Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Astham Natchathiram :அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? 

Manoj Krishnamoorthi October 31, 2022 & 15:30 [IST]
Temple For Astham Natchathiram :அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? Representative Image.

புதனின் ஆதிக்கம் நிறைந்த அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலி தான். கன்னி ராசியில் நிலை கொண்டு இருக்கும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெற தங்கள் வாழ்நாளில் அடிக்கடி அல்லது ஒருமுறையாவது செல்ல வேண்டிய ஸ்தலம் எது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Most read: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் எது?

Temple For Astham Natchathiram :அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? Representative Image

அஸ்தம் நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் (Temple For Astham Natchathiram)

ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் கொண்ட குணத்திற்கு சொந்தக்காரரான அஸ்தம் நட்சத்திரக்காரர் சங்கீதம் போன்ற ஏனைய கலைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள் ஆவர். பேச்சு திறமையால் மற்றவர்களை சமாளிக்கும் இவர்கள் எளிதில் மற்றவர்களின் நட்பை பெறும் குணம் கொண்டவர்கள் ஆகும். இத்தனை சிறப்பு கொண்ட அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிம்மதியான வாழ்வு பெற நாகப்பட்டினம் மாவட்டம் கோமல் என்னும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் செல்வது நன்மை ஆகும். 

Also Read: ஆயில்யம் நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் எது?

மனநிலைக்கு உரியவனான சந்திர பகவானை அதிபதியாக கொண்ட அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனைத் திறன் கொண்டவர்கள். மேலும் சாதுரியமான நடத்தை இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்காமல் இருக்க செய்யும்.  முக்கியமாக அஸ்த நட்சத்திரக்காரருக்கு இருக்கும் தோஷங்கள் நீங்க இத்தலம் செல்வது நன்மை அளிக்கும். 

Temple For Astham Natchathiram :அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? Representative Image

தல சிறப்பு (Astham Natchathiram Kovil)

இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் இருக்கிறார். சர்வத்தை படைத்த சிவன் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அன்னை பார்வதி தேவி அறிய விரும்புகிறார். இதுகுறித்து சிவனிடம் பார்வதி தேவி கேட்க, சிவபெருமான் திருவிளையாடலை தொடங்கினார். தன் கண்களை மூடும்படி பார்வதி தேவிடம் கூற அவளும் அவ்வாறே செய்ய உலகத்தின் இயக்கம் நின்றுபோனது. இதனால் ஏற்பட்ட தவறை உணர்ந்த பார்வதி தேவி கேட்டாள், ஆனால் சிவ பெருமானே தான் ஹஸ்தாவர்ண் ஜோதியாக பூமியில் மறைய போகிறேன், நீ பசுவாக மாறி என்னை கண்டு சேர்வாய் எனக் கூறி சிவபெருமான் மறைந்தார். 

தன் சகோதரன் திருமாலின் உதவியுடன் பார்வதி தேவி பசுவாக மாறி சிவனை தேட, மனமிறங்கிய சிவன் ஒரு அஸ்த நட்சத்திர தினத்தில் ஹஸ்தாவர்ண ஜோதியாக தோன்றினார். இந்த ஜோதியில் பார்வதி தேவி ஐக்கியமானாள். இதனால் உருவான கோவிலே இந்த  அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் ஆகும். குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்து நிறைவேறிய பின் பசு கன்று தானமாக அளிப்பது வழக்கமாகும். 

சிவன் இந்த கிருபா கூபாரேஸ்வரர் ஸ்தானத்தில் இருக்கும்போது எத்தகைய தவறு செய்தாலும் மன்னிக்கும் நிலையில் இருப்பார்.  திருமண தடையால் பாதிக்கப்பட்ட அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் லட்டு,. கொழுக்கட்டை, வடை போன்ற நைவேத்தியம்  வைத்து இத்திருத்தல கூபாரேஸ்வரை வலம் வந்தால் திருமணமாகும் என்பது நம்பப்படுவதாகும். 

Most Read: சிறப்பான வாழ்க்கை பெற மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!

Temple For Astham Natchathiram :அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? Representative Image

எப்படி செல்வது? (Hastham Natchathiram Temple Route)

அருள்மிகு கிருபா கூபாரேஸ்வரர் திருக்கோயில் செல்ல கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை  செல்லும் வழியில் குத்தாலத்தில் இருந்து பிரியும் இடத்தில் 8 கி.மீ தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம். 

பொது வாகனத்தில் பயணம் செய்பவராக இருந்தால் கவலை வேண்டாம் குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி கோவில் அமைந்துள்ள கோமல் என்னும் ஊர் வரை உள்ளது. இரயில் மார்க்கமாக வருவதாக இருந்தால் குத்தாலம் இரயில் நிலையத்தில் இறங்கி கோமல் வர வேண்டும். 

கோயில் நேரம்:-  காலை 7 மணி- மதியம் 12 மணி வரை; மாலை 5:30- இரவு 7:30 மணி வரை 

தொடர்புக்கு:- 91 95002 84866, 99942 37866, 91 63854 16019


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்