Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 6 ஆம் நாள் புதன்கிழமை  [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - ஏமாற்றம்

விருச்சிகம் - சிரமம்

தனுசு - இன்பம் 

மகரம் - உயர்வு

கும்பம் - சிறப்பு

மீனம் - எச்சரிக்கை

நல்ல நேரம்:

காலை: 09.00 - 10.00 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [21.12.2022]

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

எஸ்டேட் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில விஷயத்தில் அடுத்தவர் பேச்சை கேட்பதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சில ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். சகஊழியர்களிடம் கவனமாக நடந்துக் கொள்வது நல்லது. வேறு கோபத்தை துணையுடம் காட்டுவீர்கள். அது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.  பண வரவுகள் காணப்பட்டாலும் செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. கவனத்தோடு இருங்க. துணையுடன் பேசும் போது அகந்தை பேச்சை தவிர்ப்பது நல்லது. நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவுகளை சந்திக்க நேரும். உறவினர்களிடம் மகிழ்ச்சிகரமான செய்து தேடி வரும். உங்களுக்கு சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உடன் பணிபுரிவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5
 

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

உங்களுக்கு பிடித்தமான வேலை வாய்ப்புகள் உங்களை தேடிவரும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள். கனவில் கண்ட ஒருவரை நேரில் சந்திக்கலாம். தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்துவந்த பிரச்சனை குறையும். பணியிடத்தில் சகபணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி உங்கள் பக்கம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

சில விஷயங்களில் விளையாட்டுத்தனமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற செலவுகளால் கவலை ஏற்படும். வியாபாரமும் மந்தமாக தான் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை வந்துபோகும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்.. இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்.. 21.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

எந்த காரியத்தை செய்யும்போதும் உங்க மனம் சொல்வதை கேளுங்க. மனதில் தேவையற்ற குழப்பம் போட்டு வாட்டி வதைக்கும். வார்த்தையில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடச்சூழல் சாதகமாக இருக்காது. அனைவரிடமும் அனுசரித்து செல்லவும். குறிப்பாக, உயர் அதிகாரிகளிடம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு எழ வாய்ப்புள்ளது. மனம் திறந்து பேசுவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். இல்லையெனில், உங்களுக்கு தான் சிக்கல். எச்சரிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்