Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: MAY 18, 2022 இன்று அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திளைக்கும் அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா!

Manoj Krishnamoorthi May 17, 2022 & 15:00 [IST]
Tomorrow Horoscope Tamil: MAY 18, 2022 இன்று அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் திளைக்கும் அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் அன்பான குணத்தால் இன்று உருவாகும் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவி கிடைக்கும், உங்கள் பேச்சால் எதிர்மறையான நிலை உருவாகும். தொழில் ஸ்தானம் இன்று அதிகப்படியான சிக்கல் இருக்கும், குடும்ப வாழ்க்கை இன்று  பொறுமை மிக அவசியமாகும். திருமண வாழ்க்கையில் இன்று பதட்டம் இருக்கும். பணப்புழக்கம் கையில் குறைவாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கும், உடல்நலம் குன்றும். கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் ரிஷப ராசிக்காரரே இன்று உங்கள் கடுமையான உழைப்புக்கும் திறமைக்கும் தக்க பலன் கிடைக்கும், அலுவலகத்தில் இன்று அங்கீகாரம் கிடைக்கும்.  குடும்ப வாழ்க்கையில் நிம்மதியான நிலை இருக்கும், அன்பு அதிகரிக்கும். பண வரவு இருக்கும் ஆனால் தேவையில்லாத செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது செல்வ நிலையை உயர்த்தும். உடல்நிலை நன்றாக உள்ளது. கல்வி ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

 

முழுவதும் படிக்க: இந்த வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின் நம்பிக்கையால் திக்கற்ற சூழ்நிலையிலும் தெளிவாக இருக்கும் உங்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும், சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் செல்வ நிலை உயரும். வீட்டில் அன்பாக இருப்பீர்கள் இன்று பெற்றோரின் மனதை சந்தோஷப்படுத்துவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும், திருமணமாகாத மிதுன ராசிக்காரருக்கு திருமணப் பேச்சு வார்த்தை உருவாகும். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. தெளிவு!  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

கலகலப்பான கடக ராசிக்காரரே இன்று உங்கள் உடல்நலத்தின் மீது அதிக கவனம் வேண்டும், உணவு பழக்கத்தால் உடல்நல கோளாறு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், பண இழப்பு நடக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறிய ஊடல் இருக்கும் ஆனால் குடும்பத்தின் ஓற்றுமைக்கு பாத்திப்பு இல்லை. மனம் அமைதியாக இருக்கும் ஆனால் சுறுசுறுப்பான உடல்நலம் இருக்காது. சாந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்கள் முன்கோபத்தால் இன்று பிறரின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள், மேலும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது இந்த நிலையைத் தவிர்க்கும். வேலையிடத்தில் இன்று கடினமான நிலை நிலவும், இருக்கும் சிக்கலை சரி செய்யவே நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். இன்று பண விசயத்தில் அதிகமான கவனம் அவசியமாகும், முக்கியமான பொருட்களை இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சிறிய குறை இருக்கும், சரியான ஓய்வு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இழப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

 

மேலும் படிக்க: வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

கன்னி (Virgo 2022 Horoscope)

அன்பான நடத்தை கொண்ட கன்னி ராசிக்காரரே இன்று உங்கள்  தொழில் ஸ்தானம் அருமையாக உள்ளது, அலுவலக்த்தில் உங்கள் மேலதிகாரி நிர்மாணித்த இலக்கை எளியதாக முடிப்பீர்கள். இன்று குடும்பத்தில் இன்பம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். செல்வ நிலை  நல்ல வளர்ச்சி கொள்ளும்.  புதிய தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மேலும், காதல் செய்யும் கன்னி இராசியினர் காதல் வாழ்க்கை திருமணமாகும் நிலை உருவாகும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி நிலையில் பிரச்சனை ஏதுமில்லை. ஆதாயம்!   

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

துலாம் (Libra 2022 Horoscope)

நிலையான நிம்மதியை எதிர்பார்க்கும் உங்களுக்கு இன்று  உருவாகும் அதிகமான செலவு நிம்மதி தராது, பண வரவு இருந்தாலும் கட்டுபடுத்த முடியாத செலவுகள் வரும். தொழிலில் இன்று அதிகமான சவால்களை சந்திப்பீர்கள், விடாமுயற்சி வெற்றி அளிக்கும். வியாபாரத்தில் நாணயமான பெயர் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.  உடல்நிலை சற்று சோர்வு கொள்ளும், ஓய்வு தேவைப்படும். செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை என்பது மனநிலையைப் பொருத்தத்து என்பதை உணர்த்தும் வகையில் வாழ்க்கை வாழும் விருச்சிக ராசிக்காரரே உங்கள் நீண்ட நால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும் வேளை உருவாகும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். பண வரவு ஓரளவு நன்றாக இருக்கும், செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தொழிலில் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கும். கல்வி நிலையில் கவனக் குறை ஏற்படும். உடல்நலத்தில் சிறிய கவனம் காட்டுங்கள். விருப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

அமைதியான குணத்தால் பிரச்சனையில்லாமல் வாழ முடியும் என்று அமைதியாக வாழும் தனுசு ராசிக்காரரே உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் கலவையான விமர்சனங்களைப் பெறும். வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் இயல்பான நிலை இருக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் இருப்பதால்  செல்வத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், அதிகமான உழைப்பு இன்று உடல்வலியைத் தரும். மாணவர்கள் சக மாணவர்களுடன் போட்டிப் போட்டு படிப்பர். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட மகர ராசிக்காரரே இன்றைய தினம் சுமூகமான நாளாக இருக்கும், தொழில் உங்கள் கை ஓங்கி இருக்கும். வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது, வெளி மாநிலத்தில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். குடும்பத்தினர் மீது அக்கறை அதிகமாகும். உடல்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம்!   

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

மன உறுதி அதிகம் கொண்ட கும்ப ராசிக்காரரே இன்று இலக்குகளை முடிக்க அதிகமான நேரம் எடுக்கும், இன்று அலுவலக வேலைகளை முடிப்பதில் உங்கள் சாமத்தியம் உதவும். கல்வி நிலை கவனக் குறை இருக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும், எதிர்கால அச்சம் சேமிப்பை உருவாக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது, சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் புரிதல் இருக்கும். அச்சம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

 

மேலும் படிக்க: வைகாசி ராசிபலன் PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்கள் உழைக்கும் வேகம் இன்று அசாதாரண வளர்ச்சி அளிக்கும், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரைப்  பெறுவீர்கள். இன்று இறை நம்பிக்கை அதிகமாகும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும். வீட்டில் சிறிய விசயங்களுக்கு சண்டை இடுவீர்கள். உங்கள் உறுதியான மனநிலை இன்று இருக்கும் செல்வ தட்டுப்பாட்டைச் சமாளிக்கும். கல்வி நிலையில் பிரச்சனையில்லை. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். மன உறுதி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்:1

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்