Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்னிக்கு இந்த ராசிக்காரர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்க போகிறது.... ஜூலை 2, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 01, 2022 & 16:05 [IST]
Nalaya Rasipalan: இன்னிக்கு இந்த ராசிக்காரர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்க போகிறது.... ஜூலை 2, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5;45 வரை


Representative Image. July Month Rasipalan 2022: இந்த மாதம் ஆரோக்கிய குறையால் அவதிபட போகும் அந்த ராசிக்காரர் நீங்களா..!


Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று வெற்றிகரமான நாளாக இருக்கக் கூடும், பல நாட்களாக வாழ்க்கையில் கிடைக்குமா என எதிர்பார்த்து  கொண்டு இருந்த விஷயம் கிடைக்கும்.  அதுமட்டுமின்றி செய்யும் காரியத்தின் பலனைக் கண்கூட பார்ப்பீர்கள். திடீர் லாபம் வரும். அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கருணை உங்களுக்கு இலகுவாக இருக்கும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை. இன்று வெளியில் உணவு உட்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளவும். லாபம்!    

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்று உங்கள் வருமானம் உயர்ந்தாலும்  நிதி நிலையில் சிக்கல்கள் உருவாகும். கவனமாகச் செலவு செய்ய வேண்டும். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த மனக்கசப்புகள் குறையும், பாகப்பிரிவினை போன்ற காரியம் நன்மை அளிக்கும். காதலில் தேவையற்ற கோபத்தால் பிரச்சனைகள் அதிகமாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டத் தொடங்குவர். ஆரோக்கியத்தில் குறைபாடு இல்லை. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

பிறர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற மிகவும் கடினமான பயணத்தைக் கொள்ளும் உங்களுக்கு அலுவலகத்தில் சிறப்புப் பரிசாக சில வெகுமதிகள் கிடைக்கும், மனம் ஆனந்தமாக ஆகும். வெளியூர் பயணம் மேற்கொள்ளுவீர்கள். தொழிலிலிருந்த சில தடங்கள் சரியாகும், மனம் தெளிவு பெறும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வெற்றியைத் தக்க வைக்கக் கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி நிலை சிறப்பாக உள்ளது. முன்னேற்றம்!  

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2


Representative Image. Nalaya Natchathiram Palan: பொறுமையாக இருந்தால் இன்று நட்சத்திரக்காரர் அமைதியான வாழ்க்கை வாழலாம்…ஜூலை 2, 2022 நட்சத்திர பலன்!


கடகம் (Cancer 2022 Horoscope)

அனைவரும் சமமாக நடத்தும் குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் உங்களுக்கு இன்று உங்கள் தொழில் அதிகமான லாபத்தைத் தரும், கையில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தொழிலில் வழக்கமான வேலையைச் சரியாக செய்ய வேண்டும் என்ர எண்ணத்தால் சற்று மெதுவாகச் செய்வீர்கள்.  ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை இருக்கும். நலமான மனநிலை இருப்பதால் மற்றவர்களுடன் மனம் திறந்து சந்தோஷமாக இருக்க முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Leo 2022 Horoscope)

முன்னேற்றத்தைத் தடுக்கும் தேவையற்ற சிந்தனைகளைத் துறந்து லட்சியத்துடன் இவ்வளவு நாட்களாக நீங்கள் போராடிய செயலுக்கு இன்று அதிகமான போட்டிகள் நிலவும்.உங்க ராசிக்கு இன்று குடும்பத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் அதிகமாக உள்ளது.  தொழில் வழக்கம் போல நன்றாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாகத் தூங்க முடியும். மாணவரின் கல்வி மேம்படும். குடும்ப வாழ்வு நிம்மதியாக இருக்கும். நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

அமைதியான சுபாவம் கொண்ட உங்களின் கோபத்தின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதைச் சுற்றத்தார் இன்று அறிந்து கொள்ளுவர். நிதி நிலை மேம்படும், பணத்தைப் பல ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். பொறுமையாக இருப்பது ஆரோக்கியத்தைக் கெடுக்காது. தொழிலில் பல புதிய முயற்சியால் முன்னேற்றம் கொள்வீர்கள். கல்வியில் பாதிப்பு இல்லை. குடும்ப வாழ்வு ஓரளவு நன்றாக உள்ளது. மன நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8


துRepresentative Image. லாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலன் ( 2.07.2022) பற்றி அறிய க்ளிக் செய்யவும்.  


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்