Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தனுசு ராசிக்கு எந்த  ராசியில் காதலர் அமைந்தால் நல்லா இருக்கும்...? | Dhanusu Love Horoscope

Manoj Krishnamoorthi Updated:
தனுசு ராசிக்கு எந்த  ராசியில் காதலர் அமைந்தால் நல்லா இருக்கும்...? | Dhanusu Love HoroscopeRepresentative Image.

குறிக்கோளுடன் எப்போது அயராது உழைக்கும் தனுசு ராசிக்காரர்களே எப்போதுமே மற்ற ராசிகளுக்கு நட்பாக தான் இருப்பர். நெருப்பு ராசியாக இருந்தாலும் இவர்களின் தன்மையான நடத்தை சில ராசியினரை எளிதில் கவர்ந்து விடும். ஆனால் தனுசு ராசி நெருப்பு ராசி என்பதால் காதல் பொருத்தம் கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும், விடாமுயற்சி குணம் கொண்ட தனுசு ராசியினர் காதல் உறவில் எப்போதுமே உறுதியாக இருப்பர். 

இவர்களுக்கு சரியான ஜோடி அமைவதில் தான் தாமதம் ஏற்படுமே தவிர வாழ்வை சூதானமாக நகர்த்தும் பக்குவம் இருக்கும். இதோ பதிவில் தனுசு ராசிக்கு பொருந்தும் ராசிகள் யாதென்ன என்பதை கீழே காண்போம்.

தனுசு ராசிக்கு எந்த  ராசியில் காதலர் அமைந்தால் நல்லா இருக்கும்...? | Dhanusu Love HoroscopeRepresentative Image

தனுசு ராசி காதல் பொருத்தம்

மேஷம்

குறிக்கோள் உடன் போராடு தனுசு ராசி மேஷ ராசியை எளிதில் கவர்ந்துவிடும். இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் நல்ல ஜோடியாக இருக்கும். இவர்களின் ஜோடி பெரும்பாலும் ஒரே மாதிரியான சிந்தனையில் முன்னேற்றத்தை நோக்கி செல்லும். பெரும்பாலும் இவர்களின் இருக்கும் பிரச்சனை யாரின் கை ஓங்கி இருப்பது என்பது தான். 

மிதுனம்

புத்திசாலி தனமாக நடக்கும் மிதுன ராசிக்காரர் மற்றும் தனுசு ராசிக்காரர் நல்ல ஜோடியாக இருக்க முடியும்.  இவர்கள் உறவில் ஓரளவு நட்பு நிலவும். ஆனால் மிதுனத்தின் வேகம் பழகும் தன்மை தனுசு ராசியிடம் குறைவாக இருப்பதால் இந்த இரண்டு ராசியும் ஜோடியாக மாறுவது பெரும்பாலும் அரிது. ஆனால் இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை உதித்தாலும் ஒற்றுமை இருந்து கொண்டே இருக்கும். 

சிம்மம்

சிம்ம ராசி தான் தனுசு ராசிக்கு சிறந்த காதல் ஜோடி என்றே கூறலாம். இரண்டுமே  நெருப்பு ராசியாக இருந்தாலும் சிம்மம் உறவில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும். தனுசு அறிவுரை குணமும் சிம்மத்தின் தலைமை பண்பும் உறவில் நல்ல வளர்ச்சியாக இருக்கும்.  சிம்மத்தின் அக்கறை குணம் தனுசு ராசிக்கு விருப்பமானதாக இருக்கும். 

துலாம்

துலாம் ராசியின் வசீகர நடத்தையும் யதார்த்த பேச்சு தனுசு ராசிக்கு  ஈர்ப்பு அளிக்கும்.சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியின் ரொமான்டிக்  குணம் தனுசு ராசியைக் காதலில் ஆழ்த்தும். அமைதியான வாழ்வை வாழும் பொருத்தம் இந்த ஜோடிக்கு இருக்கும். 

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்