Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 32 ஆம் நாளுக்கான [17 ஆகஸ்ட் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: -------

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரத்தில் லாபம் எப்பவும்போல இருக்கும். வீண் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். சிலருக்கு துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்து போவது நல்லது. பணவிஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். 

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசித்து பேசவேண்டிடும். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து சென்றால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நம்பிக்கையுடன் செயல்படவும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து விரட்டுவது, நல்ல முறையில் செயல்பட உதவும். பணவரவு சுமாராக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, விட்டு கொடுத்து போவது நல்லது. தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். உங்கள் மீது அன்பாக இருப்பவர்களை தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும். எந்த செயல்களிலும் பொறுமையான அணுகுமுறை தேவை. எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். 

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தனவரவு தாராளமாக இருக்கும். பெற்றோர்களின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். உங்க துணையுடன் வீண்விவாதங்கள் ஏற்படும். எனவே, எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவோடு செலவும் காணப்படும். தொழில் சற்று மந்தமாக காணப்படும். யாராவது உங்க குடும்பத்தினரை பற்றி எதாவது கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகள் சில தடைகளுக்கு பிறகே ஈடேறும்.

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

விருந்தினர் வருகையால் செலவு அதிகரித்து காணப்படும். எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய முயற்சிகள் தடைபடும். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரம் சுமாராகவே இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பர்களை அனுசரித்து நடந்துக் கொள்ளவும்.

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உறவினர்கள் வழியில் திடீர் நல்ல செய்தி வரும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். புதிய முடிவுகள் எடுக்க அற்புதமான நாள். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எடுக்கும் சின்ன முயற்சிக்கூட பெரிய வெற்றியை கொடுக்கும். 

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆன்மீக வழிபாடு மனஅமைதியை கொடுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். மலை சம்பந்தமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். 

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட மனசங்கடங்கள் சரியாகும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளதால், கோபத்தை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விவகாரம் சாதகப் பலனை தரும்.

இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்கணும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 17.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் நிதானம் தேவை. உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவுகளால் கடன் வாங்கும் சூழல் வரும். தொலைதூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். விலையுயர்ந்த பொருட்களை சற்று கவனமாக வைத்துக்கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்