Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!

Vaishnavi Subramani Updated:
2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image.

2023 புத்தாண்டில்  ஒன்றரை ஆண்டுக் காலம் ஒரே ராசியில் சஞ்சாரம் செய்து 12 ராசிகளும்  நன்மை மற்றும் தீமைப் பலன்களைத் தரக்கூடிய நிழல் கிரகங்கள்  ராகு - கேது  பெயர்ச்சி 2023ல் மோசமான விளைவுகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர்களையும்  மற்றும் சிறப்புப்  பலன்களைப்  பெறப்போகும் ராசிக்காரர்களையும்  பற்றி இந்த பதிவில் காணலாம்.

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image

ராகு கேது பெயர்ச்சி

ஒரே ராசியில் ஒன்றரை ஆண்டுக் காலம்  சஞ்சரித்து பலன் தரக்கூடிய நிழல் கிரகங்கள் ராகு - கேது.ராகு என்பவர்  பொன் செல்வத்தை அள்ளித்தருவார். கேது என்பவர் தீமை பலன் தருபவர். அதன் அடிப்படையில்  திருக்கணித பஞ்சாங்கத்தின்படி  2022 ஏப்ரல் மாதத்தில் 12 ம் தேதி  அன்று ராகு மேஷத்திலும், கேது துலாம் ராசியிலும் பெயர்ச்சி அடைந்து நன்மை மற்றும் தீமை பலன்களைத் தந்துள்ளார்.

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image

ராகு கேது பெயர்ச்சி 2023 தேதி

வருகின்ற புத்தாண்டில் அக்டோபர் 30ம் தேதி  அன்று ராகு-கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு ராகு மேஷ ராசியிலும் மற்றும்  கேது துலாம் ராசியிலும்  பல மாதங்கள்  அமர்ந்து 12  ராசிக்கும் பல சிறப்பான பலன்களை அளிப்பார்கள்.

பொதுப்பலன்களில் ராகு என்பவர்  மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய 5 ராசிகளில்  சஞ்சாரம் செய்யும் பொது நன்மை பலன்களை அளிப்பார் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. 2023 புத்தாண்டில் நடக்க உள்ள  ராகு கேது பெயர்ச்சியில் ராகு  மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைவார். இதனால் சில ராசிக்காரர்களுக்குத் தீமைப் பலன்கள் நடக்க வாய்ப்புள்ளது  என ஜோதிட அடிப்படையில்  கூறப்படுகிறது.

2023 புத்தாண்டில் சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image

​மகரம்

 சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் 4ல் ராகு, 10ல் கேது அமர்ந்துள்ளனர். அதனால் தொழில் மற்றும்  வேலை விஷயங்களில்  அதிக கவனம் தேவை. பயணத்தால் அலைச்சல் மற்றும்  கஷ்டம் ஏற்பட வாய்ப்பு  மற்றும்  நல்ல வேலை அனுபவங்கள் கிடைப்பதன் மூலம் உங்கள் வேலை முன்னேற்றத்திற்குப் பயன் உள்ளதாக அமையும். வேலை சார்ந்த விஷயங்களில்  கடும் உழைப்பு தேவை.

நிதி நிலை தொடர்பான விஷயங்களில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்புக்கள் குறையும். பணம் கிடைப்பதில் தடை ஏற்படும்.

அக்டோபர் மாதத்தில் நடக்க  உள்ள ராகு- கேதுபெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு மிகவும்  நல்ல பலன்கள் நடக்க உள்ளது.

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image

சிம்மம்

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே!  உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சியால்  ராகு பகவன் 9ல் மற்றும் கேது பகவன் 3 ல் உள்ளதால்  நன்மை மற்றும் தீயைப் பலன் சரிபாதியாக நடக்க உள்ளது.

குறிப்பாக, தந்தை ஸ்தானத்தில் ராகு அமர்வதால் தந்தை உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தை வழி சார்ந்த உறவுகளால் பாதிப்பு உள்ளது.

கேது பகவன் 3ல் உள்ளதால் வேலையில் அலைச்சல் மற்றும் பணிச்சுமை அதிகரிக்கும். நியாமான தீர்ப்பு கிடைக்கும். பல  பிரச்சினைகளின் மூலம் கேது பகவான் உங்களுக்கு அனுபவத்தைத் தருவார்.

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image

மிதுனம்

இந்த ஆண்டில் மிதுன  ராசிக்காரர்களுக்கு 11ஆம் இடத்தில் ராகுவும் மற்றும் 5ஆம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் நன்மை மற்றும் கெடுப் பலன்கள் கலந்த ஆண்டாக அமையும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. துரித உணவுகள் மற்றும் வெளி உணவு பழக்கங்கள் உடல் நலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

நிதி நிலை உயர்வைத் தரும். ஆனால் திடீர் செலவுகள் பெரியதாக கஷ்டங்களைத் தரும். எனவே, கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக செலவை செய்யாமல் செலவை குறைத்து சேமிப்பு அவசியம்.

2023 ராகு கேது பெயர்ச்சியால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்.!Representative Image

​மேஷம்

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களே!.. உங்களுக்கு  இந்த ராகு கேது பெயர்ச்சியால்  ராகு பகவான் உங்கள் ராசியில் அமர்வதால் மந்த நிலை மற்றும் கேது 7 ஆம் இடத்தில் உள்ளதால் சிறு நன்மைகள் உள்ளது.

புது தொழில் மற்றும் கூட்டாளி மூலம் நல்ல லாபம் பெறலாம் ஏன நினைத்து பெரிய முதலீடுகள் செய் வேண்டாம். நன்கு ஆலோசித்த பிறகு சிறிய முதலீடு மேற்கொள்வது நன்மை உண்டாக்கும்.வாழ்க்கைத் துணை பேச்சை நம்பி  முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்