Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!

UDHAYA KUMAR Updated:
இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!Representative Image.

கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பாக சொல்லப்போனால் 2019ம் ஆண்டு பாதியில் துவங்கி, நடந்து முடிந்த 2022ம் ஆண்டு இறுதி வரைக்கும் படாத பாடு பட்ட நீங்கள் வாழ்க்கையில் வெறுமையின் எல்லைக்கே சென்றிருப்பீர்கள். ஏன்டா வாழ்கிறோம் இந்த வாழ்க்கை ஏன் நம்மை போட்டு இந்த பாடு படுத்துகிறது என்கிற அளவுக்கு சோகங்களும், துன்பங்களும் உங்கள் மண்டையைப் பிடித்து ஆட்டியிருக்கும், உங்களை வதைத்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா எப்போதுதான் நம் வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் என நீங்கள் நாட்களை எண்ணி எண்ணி கடந்திருப்பீர்கள். வந்துவிட்டது 2023 இனி நம் வாழ்க்கை பிரகாசம்தான் என நினைத்தாலும் இந்த ஆண்டு துவக்கத்திலும் சில வேண்டாத, வருந்ததக்க விசயங்கள் நடந்திருக்கும். ஒன்று நீங்கள் அதற்கு பழக்கப்பட்டிருப்பீர்கள் இல்லையென்றால் அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்திருப்பீர்கள். 

வாழ்க்கை உங்களை பிரட்டி எடுத்தாலும் இனி சற்று நிம்மதி காற்றைச் சுவாசிக்கப்போகிறீர்கள். உங்களுக்கு கொடுத்து உதவப் போவது சனிதான். அவர் உங்களை மகிழ்ச்சியின் பக்கத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார். சோகங்களையும், தோல்விகளையும் நன்றாகவே கையாண்டு இப்போது வரை துவளாமல் இருக்கும் உங்களைப் போல மொத்தம் 5 ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறார் சனிபகவான். 

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!Representative Image

மேஷம்

வேலை வாய்ப்பில் அதிகார யோகத்தை நிச்சயம் பெறுவார்கள். நல்ல நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். வெளிநாட்டு நிறுவனங்களில் உள்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்புகளும் அவ்வப்போது எதிர்பாராத உதவிகளும் பண வரவுகளும், இந்த வருடத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் கடுமையான உழைத்ததற்கான வெகுமதியும் பதவி உயர்வும் கிடைக்கும். 

இதுவரை கடனில் அவஸ்தைப் பட்டவர்களுக்கு படிப்படியாக சுமை குறைந்து வரும் டிசம்பருக்குள் இதிலிருந்து விடுபட வழி கிடைக்கும். கூடுதல் வருமானத்துக்கான வாய்ப்புகள் பிரகாசம் அதை நீங்கள் சாதுர்யமாக அமைத்துக் கொள்வதில் இருக்கிறது உங்கள் புத்திசாலித்தனம்

இதுவரை திருமணம் ஆகாமல் 30 வயதைத் தொட்டவர்கள் மற்றும் கடந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வரும் வரன்களை மட்டும் பரிசீலிப்பதை விடுத்து நீங்களே கொஞ்சம் முயற்சி செய்து தேடினால் உங்கள் பூர்வீக ஊருக்கு அருகாமையிலேயே வரன் அமையும். தூரத்து சொந்தங்கள் மீண்டும் இதன்மூலம் இணைய வாய்ப்பு ஏற்படும். காதலிப்பவர்கள் வீட்டில் சொல்லிவிடுவது முதலில் சண்டைக்கு வழிவகுத்தாலும் பின் அவர்களே சமாதானம் ஆகி மணமுடித்து வைப்பார்கள். உங்களின் பேச்சில் உறுதித் தன்மையைப் பொறுத்து இதில் வெற்றி தோல்வி ஏற்படும்

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!Representative Image

மிதுனம்

தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறும் வருடமாக இந்த வருடம் அமையப்போகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு இதுவரை இருந்த துன்பங்கள் விலகி, சந்தோஷத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன. உங்களின் சாதுர்யமான பேச்சினால் நட்பு வட்டாரம் அதிகரித்து அதன்மூலம் கிடைக்கும் ஆதாயம் உங்களை பொருளாதார சூழலில் வேறொரு தடத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. 

இதுவரை இழுத்துக் கொண்டிருந்த வேலைகள், விவகாரங்கள், பிரச்சனைகள், பரிவர்த்தனைகள் அனைத்தும் முடிந்து நீங்கள் வெற்றி பெற நீங்களே காரணமாக அமைவீர்கள். கொஞ்சம் ஈகோவை விட்டு கொடுத்து நீங்கள் நேரடியாக இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினால் சில நொடிகளில் தீரும் விசயங்கள்தான் இவை. 

முதலீடுகளைக் கவனமாக கையாளுங்கள். உங்களுக்கு இதில் மிகச் சிறந்த லாபம் கிடைக்கப்போகிறது. பொதுவாகவே எடுத்த உடனே லாபம் வாய்ப்பில்லை என்றாலும் இப்போதிருந்தே நீங்கள் கவனமாக அடிஎடுத்து வையுங்கள். அடுத்த பத்து வருடங்களில் நீங்கள் வேறு எல்லையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள். 

ரியல் எஸ்டேட், நிலம், வீடு, மனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் மிகச் சிறப்பானதாகும். அரசியல், சமூக சேவை, ஐடிதுறை , மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என அனைத்து தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் வெற்றி நிச்சயம்

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!Representative Image

துலாம்

குறிப்பிட்ட தொழில் என்று இல்லை எந்த தொழிலை எடுத்தாலும் தொட்டதெல்லாம் பொன் என்பது போல உயர்வடைவீர்கள். ஆனால் பொறுமை மிக அவசியம். கவனக்குறைவு அலட்சியம் உங்களிடத்தில் இருந்தால் அதை எப்படி நீக்கி தொழிலில் முன்னேற்றம் அடைவது என்பதை நீங்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 

எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கப்பெறும்.  

திருமண வயதைத் தொட்டவர்களுக்கு இப்போதே திருமண ஏற்பாடு செய்வது நல்லது. இருந்தாலும் மணம் செய்பவர்களின் கருத்துக்களைக் கேட்டு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். பெரியவர்களின் தலையாயக் கடமை என்பது தங்கள் பிள்ளைகளின் உண்மையான ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே. அதனை மீற வேண்டாம். முக்கியமாக துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் விரைவில் கைக்கூடும். 

நிதி பிரச்னைகள், உடல் நல பிரச்னைகள் தீரும். ஆனால் கவனமுடன் செயல்பட்டு அவ்வப்போது உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். 

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!Representative Image

தனுசு

பதவி உயர்வு, நீங்கள் விரும்பிய பதவி, விருப்பமான இடமாற்றம், நல்ல நிறுவனங்களில் வேலை மற்றும் சலுகைகள் என தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். 

காதல் திருமணத்தில் மிகப் பெரிய குழப்பங்கள் இதுவரை நடந்து வந்திருக்கும். இனி அதைப் பற்றி கவலை கொள்ளாமல் கரியரில் கவனம் செலுத்துங்கள். திருமணம் ஆகவில்லை என்றாலோ காதலிக்கிறீர்கள் என்றாலோ கவலை இல்லை உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் சனிபகவான் தீர்க்கப்போகிறார். 

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!Representative Image

மகரம்

ஆசைகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையும். சனி பகவானின் அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நினைத்தவற்றை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டது. ஏற்கனவே சில விசயங்களைத் தொடங்கி இருப்பீர்கள். 

சிலருக்கு வாகனம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும். லோன் மூலம் வாங்கி பணத்தை விரயம் செய்யவேண்டாம். ஆனால் தொழிலில் முதலீடாக வாகனத்தை வாங்குவது நல்ல ஏற்பாடாகவே இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்