Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image.

சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசியாகும். தற்போது மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நீதிகாரகனான சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, வருகின்ற 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார்.

இருப்பினும், சனிப்பெயர்ச்சியானது சில ராசிக்கு ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி போன்றவற்றை ஏற்படுத்தும் அதேப்போல் சில ராசிக்கு ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி விலகும். அந்தவகையில், இந்த பெயர்ச்சியின் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக 9ஆம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். அதேபோல், கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக பயணம் செய்கிறார். இத்தகைய மாற்றத்தினால் கடக, மிதுன ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம். 

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image

கடகம்:

சந்திர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியினரே உங்க ராசிக்கு 8 ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனிபகவானால் உங்களுக்கு அஷ்டமத்து சனி காலம் ஆரம்பமாகிறது. இருப்பினும், அஷ்டமத்து சனியால் கவலை கொள்ள தேவையில்லை. 8ஆம் வீட்டில் அமரும் சனி பகவான் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image

ஒருபக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் சில இன்னல்களை கொடுப்பார். எனவே, வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை காணப்படும். பிறரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும். சிலருக்கு உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகவும் வாய்ப்புண்டு. மேலும், சனி பகவானின் பார்வை உங்க ராசிக்கு 10, 2, 5 ஆம் வீட்டின் மீது விழுவதால், திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image

எந்த காரியத்தையும் நிதானத்துடன் கையாள வேண்டும். எடுத்தேன் கவுத்தேன் என்று இருந்தால் பிரச்சனை உங்களுக்கே. அதேபோல், இரவு நேர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். குறிப்பாக, ஜூன் முதல் நவம்பர் வரை ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் கொடுக்கல், வாங்கலை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பொருளாதார ரீதியாக சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image

மிதுனம்:

கடந்த 5 ஆண்டுகளாக கண்டச்சனியாகவும், அஷ்டமத்து சனியாகவும் நிறைய கஷ்டங்களை கொடுத்து வந்த சனிபகவான், தற்போது உங்கள் ராசிக்கு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமர்வதால் 2023 ஆம் ஆண்டின் முதலே பல அற்புதமான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். அதுமட்டுமல்லாமல், 9 வது வீடு ஆன்மீகத்திற்கான இடம் என்பதால், அதிக ஆலய தரிசனம் செய்வீர்கள். மேலும், சனிபகவானின் பார்வை உங்க ராசியின் லாப ஸ்தானம், முயற்சி ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுவதால், புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடிக் கொடுக்கும். 

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image

பணியிடத்தில் வேலை அதிகம் இருந்தாலும் அதை சாமர்த்தியமாக திட்டமிட்டு முடித்துக் காட்டுவீர்கள். நினைத்த காரியம் அனைத்தும் தடையின்றி விரைவில் ஈடேறும். மூத்த சகோதர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாணவர்களுக்கு அற்புதமான காலக் கட்டம். மந்தமாக இருந்த மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் மிகுந்து காணப்படும். உறவினர்களின் உதவியும் அன்பும் தேடி வரும். இருப்பினும், ஜூன் மாதத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, வாகனத்தில் செல்லும் போது ரொம்பவே கவனம் தேவை. வேலை செய்யும் இடத்திலும் பொறுமையான அணுகுமுறை வேண்டும். 

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in TamilRepresentative Image

அதேபோல், மார்ச் முதல் ஜூன் வரை வியாபாரத்தில் செய்யப்படும் முதலீடுகளால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதுவே ஜூன் முதல் நவம்பர் வரை அப்படியே எதிர்மறையாக இருக்கும். எனவே, இந்த காலக்கட்டத்தில் பெரிய முதலீடு வேண்டாம். இந்த காலக்கட்டத்தில் கண் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து காணப்படும். எச்சரிக்கையோடு இருங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்