Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in TamilRepresentative Image.

இவ்வுலகில் ஒவ்வொரு சமயத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு பொங்கல், தீபாவளி, ஆடிபெருக்கு போன்று கிறித்துவர்களுக்கும் கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசுவின் துன்பங்களை நினைவுகூறும் நாளாக, புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா இது.

பொதுவாக, ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம் இருக்கும். கிறிஸ்துவர்களின் வழிபாட்டு ஆண்டில் முக்கியமான நாளான 'புனிதவெள்ளி' இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது அனைத்து கிறித்துவக் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதனால், அனைத்து கிறித்துவ கோவில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதும். இயேசு கிறித்து எதற்காக தண்டனை பெற்றார் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in TamilRepresentative Image

புனித வெள்ளி வரலாறு..

யோசேப்புக்கும் மேரிக்கும் மகனாக இவ்வுலகில் பிறந்தார் இயேசு கிறிஸ்து. இவ்வுலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவர். இயேசு தனது வாழ்நாள் முழுவதும் பிறரிடம் செலுத்தும் அன்பு மற்றும் மன்னிப்பைப் பற்றி பிரசங்கித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, கடவுளைப் பற்றிய மக்களின் பார்வையை மாற்றியுள்ளார். ஒருபோதும் அடுத்தவர்களின் துன்பங்களுக்கு நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதை கற்பித்ததோடு நிறுத்தாமல், வாழ்ந்து காட்டினார். மேலும் கடவுள் மற்றும் நித்திய வாழ்வின் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக பல அற்புதங்களைச் செய்தார். 

புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in TamilRepresentative Image

இயேசு தொடர்ந்து போதித்தாலும், சிலர் அவரை கடவுளால் அனுப்பப்பட்டதாகக் கருதவில்லை. எனவே அவருக்கு எதிராக அமைதியான முறையில் போராடத் தொடங்கினர். முப்பது வெள்ளிக்காசுக்களுக்காக கர்த்தரின் சீடரான யூதாஸ் என்பவர் அவரைக் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால் அவர் எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. கைது செய்யப்பாட்ட இயேசுவை கயபா என்ற தலைமைக் குரு விசாரணை செய்தார். அவர் மீத பல முரண்பாடான குற்றங்கள் வைக்கப்பட்டது. பின்னர் இயேசு, ரோமின் மன்னர் பிலோத்துவிடம் அழைத்து செல்லப்பட்டார். அவர் இயேசுவை விசாரித்தது விட்டு அவர் குற்றமற்றவர் என்று கூறினார்.

புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in TamilRepresentative Image

ஆனால் மக்கள் அவர் கூறியதை ஏற்கும் மனநிலையில் இல்லை. சரி, இயேசுவின் பகுதியான கலிலேயாவின் மன்னர் ஏரோதுவிடம் அவரை அனுப்ப முடிவெடுத்தார். ஆனால், அவர் எருசேலம் சென்று விட்டதால் இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றி விடுதலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பிலோத்து.  எனினும் மக்கள் விடுவதாயில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையயுமாறு கூறினார்கள். மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் கலவரம் வெடிக்கும் என்று பயந்த பிலோத்து மக்கள் கூறியபடியே செய்ய முன்வந்தார். எனினும், இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறிவிட்டார்.

புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in TamilRepresentative Image

பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு அழைத்து செல்லப்பட்டு, கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அன்றைய தினத்தில் மதிய நேரமே வானம் இருண்டு காணப்பட்டதாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிர் நீத்தார் என்றும், அடுத்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்றும் வரலாறு கூறுகிறது. 

புனித வெள்ளி என்றால் என்ன? வரலாறும் பின்னணியும்.. | Good Friday 2023 History in TamilRepresentative Image

புனித வெள்ளியை எப்படி கொண்டாடுகிறார்கள்?

புனித வெள்ளியானது பலவகையான முறைகளில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, ஒவ்வொரு வருடமும் புனித வெள்ளி நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று, நாள் முழுவதும் வேண்டுதலில் ஈடுபடுவார்கள். ஒருசிலர் இயேசுவின் இறப்பை நினைத்து நோன்பு இருப்பார்கள். அதோடு, இயேசு அனுபவித்த பாடுகள் மற்றும் இறந்ததை நினைவு கூறும் வகையில் சிலர் கருப்பு நிறத்தில் ஆடைகளை அணிந்து நாள் முழுவதும் யாரிடமும் பேசாமல் மௌன விரதம் இருப்பார்கள். இவ்வாறு, பலவிதமாக புனித வெள்ளியை கொண்டாடுகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்