Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 6 ஆம் நாள் புதன்கிழமை  [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - முயற்சி

ரிஷபம் - தைரியம்

மிதுனம் - கவலை

கடகம் - சிக்கல்

சிம்மம் - சுபம்

கன்னி - கவனம்

நல்ல நேரம்:

காலை: 09.00 - 10.00 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

எதிலும் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல, முயற்சி செய்வதே முக்கியமானது. அதன்படி, தோற்றுவிடுவோமோ என்று எண்ணாமல் எதிலும் துணிந்து இறங்குங்கள். அதுவே உங்களின் வெற்றி. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி உங்க பக்கம் தான். உங்க குடும்ப விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

முன்னேற்றகரமான நாளாக இருக்கும். எந்த காரியத்திலும் தைரியமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள். பணியிடத்தில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் புதிய யுக்தியை கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். வங்கி கணக்கில் சேமிப்பு உயரும். பாடாய் படுத்திய கடன் தொல்லையில் இருந்து விடிவுகாலம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தைரியம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

பதட்டமும் கவலையும் காணப்படும். எந்த செயலிலும் புத்தியை பயன்படுத்தி செயலாற்றுவது அனுகூலப் பலன்களை பெற்று தரும். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். சில விஷயங்களை உங்க துணையுடன் பகிர்ந்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பங்கு வர்த்தகம் மூலம் பணவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இருப்பினும் செலவும் அதிகரிக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் சுமாராக தான் இருக்கும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் வரக்கூடும். உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த முயற்சி நிறைவேறும் நாள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்க்கவும். சிக்கல்! 

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

புதிய முயற்சிகள் வெற்றிகளை தேடி கொடுக்கும். எந்த காரியத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ரொம்ப நாட்களாக இழுபறியாக இருந்த கடன் கைக்கு வரும். சிலருக்கு தாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இதனால், சுபசெலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்களுடன் வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சேமிப்பு உயரும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.. 21.12.2022  ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

மனதில் நினைத்தது நிறைவேறும் நாள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மந்தமாக இருந்த வியாபாரம் சூடு பிடிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். அதேபோல், கடன் வாங்குவதையும் தவிர்க்கவும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளவும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. விபத்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதால், பயணத்தின் போதும் வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக செல்லவும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [21.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்