Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 72,623.09
-434.31sensex(-0.59%)
நிஃப்டி22,055.05
-141.90sensex(-0.64%)
USD
81.57
Exclusive

வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 30 ஆம் நாளுக்கான [14 மார்ச் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பிள்ளைகள் வழியாக சுப செலவுகள் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்துடன் பணியை மேற்கொள்வீர்கள். வியாபாரம் ஓரளவுக்கு ஓகே. நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெண்களால் நன்மை ஏற்படும். கணவன் - மனைவி உறவில் சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். உடன்பணிபுரிவர்களின் பாராட்டு கிடைக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். இரத்தவழி பந்தங்களுடன் பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசித்து பேசவேண்டியது நல்லது. ஏனென்றால், நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு அமோகமாக இருக்கும். தொழில் சார்ந்த அணுகுமுறைகளை யதார்த்தத்துடன் கையாள்வது நல்லது. தூரத்து உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வரும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஒரு சிலர் வியாபார சம்பந்தமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதங்கள் வரலாம். அனுசரித்து போவது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தாய்வழி உறவினர்களிடமிருந்து திடீர் நல்ல செய்தி வரும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். ஏனென்றால், பின்னாளில் அதுவே பெரிய ஆப்பாக வந்து நிற்கும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. புதிய முடிவுகள் எடுக்க அற்புதமான நாள். எடுக்கும் சின்ன முயற்சிக்கூட பெரிய வெற்றியை கொடுக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்:7

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். எனவே, நிதானமாக செயல்களை கையாள வேண்டும். எதிலும் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் பணிசுமை காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீதிமன்ற வழக்குகள் சாதமாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். ஒருசிலருக்கு பொன் பொருள் வாங்கும் உண்டு. தொழில் முன்னேற்றம் காணப்படும். கணவன்-மனைவி இடையே தேவையற்ற விஷயங்களுக்கு கருத்து வேறுபாடு எழலாம். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தேவையற்ற பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர் உங்களிடம் வேணுமென்றே சண்டை இழுப்பார்கள். அவர்களிடம் புத்திசாலிதனமாக பேசுகிறேன் என்று ஏடாகூடாமாக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதை விட, பேசாமல் இருப்பதே உத்தமம். அதேப்போல், கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. திருமண வாழ்க்கையில் பிரச்சனை இல்லை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் மற்றவர்களிடம் ஆலோசித்து ஈடுபடுவது நல்லது. புதிய முயற்சிகளில் இறங்குபவர்களுக்கு சில தடைகள் இருக்கும்; தோல்விகள் இயற்கையில் சகஜம்தான். ஆனால், தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே. உறவினர்களிடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

திருமணம் சம்பந்தமான பேச்சுவார்தைகளில் அனுகூப்பலன் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவோடு செலவும் காணப்படும். தொழில் சற்று மந்தமாக தான் இருக்கும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆலோசிப்பதே மெய் என்பதிற்கேற்ப யாராவது உங்க குடும்பத்தினரை பற்றி எதாவது கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் கவனம் தேவை. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, விட்டு கொடுத்து போவது நல்லது. தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். எனவே தானம் தர்மம் செய்வதில் கொஞ்சம் தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும். எந்த செயல்களிலும் பொறுமையான அணுகுமுறை தேவை. எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உடல் ஆரோக்கியோத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்க ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும் நாள். விரும்பியதை செய்ய பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகளை கொடுக்கும். எனவே, நம்பிக்கையோடு பொழுதை தொடங்குங்கள். ஆனால், ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களால் பிரச்சனை ஏற்படலாம். நீங்க நிதானமாக செயல்படுவதன் மூலம் பெரிய சண்டையை தடுக்கலாம். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிர்பாராத நன்மைகள் உண்டு. அதனால், மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மனைவியுடனோ அல்லது முக்கியமானவர்களிடமோ பேசும்போது கவனமாக பேச வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

 வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | 14 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

அனைத்தும் காரியங்களும் நல்லப்படியாக முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். தொழிலில் லாபம் தரும் நாளாக இருக்கும். உங்க மீது பாசம் வைத்திருப்பவர்களிடம் ஜாலியாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு அவர்களை காயப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் இருந்து பரிசும், பாராட்டும் காத்திருக்கிறது. ஆக மொத்தம் அதிர்ஷ்டமான நாள். இருப்பினும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்