Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Today Lucky Rasi : இன்றைய தினத்தின் 4 அதிர்ஷ்டக்காரர்கள் யார்..?

Manoj Krishnamoorthi November 03, 2022 & 18:00 [IST]
Today Lucky Rasi : இன்றைய தினத்தின் 4 அதிர்ஷ்டக்காரர்கள் யார்..?Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (4.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் சில ராசிகள் நல்ல கோச்சார அடிப்படையில் நற்பலன்களை பெறுகிறது. இன்று 4.11.22 அன்று நிம்மதியாகவும் வாழ்வின் அடுத்த நிலைக்கு வளர்ச்சி கொள்ளும் அதிர்ஷ்டமான ராசிகள் எது என்று அறிய இந்த பதிவை பின்தொடரவும். 

Most Read: நவம்பர் 4 2022, வெள்ளிக்கிழமை தினத்தின் ராசிபலன்

Today Lucky Rasi : இன்றைய தினத்தின் 4 அதிர்ஷ்டக்காரர்கள் யார்..?Representative Image

இன்றைய அதிர்ஷ்ட ராசிகள் (Today Lucky Rasi)

நவம்பர் 4 அதிர்ஷ்ட ராசி

மிதுனம் 

இன்றைய தினம்  வேலையில் இருந்து சற்று ஓய்வு கிடைக்கும் நாளாக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது, தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். வாழ்க்கை துணையுடன் இனிமையாக பொழுது செல்லும். மாலை நேரம் இனிமையாக இருக்கும். சிகிச்சையில் இருந்த மிதுன ராசிக்காரருக்கு ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- மிதுனம்

கன்னி

உங்களுக்கு தொழில் சார்ந்த சிந்தனை தான் மனதில் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகள் செய்து  பார்க்க நம்பிக்கை துளிர்விடும். பணியிடத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். குடும்ப வாழ்வில் நட்பான சூழல் இருக்கும், வீட்டில் சகஜமாகப் பழகுவீர். சுற்றத்தாரிடம் நல்ல உரவு இருக்கும், உங்களுக்கு சில உதவியும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. 

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- கன்னி

மகரம் 

உங்களுக்கு இன்று சாதித்தது போன்ற நிம்மதி மனதில் உலவும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்கள் புகழ் அதிகமாகும், வாடிக்கையாளர் மத்தியில் உங்களின் வேலை மதிக்கப்படும். செல்வ நிலை நன்றாக உள்ளது. காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகமாகும், மகிழ்ச்சியான உரையாடல் இருக்கும். பயணம் செய்ய நினைப்பீர். ஆரோக்கியத்தில் எந்த இடையூறும் இல்லை, உற்சாகமாக செயல்பட முடியும்.

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- மகரம்

மீனம் 

உங்கள் செயலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும், அலுவலகத்தில் புதிய மாற்றம் உண்டாகும். பணியில் நல்ல வளர்ச்சி இருக்கும், வருமானம் உயரும். செல்வத்தை கையாளுவதில் திட்டமிடல் வேண்டும். குடும்ப உறுப்பினரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.  உரையாடல் மூலம் தீர்வு கிடைக்கும், கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் தோன்றும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பிரச்சனை அளிக்காது. 

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- மீனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்