Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாங்கல்ய பாக்யம் அருளும் காரடையான் நோன்பு விரதம் இருப்பது எப்படி? Karadaiyan Nombu Irukkum Murai

Gowthami Subramani Updated:
மாங்கல்ய பாக்யம் அருளும் காரடையான் நோன்பு விரதம் இருப்பது எப்படி? Karadaiyan Nombu Irukkum MuraiRepresentative Image.

காரடையான் நோன்பா.? இது என்ன நோன்பு? இந்த நோன்பு எப்படி இருக்க வேண்டும்? இதனால் என்னென்ன பலன்களைப் பெறலாம்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் எழலாம். காரடையான் நோன்பு என்பது காமாட்சி அம்மனுக்கு பெண்கள் விரதம் இருப்பதாகும். மனைவி, தன் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதற்கு வேண்டி தீர்க்க சுமங்கலியாக இருக்க எண்ணி விரதம் இருப்பர். இந்த காரடையான் நோன்பு இருப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
 

மாங்கல்ய பாக்யம் அருளும் காரடையான் நோன்பு விரதம் இருப்பது எப்படி? Karadaiyan Nombu Irukkum MuraiRepresentative Image

காரடையான் நோன்பு யாரெல்லாம் இருக்கலாம்?

பொதுவாக, காரடையான் நோன்பு ஆனது பெண்களால் இருக்கப்படும் விரதங்களில் ஒன்றாகும். அதிலும், பெண்கள் கட்டாயம் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவர். திருமணமான பெண்கள் அவர்களுடைய கணவனுக்கு நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்பதற்காக காரடையான் நோன்பு இருப்பார்கள். திருமணமாகாத பெண்கள் அவர்களுக்கு நல்ல துணை அமைய வேண்டி விரதம் இருப்பர்.

மாங்கல்ய பாக்யம் அருளும் காரடையான் நோன்பு விரதம் இருப்பது எப்படி? Karadaiyan Nombu Irukkum MuraiRepresentative Image

காரடையான் நோன்பு இருப்பது எப்படி?

பெண்கள் இருக்கக் கூடிய காரடையான் நோன்பு விரதம் எப்படி இருப்பது என்பது பற்றி இதில் காணலாம்.

✤ அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜையறையில் காமாட்சி படம் அல்லது ஏதாவதொரு அம்மன் படத்திற்கு பூ வைத்து வழிபட வேண்டும்.

✤ காலை முதலே விரதத்தை இருக்கத் தொடங்கலாம்.

✤ நம் வீட்டில் உள்ள காமாட்சி அம்மன் படத்திற்கு அல்லது அம்பாள் படத்தின் முன்னால் மஞ்சள் சரடு அல்லது, வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும்.

மாங்கல்ய பாக்யம் அருளும் காரடையான் நோன்பு விரதம் இருப்பது எப்படி? Karadaiyan Nombu Irukkum MuraiRepresentative Image

✤ பூஜை செய்யும் போது காமாட்சி விருத்தம் பாட வேண்டும். இதில் மஞ்சள் சரடு வைக்கும் போது 2 மல்லிகை பூ அல்லது ஏதேனும் ஒரு பூவை வைத்துக் கட்டிக் கொள்ளலாம்.

✤ இவ்வாறு அம்பாள் படத்திற்கு முன் வைத்து வழிபட வேண்டும். பிறகு, அந்த கயிற்றை கணவரிடம் ஆசி பெற்று, அவரது கையால் பெண்கள் கட்டிக் கொள்ள வேண்டும்.

✤ கணவர் வெளியூரில் இருந்தாலோ அல்லது விரதம் இருப்பவர்கள் திருமணமாகாத பெண்களாகவோ இருப்பின், அவர்கள் வீட்டில் உள்ள மூத்தோரிடம் ஆசி பெற்று அந்தக் கயிரை கழுத்திலோ அல்லது கையிலோ பெண்களே கட்டிக் கொள்ளலாம்.

மாங்கல்ய பாக்யம் அருளும் காரடையான் நோன்பு விரதம் இருப்பது எப்படி? Karadaiyan Nombu Irukkum MuraiRepresentative Image

✤ இந்த விசேஷமான நாளில் தாலி சரடும் கூட பெண்கள் மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் அணியலாம் அல்லது குறைந்தபட்சம் 3 நாள் அணிந்து கொண்டு கழற்றி விடலாம்.

✤ மேலும், இந்த காரமடையான் நோன்புக்கு ஏற்ற கார அடை, இனிப்பு அடை போன்றவற்றை அம்மனுக்கு படைக்கலாம். அதே போல, காமாட்சி அம்மனுக்கு உருகாத வெண்ணைய்யை நைவேத்தியமாக படைக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்