Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொருளாதாரம் அமோகமாக இருக்கும் காலம் இது..! | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
பொருளாதாரம் அமோகமாக இருக்கும் காலம் இது..! | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆடி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆடி மாதத்தில் கடகம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

பொருளாதாரம் அமோகமாக இருக்கும் காலம் இது..! | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 கடகம்:

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். நிர்பந்தத்தின் காரணமாக சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த சமயத்தில் பொறுமையாக பெரியவர்களின் அறிவுரையை கேட்டு தெளிவான முடிவினை எடுக்க வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் போராட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். சுபகாரியம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

பொருளாதாரம் அமோகமாக இருக்கும் காலம் இது..! | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 சிம்மம்:

ஏதேனும் காரணங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். கண் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பீபி, சுகர் போன்ற உபாதைகள் வந்து குறையலாம். புது வேலை அல்லது வியாபாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். இடமாற்றத்திற்கான காலமாக இந்த ஆடி மாதம் சிம்ம ராசியினருக்கு திகழ்கிறது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். மகிழ்ச்சிக்கு எந்த பஞ்சமும் இருக்காது. தாமதமான கல்வி சார்ந்த விஷயங்கள் கைகூடி வரும்.

பொருளாதாரம் அமோகமாக இருக்கும் காலம் இது..! | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 கன்னி:

வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். பலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இடம் மாற்றம் சாதகமாக அமையும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். சுபகாரியங்களுக்காக அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். குடும்பத்திடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல்நிலையில் உபாதங்கள் வந்து போகும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்