Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a Vehicle

Gowthami Subramani Updated:
2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image.

புதிய வாகனம் வாங்க வேண்டும், புதிய வீடு கட்ட வேண்டும், தொழில் அமோகமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமாகவும், கனவாகவும் இருந்து வருகிறது. இன்று நடக்குமா? நாளை நடக்குமா? என ஏங்கி, இது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மிகுந்த கஷ்டத்தில் இருப்பர். ஆனால் இது ஒவ்வொரு ராசிக்காரர்களின் கிரக நிலையைப் பொறுத்து அமையக் கூடியதாகவும் அமையும்.

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image

யோகம் இருந்தால் மட்டுமே

உங்கள் கனவை நனைவாக்க எத்தனையோ துன்பங்களை அனுபவித்து வந்திருப்பர். ஆனால், அதற்கான யோகம் இருந்தால் மட்டுமே கனவு நனவாகும் எனக் கூறப்படுகிறது. இது நமக்கு வெற்றி, முன்னேற்றத்தைத் தருபவையாக அமையும். அந்த வகையில், இதுவரை உங்களது கனவு நனவாகும் என நினைத்திருந்தவர்களுக்கு, இந்த ஆண்டில் நடக்குமா என்பதைப் பார்க்கலாம். இந்த 2023 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களின் வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் கிடைக்கப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image

சிம்மம்

சூரிய பகவான் ஆளக்கூடிய ராசிக்காரரான சிம்ம ராசிக்காரர்கள், புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருப்பின், இந்த 2023 ஆம் ஆண்டு சிறப்பான காலமாக அமைகிறது. ஏனெனில், இந்த ஆண்டில் புதிய வாகனம் வாங்குவதற்கான அனைத்து யோகமும் உங்களுக்கு உள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் செவ்வாய் கிரகமும், அதன் பார்வையான நேரடியாக 5 ஆம் வீட்டில் விழுவதால், உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகிறது.

அதிலும், ஏப்ரல் முதல் மே வரை மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை நீங்கள் வாகனம் வாங்குவதற்கான சிறந்த காலங்கள். நீங்கள் வாங்கக்கூடிய வாகனம் சிறியது அல்லது பெரியது எதுவாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். வாகனம் வாங்குவது உங்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக அமைகிறது.

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image

கும்பம்

இந்த 2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக அமைகிறது. இந்த ஆண்டு உங்களின் பல கனவுகள் நிறைவேறும் காலமாக அமையக்கூடும். அந்த வகையில், நீங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டிருப்பின், அந்த கனவும் நினைவாகும் காலமாக உள்ளது. இதில் ஏப்ரல் 6 ஆம் நாள் முதல் மே 2 ஆம் தேதி வரை வாகனம், வாங்குவதற்கான அதிர்ஷ்டமான மற்றும் மங்களகரமான காலமாக அமையும். இந்த காலத்தில், நீங்கள் வாகனம் வாங்கினால், உங்களது வாழ்க்கை அழகாக அமையும்.

அதிலும் ஜூன் மாதம் வாகனம் வாங்க மிகவும் பொருத்தமான காலமாக அமைகிறது. இதைத் தவிர, இந்த 2023 ஆண்டின் இறுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வாங்குவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாக அமையும்.

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image

மேஷம்

ராசிகளில் முதல் ராசியாக விளங்கும் மேஷ ராசி நேயர்கள் இந்த ஆண்டு பல விதமான நன்மைகளைப் பெற உள்ளது. அதன் படி, 2023 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த ஜோதிட கணிப்பின் படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி, சனி பகவான் உங்களது 11 ஆம் வீட்டிற்கு மாறுகிறார். ஏப்ரல் 22 ஆம் நாள், வியாழன் உங்கள் ராசிக்கு நுழைகிறார். எனவே, இந்த காலம் உங்களுக்கு வாகனம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

மே மாதம் சுக்ரனின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். அது மட்டுமல்லாமல், மற்ற பிற கிரகங்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு இருப்பதால், நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும் தரும்.

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image

மகரம்

இந்த 2023 ஆம் ஆண்டில், வண்டி வாகனம் வாங்கக்கூடிய அதிர்ஷ்ட ராசிகளில் மகர ராசிக்காரர்களும் ஒருவர். இந்த ஆண்டில் புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அது இந்த ஆண்டில் சுலபமாக முடியும். அதிலும், நீங்கள் வாகனம் வாங்குவதற்கான சிறந்த காலமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் சிறந்தது. இந்த காலங்களில் வாகனம் வாங்கினால், உங்களுக்கு அது செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும்.

இருப்பினும், இந்த ஏப்ரல், மே மாதங்களில் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்க நினைத்தால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். மேலும், இந்த காலகட்டத்தில் வாகனம் வாங்க முடியாமல் போகாவிட்டாலும் கவலை வேண்டாம். இந்த ஆண்டின் கடைசி மாதங்களான நவம்பர், டிசம்பர் மாதத்திலும் நீங்கள் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமைகிறது.

2023-ல் வண்டி, வாகன யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உள்ளது! | Good Time to Buy a VehicleRepresentative Image

ரிஷபம்

இந்த 2023 ஆம் ஆண்டில் வாகனம் வாங்கக்கூடிய அதிர்ஷ்டம் உள்ள ராசிகளில் ரிஷப ராசிக்காரர்களும் ஒருவர். அந்த வகையில், உங்கள் கனவு நினைவாக இந்த ஆண்டு சாதகமாக அமைகிறது. இதனால், உங்கள் வாழ்க்கை செழிப்பாகவும், லாபகரமாகவும் அமைகிறது.

உங்கள் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் வாகனத்தின் காரணியாக இருப்பதால், உங்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும். இதனால், உங்கள் ஜாதகத்தில் சந்திர பகவானின் புண்ணிய நிலை உங்களை செழிப்பாகவும், மங்களகரமாகவும் மாற்றுகிறது. அதிலும், குறிப்பாக, மே முதல் ஜூலை மாதம் வரையிலான காலம் உங்களுக்குச் சிறப்பாக அமைகிறது. மேலும், ரிஷப ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வாகனம் வாங்கும் போதும், ஓட்டும் போதும் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்