணின் தனிப்பட்ட செயலாளராக நேத்ரா பணியாற்றி வருகிறாள். சிவன்கோவிலில் வசித்துவரும் வயதான பாட்டி ஒருவரின் உதவியால் நேத்ரா தன் முன்ஜென்ம நினைவுகளைப் பெற்று மீண்டும் நாகினியாக மாறுகிறாள். கரணின் இடையூறுகளைக் கடந்து அர்ஜுனுடன் இணைந்து நாகமணியை எப்படி பெற்று உலக அமைதியைப் பாதுகாக்க போகிறாள் என்பதே கதைக்களம். நேத்ரா சீரியல் இன்றைய எபிசோட் நேத்ரா சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும். நேத்ரா சீரியல் ப்ரோமோ டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் நேத்ரா சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 

சன் டிவியின் புத்தம் புதிய த்ரில்லர் சீரியல் அனாமிகா.. யார் நடிக்கிறாங்க தெரியுமா? | Sun TV Anamika Serial

Nandhinipriya Ganeshan June 25, 2023

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணியாக திகழும் சன் டிவியில் 'அனாமிகா' என்ற ஒரு புத்தம் புதிய தொடர் வெளியாகவுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் சீரியல் என்பதால் அனாமிகா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் டிவி சேனல்களில் சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும், டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடம் பிடித்து வருகிறது. தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது அடுத்த புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாவது வழக்கம். அதன் படி, சன் டிவியின் அன்பே வா சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அனாமிகா என்ற புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புதிய தொடரின் மூலம் நடிகை அக்ஷதா தேஷ்பாண்டே மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். ஏற்கனவே சுந்தரி, எதிர்நீச்சல், கயல் போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், புது தொடரான அனாமிகா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், சன்டிவியில் சில வருடங்களுக்கு ஒளிபரப்பாகும் இன்னொரு த்ரில்லர் சீரியல் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீரியலில் தர்ஷக் கவுடா மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சீரியல் எப்போது வெளியாகும், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீரியல் குறித்த ப்ரோமா வைரலாகி வருகிறது. அனாமிகா சீரியல் கதாபாத்திரம்: ரிஷியாக தர்ஷக் கவுடா அனாமிகாவாக அக்ஷதா தேஷ்பாண்டே நந்தாவாக ஆகாஷ் பிரேம்குமார்

புது வசந்தம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun TV Pudhu Vasantham Serial

Nandhinipriya Ganeshan June 25, 2023

புது வசந்தம் சீரியல்: வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட சீரியல்களின் மூலம் ரசிகர்களை பல ஆண்டுகளாக ஈர்த்து வருகிறது சன் டிவி. இந்த நிலையில், ஏற்கனவே பல தொடர்கள் மெகா ஹிட்டாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் வேளையில் தற்போது புது வசந்தம் என்ற புதிய சீரியலை ஒளிப்பரவுள்ளது சன் டிவி. இதில் அபியும் நானும் தொடரில் நடித்து பிரபலமான ஷ்யாம் ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷ் நடிக்கவிருக்கிறார். சகோதரர்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலானது, 26 ஜூன் 2023 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 01.30 ஒளிபரப்பாகவுள்ளது. புது வசந்தம் சீரியல் முழு விவரம்: புது வசந்தம் சீரியலின் கதை.. கதாநாயகியின் தான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால், கதாநாயகிக்கு ஒரு தனி குடும்ப பையனை திருமணம் செய்துக் கொள்ள துளிக்கூட விருப்பம் இல்லை. கூட்டு குடும்பத்தில் மருமகளாக செல்ல விரும்புகிறார். இதற்கிடையில், பண்டிகை சமயத்தில் அவர் இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒரு குடும்பத்தைச் சந்திக்கிறார். உடனடியாக அந்த சகோதரர்களில் தம்பியான ஹீரோவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். ஆனால், அந்த சகோதர்கள் இருவருக்குமே திருமணத்தில் இஷ்டம் இல்லை. ஹீரோவை எப்படி கதாநாயகி காதலிக்க வைக்கிறார் என்பதுதான் இந்த தொடரின் முக்கிய கதைக்களம்.

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in Tamil

Nandhinipriya Ganeshan May 29, 2023

தமிழ் சேனல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி சேனல் தான். 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கில் பட்டயை கிளப்பி வரும் நம்பர் ஒன் தமிழ் சேனல். வாரத்தின் ஏழு நாட்களிலுமே ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சீரியல்கள், ரியல்ட்டி ஷோக்கள், செய்திகள், திரைப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது. இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சன் டிவி சேனலுக்கு ரசிகர்கள் ஏராளாம். அதிலும் சன் டிவி நாடகங்களுக்கு நம் முன்னோர் காலத்தில் இருந்தே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒளிப்பரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளன. இதற்கு காரணம் அந்தந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள். அந்தவகையில், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

மகராசி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Magarasi Serial

Priyanka Hochumin May 26, 2023

கடந்த 21 அக்டோபர் 2019-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 11.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் மகராசி. இதில் முக்கிய கதாபாத்திரமாக திவ்யா ஸ்ரீதர், எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

தாலாட்டு சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Thalatu Serial

Priyanka Hochumin May 25, 2023

கடந்த 26 ஏப்ரல் 2021-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 11.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தாலாட்டு. இதில் முக்கிய கதாபாத்திரமாக கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதாஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

திருமகள் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Thirumagal Serial

Priyanka Hochumin May 23, 2023

கடந்த 12 அக்டோபர் 2020-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் திருமகள் . ஜெமினி டிவியில் ஒளிபரப்பான 'அதோ அத்தம்மா குதுரோ' என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக்காக எடுக்கப்பட்டாலும், பின்னர் கதைக்களம் மாற்றப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமாக ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

பாண்டவர் இல்லம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Pandavar Illam Serial

Nandhinipriya Ganeshan May 23, 2023

பாண்டவர் இல்லம் சீரியல்: மகாபாரத்தில் வரும் பாண்டவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் பாப்ரி கோஷ், ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை ஆகியோர் முக்கிய வேடங்களில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், மகிமா, சோனியா / ஸ்வேதா, பாரதி கண்ணன் மற்றும் டேவிட் சாலமன் ராஜா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். பாண்டவர் இல்லம் சீரியலின் கதை.. பெரிய சுந்தரம் மற்றும் அவரது ஐந்து பேரர்களான ராஜ சுந்தரம் பாண்டவர், நல்ல சுந்தரம் பாண்டவர், அழகு சுந்தரம் பாண்டவர், அன்பு சுந்தரம் பாண்டவர் மற்றும் குட்டி சுந்தரம் பாண்டவர் ஆகியோரின் கதையே இந்த பாண்டவர் இல்லம். இவர்களுடைய வீட்டில் பெண்கள் என்ற வார்த்தைக்கே அனுமதி கிடையாது. ஏனென்றால், திருமண நாளிலேயே அண்ணனை இழந்த பிறகு, இவர்கள் அனைவரும் 'ஆண்கள் மட்டும்' தான் குடும்பம் என்றும், திருமணம் செய்ய மாட்டோம் என்றும் சபதம் செய்துக்கொள்கின்றனர். ஆனால் ஒரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைந்தால் என்ன நடக்கும்? அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுவே பாண்டவர் இல்லம் சீரியலின் கதைக்களம்.