Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023

Gowthami Subramani Updated:
இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023Representative Image.

புது வருடப் பிறப்பு, சனி, குரு, ராகு, கேது என கிரகங்களின் பெயர்ச்சிப் பலன்கள் ராசிக்காரர்களுடைய நேரத்தை மாற்றக் கூடியவயாக அமைகின்றன, இந்த சனி, ராகு, கேது, குரு நீண்ட காலம் ஒரு ராசியில் சஞ்சரித்து பல்வேஏஉ பலன்களைத் தருவர். இவை அனைத்தும் அவரவர்களின் கர்ம வினைக்கேற்ற பலன்களைத் தரக்கூடியவையாக அமையும். அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 17 ஆம் தேதியே சனி பகவானின் பெயர்ச்சி நடக்க உள்ளது.

ஜனவரி 17, 2023 ஆம் நாளில் சனிப்பெயர்ச்சியும், ஏப்ரல் 22, 2023 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியும், அக்டோபர் 30, 2023 ஆம் நாள் ராகு கேது பெயர்ச்சியும் நடக்க உள்ளது. இந்த ஆண்டில் நிகழ உள்ள கிரக மாற்றங்கள் மற்ற கிரக நிலைகளின் சுப நிலை, சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதத்தில் மேன்மை தரக்கூடிய பலன்களைத் தர உள்ளது.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023Representative Image

புத்தாண்டு பலன்கள் 2023

புது வருடப்பிறப்பான 2023 ஆம் ஆண்டில் கிரக நிலையின் அடிப்படையில், சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு நல்ல வாய்ப்புகளும், லாபம் மற்றும் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். அதன் படி, இந்த ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேறப் போகிறார்கள் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023Representative Image

தனுசு

புதுவருடமான 2023 ஆம் ஆண்டில், தனுசு ராசிக்கு நடக்க உள்ள பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், ஏழரை சனியிலிருந்து விடுபடுவதாகும். இதனால், இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு, நிதிநிலையில் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் கிடைக்க உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிம்மதியாகப் பெருமூச்சு விடுவது போல் தோன்றும். தொழிலில் முன்னேற்றமடைவதுடன், செல்வம் பெருகும்.

மேலும், இந்த ஆண்டு வீடு, நிலம் வாங்குவதற்கான சாதகமான காலமாகும். ஒரு வழி அல்ல. பல்வேறு வழிகளிலிருந்து, வருமானத்தை ஈட்டுபவர்களாக தனுசு ராசிக்காரர்கள் இருக்கின்றனர். மேலும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன் மகிழ்ச்சி உண்டாகும். இத்துடன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், இந்த வருடம் நிறைவேறக்கூடிய ஆண்டாக அமைகிறது.

இவ்வாறு ஜனவரி மாதம் முதலே, மேலே கூறப்பட்ட ராசிக்காரர்கள் பல்வேறு சிறப்பான பலன்களைப் பெறுவர்.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023Representative Image

மிதுனம்

இந்த 2023 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு நடந்து வந்த அஷ்டமி சனி விலகுவது தான் பெரும் சிறப்பு. இதனால், புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், கடன் தொல்லைகளிலிருந்தும் விடுபடுவர். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க முயற்சிப்பவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைகிறது.

அதிலும், நடைபெற இருக்கக் கூடிய குரு பெயர்ச்சியில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வரும் காலம் சாதகமாக அமையக் கூடியதாக விளங்குகிறது. கடின உழைப்பு, தகுதி, கடந்த கால முதலீடுகளின் மூலம் மிதுன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடைவார்கள். இதுவரை இருந்த திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். மேலும், வேலை வகையில், நல்ல இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றியை ஈட்டுவீர்கள். மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே, கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலமாக அமையும். இருப்பினும், இதுவரை இருந்த பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் காண்பீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023Representative Image

மேஷம்

இந்த 2023 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைகிறது. ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உடையவராக விளங்குவீர்கள். இத்துடன், ஆன்மீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

திருமண முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு அதிகம் ஆகும். ஏனெனில், மேஷ ராசியில் குரு அமர்ந்து 7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தைப் பார்க்க உள்ளார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதுடன், உங்கள் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழில், வியாபாரம் போன்றவற்றை உங்களின் துணை அல்லது கூட்டாளிகளுடன் தொடங்க திட்டமிட்டிருப்பின், அதில் உங்களுக்கான ஒருங்கிணைப்பு அருமையாக இருக்கும். மேலும் நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாகும் பாக்கியம் கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிப்பதுடன், அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் அதிர்ஷ்டமான லக்கு தான்! | Career Horoscope 2023Representative Image

துலாம்

இந்த 2023 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்கள், பல்வேறு வழிகளின் மூலம் மகிழ்ச்சியையும், ஆதாரத்தையும் பெற உள்ளீர். அதன் படி, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நினைவில் நினைத்து வைத்திருக்கும் அளவிலான சில அற்புத விஷயங்கள் நடக்கும். மேலும், தொழில் முன்னேற்றம் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது.

மேலும், நிதி விஷயங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். இதில், நீங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான மாதமாக அமைகிறது.

வேலை கல்வி குறித்து பார்க்கையில், நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலை குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. வீட்டில் இன்பம், பொருள் என அனைத்தும் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்