Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லட்சுமி நாராயண தோஷம்.. மிகுந்த சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள்.. உஷார்!

Nandhinipriya Ganeshan Updated:
லட்சுமி நாராயண தோஷம்.. மிகுந்த சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள்.. உஷார்! Representative Image.

ஒவ்வொரு கிரங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி நிகழும் கிரக மாற்றங்களால் 12 ராசிகளிலுமே அதன் தாக்கமானது இருக்கும். இதனால், சிலருக்கு சுப யோகமும் சிலருக்கு அசுப பலன்களும் ஏற்படும். அந்தவகையில், வருகின்ற டிசம்பர் 28 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லவிருக்கிறார். அதைத் தொடர்ந்து சுக்கிரனும் டிசம்பர் 29 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். இதனால் டிசம்பர் 29 அன்று மகர ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த புதன்-சுக்கிரனின் சஞ்சாரம் மகர ராசியில் லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறது, இது மிகவும் மங்களகரமானது.

லட்சுமி நாராயண தோஷம்.. மிகுந்த சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள்.. உஷார்! Representative Image

பொதுவாக, கிரகச் சேர்க்கைகள் நற்பலன்களை வழங்கினால் அதை 'யோகம்' என்று என்பார்கள். அதுவே அசுப பலன்களை வழங்கினால் அதை 'தோஷம்' என்பார்கள். ஆனால், இந்த லட்சுமி நாராயண யோகத்தால் சில ராசியினருக்கு அசுப பலன்கள் கிடைக்கவுள்ளது. நல்ல பலன்களை காட்டிலும் கெடுபலன்களை தெரிந்துக்கொண்டால், கொஞ்சம் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க முடியும். அந்தவகையில், இந்த லட்சுமி நாராயண யோகத்தால் எந்தெந்த ராசிகள் சிரமங்களை சந்திக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம்.

லட்சுமி நாராயண தோஷம்.. மிகுந்த சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள்.. உஷார்! Representative Image

ரிஷபம்:

புதன், சுக்கரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண தோஷத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்படும்.  பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பணிகளில் தடையும் முட்டுக்கட்டையும் ஏற்படலாம். குறிப்பாக, வெளிநாட்டில் வசித்து பணிபுரிபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் குறையும். 

லட்சுமி நாராயண தோஷம்.. மிகுந்த சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள்.. உஷார்! Representative Image

கடகம்:

டிசம்பரில் நிகழும் புதன்-சுக்கரன் சஞ்சாரத்தால், கடக ராசிக்கார்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக, பண விஷயத்தில் ரொம்ப அடிவாங்குவார்கள். எதிர்பாராத தொடர் செலவுகளால் சேமிப்பு என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. குறிப்பாக, கூட்டுத்தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும். 

லட்சுமி நாராயண தோஷம்.. மிகுந்த சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள்.. உஷார்! Representative Image

தனுசு:

புதன் - சுக்கரன் சஞ்சாரமானது தனுசு ராசியின் 2ஆவது வீட்டில் உருவாவதால் திடீர் செலவுகளை சந்திப்பார்கள். லட்சுமியின் அருள் தனுசு ராசிக்காரர்களுக்கு இருப்பதால், வருமானம் அதிகரிக்கும். இருப்பினும், செலவுகளும் அதைவிட அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வை எதிர்ப்பார்த்திருந்து காத்திருந்தால், அது கிடைக்காது. குறிப்பாக, வியாபாரிகள் இந்த சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். இல்லாவிட்டால், பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். 

[பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்