Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை [08 ஜனவரி 2023] நாளுக்கான துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்: 

துலாம் - கஷ்டம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - கோபம்

மகரம் - புகழ்

கும்பம் - சாதனை

மீனம் - இன்பம்

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை 

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [08.01.2023]

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

எந்த செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது அனுகூலப் பலன்களை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். இருப்பினும், கூட்டுத்தொழில் செய்வோர் கூட்டாளியை அனுசரித்து செல்வது நல்லது. சமுதாயத்தில் மதிப்பு உயரும். வாழ்க்கை துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ஆற்றுவீர்கள். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும், வேலையில் கவனத்தோடு இருக்க வேண்டும். மனதில் ஏற்படும் மனகுழப்பத்தை துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். பெயர் தெரியாவதர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். அமைதியும் கட்டுபாடும் தேவைப்படும் நாள். எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் சகபணியாளர்களிடம் தேவையில்லாத பேச்சை குறைப்பது உத்தமம். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும், விட்டுக்கொடுத்து சென்றால் பெரிய பிரச்சனையை தவிர்க்கலாம். சளி சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறை இருமுறை படிப்பது நல்லது. கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

அனுகூலமான நாள். துணையுடன் மகிழ்ச்சிகரமான தருணங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். நிதிநிலை நன்றாக இருக்கும். சேமிப்பை தொடங்குவதற்கு உகந்த நாள். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தை சாதகமான பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை வேண்டும். அதேபோல், பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை ஜாக்கிரதை வைத்துக் கொள்ளவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெளீர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியம் நன்றாவே இருக்கும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.. 08.01.2023 ராசிபலன்!Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

அனைத்து வேலைகளையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் பிரச்சனை ஏற்படும். எனவே, அமைதியாக இருப்பது சிறப்பு. வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும். செலவுகள் அதிகரித்து காணப்படும். நினைத்த காரியம் நிறைவேற இழுத்தடிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பயணத்தின்போது கவனம் தேவைப்படும் நாள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்