Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அற்புதமான மாதம்.. இருந்தாலும் இதுல கவனம் தேவை.. | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அற்புதமான மாதம்.. இருந்தாலும் இதுல கவனம் தேவை.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆடி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆடி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அற்புதமான மாதம்.. இருந்தாலும் இதுல கவனம் தேவை.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 துலாம்:

உங்க ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரமடைவதால் இந்த காலக்கட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கட்டாயம் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு அற்புதமான காலக்கட்டம். தொழில் அமோகமாக இருக்கும். பல நாட்களாக நல்ல வேலைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கூடிய அதிர்ஷ்டமான மாதம். நினைத்த காரியம் நினைத்தப்படி நடக்கும். திருமண யோகம் கைக்கூடி வரும். வீடு, மனை வாங்கக்கூடிய பிராப்தம் ஏற்படும். சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம். 

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அற்புதமான மாதம்.. இருந்தாலும் இதுல கவனம் தேவை.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் வக்கிரம் அடைந்திருக்கிறார்கள். அதனால், நீண்ட நாட்களாக போக வேண்டும் என்று நினைத்து போக முடியாமல் போன இடங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கியமான விஷயங்களில் இருந்த தடை, தாமதம் நீங்கி நல்ல முறையில் நடைபெறும். 

தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. இருப்பினும், பிடித்த விஷயங்களை செய்ய சற்று சிரமங்கள் உண்டாகும். அர்த்தாஷ்டம சனி காலக்கட்டம் என்பதால் எந்த ரகசியத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒருவேளை நம்பி பகிர்ந்துக் கொண்டால் அவர்கள் வென்றுவிடுவார்கள். எனவே ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக் கொண்டால் வெற்றி உங்கள் பக்கம்.

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அற்புதமான மாதம்.. இருந்தாலும் இதுல கவனம் தேவை.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 தனுசு:

இந்த மாதத்தில் உங்க உடல்நிலையில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரிக்கும் உங்களுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். எந்த காரியத்திலும் அவரசம் காட்ட வேண்டாம். இருப்பினும், மாதத்தில் முதல் பாதியில் ஆன்மீக சார்ந்த பிரயாணங்கள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். 

சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் கைகூடும். வீட்டிற்கு விரோதமான திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, யோசித்து முடிவெடுங்கள். கணவன் - மனைவி உறவில் நிறைய இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது திருமண வாழ்க்கைக்கு நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்