Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கும்ப ராசியின் அன்புக்கு இந்த 4  ராசியில் பிறந்தவர்கள் அடிமை.....! 

Manoj Krishnamoorthi Updated:
கும்ப ராசியின் அன்புக்கு இந்த 4  ராசியில் பிறந்தவர்கள் அடிமை.....! Representative Image.

சிறந்த திறமைசாலிகளாக விளங்கும் கும்ப ராசி இயல்பாகவே குடும்பத்தின் மீது பற்று கொண்டது. அதுவும் தன்னை நாடியவர்கள்  மீது அதிகமான பாசம் காட்டும் ராசியான கும்பத்தின் காதல் ஆழமானது ஆகும். பிடிவாத குணமும் சாதுரிய  பேச்சும் இவர்களின் பிறப்பு சொத்து ஆகும். எனவே கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசி பொருத்தமானது என்பதை காண்போம். 

கும்ப ராசியின் அன்புக்கு இந்த 4  ராசியில் பிறந்தவர்கள் அடிமை.....! Representative Image

கும்பம்  ராசி காதல் பொருத்தம் (Kumbam Best Match Rasi)

1. மேஷம்

கும்ப ராசிக்காரருக்கு இயல்பாகவே மேஷ ராசியின் மீது ஈர்ப்பு இருக்கும். இவ்விரண்டு ராசிக்காரருக்கு இடையில் ஒருவித நட்பு இருக்கும். இந்த உறவில் நல்ல புரிதல் இருக்கும்.  ஆனால் மேஷத்தின் அவசரமும் கும்பத்தின் விடாப்பிடி குணத்தால் உறவில் யாரின் கை ஓங்கி இருக்கும் என்பதில் போட்டி இருக்கும். 

2. மிதுனம்

மிதுன ராசிக்காரரின் கலகலப்பான குணமும் அறிவுப்பூர்வமான பேச்சு  கும்ப ராசியை ஈர்க்கும்.  கும்ப ராசியின் சிந்தனை திறனுக்கு மிதுனம் காட்டும் அக்கரை இந்த இரண்டு ராசிக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்தும். கும்பத்திற்கு இருக்கும் அக்கறை சில சமயம் மிதுனத்திடம் கை நழுவினாலும் உறவில் பாதிப்பு உண்டாகாது. 

3. சிம்மம்

கும்ப ராசிக்கு ஏழாவது வீடானான சிம்ம ராசிக்காரர்கள்  சிறந்த ஜோடி ஆகும்.  அயராது போராடும் குணம் கொண்ட சிம்மத்தின் தன்னம்பிக்கை கும்பத்தை ஈர்க்கும். உறவில் அக்கறை அதிகம் காட்டும் சிம்மத்தின் கை தான் உறவில் ஓங்கி இருக்கும். சாதுரியமாக சிந்திக்கும் கும்ப ராசியின் அன்பில் சிம்ம ராசிக்காரர் எளிதில் விழுந்து விடுவர். 

4. விருச்சிகம்

கும்ப ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும்.  ஆனால் விருச்சிக ராசியின் ஆளுமை குணத்தால் சில சமயம் உறவில் பிளவு உண்டாகும். சிந்தனையில் ஒரு மாதிரி இருக்கும் இவ்விரு ராசிகளுக்கு இடையில் ஊடல் வந்தாலும் காதல் இருக்கும். 

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்