Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BMW X7 : பிரமாண்ட விலையில் பிரமாண்ட வசதி.... நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!

Manoj Krishnamoorthi Updated:
BMW X7 : பிரமாண்ட விலையில்  பிரமாண்ட வசதி....  நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!Representative Image.

BMW நிறுவனத்தில் X series காரில் வெளி வந்திருக்கும் கார் X7 ஆகும்.  Bayerische Motoren Werke AG உலகபோர் சமயத்தில் விமான இன்ஜின்கள் உற்பத்தியில் பிரபலமான  நிறுவனமாகும். BMW X series 2009 முதல் மார்க்கெட்டில் இருக்கிறது, இதன் 1995 cc இன்ஜின் நம் இந்திய கார் பிரியர்களைக் கவர்ந்தது. அந்த வரிசையில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த BMW X7 காரில் இருக்கும் பல சுவாரஸ்ய அம்சங்கள் ஒவ்வொன்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

BMW X7 : பிரமாண்ட விலையில்  பிரமாண்ட வசதி....  நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!Representative Image

BMW X7 திறன் (BMW X7  Performance In Tamil)

சொகுசு கார் வரிசையில் BMW நிறுவனத்தின் கார்கள் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும். BMW X7 பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியண்ட்களிலும் உருவாக்கப்பட்டது ஆகும். 12.04 kmpl என்ற மைலஞ் (BMW X7 Mileage) கொண்ட இந்த சொகுசு கார் 80 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி கொண்டதாகும். 2993 cc டீசல் இன்ஜின் மற்றும் 2998 cc பெட்ரோல் இன்ஜின் என்ற இவ்விரண்டு வேரியண்ட் தக்கவாறு 10:54- 13.38 kmpl மையிலேஜ் கொண்டதாகும்.

BMW X7 : பிரமாண்ட விலையில்  பிரமாண்ட வசதி....  நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!Representative Image

BMW X7 சிறப்பம்சங்கள் (BMW X7 Specifications)

வண்டியை ஓட்ட ஆரம்பிக்கும் 16 வினாடிகளில் 0- 100 km வேகம் செல்லும் திறன் கொண்ட BMW X7  760 nm @ 2000- 3000 rpm torque இருப்பது இந்த BMW X7  காரை சாலையில் பறக்கும் உணர்வை அளிக்கும். 6 நபர்கள் தாராளமாக அமரும் இட வசதியில் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காரின் மிகப்பெரிய ப்ளஸ் இதன் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். 

சாலையில் சுமார் 250 km வரை வேகம் செல்லும் திறன் கொண்ட BMW X7 கார் BS 6 இன்ஜின் வரையறைக்கு உற்பட்டது ஆகும். 5151 mm நீளம், 2218 mm அகலம் கொண்ட இந்த BMW X7 கார் தரைமட்டத்தில் (Wheelbase) 3105 mm ஆகும். 7 கலர் வேரியண்ட் கொண்ட BMW X7 கார் இனிமையான ஆடியோ சிஸ்டமை ரிமோட் கண்ட்ரோலில் கொண்டதாகும். 

BMW X7 : பிரமாண்ட விலையில்  பிரமாண்ட வசதி....  நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!Representative Image

நாம் காரில் செல்கிறோமா இல்லை பறக்கின்றோமா... என்னும் அளவிலான  வெளியில் செல்லும் வேகம் சற்றும் கூட உள்ளே அமர்ந்து இருப்பர்களுக்கு தெரியாதவாறு உள்ளதே BMW X7 காரின் சிறப்பு. நம் தேவைக்கு ஏற்றவாறு 6- 20 வகையில் அட்ஜஸ்ட் செய்ய முடியும். காரில் இருக்கும் ஹீட்டர் வசதி கப் ஹோல்டர் காபி போன்ற  உணவு பொருட்களை வெதுவெதுப்பாக சாப்பிடவும், குளிர்பானங்களை இன்னும் குளுமையாக குடிக்கவும் உதவுகிறது.  

பாதுகாப்பு அம்சங்களில் சற்றும் சலிக்காத BMW X7 ஆண்டி பிரேக் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், 9 ஏர் பேக், சைடு ஏர் பேக் கொண்டுள்ளது. மேலும் காரின் முன் மற்றும் பின் இருக்கும் கேமரா காரை எளிமையாக ரிவர்ஸ் எடுக்கவும் உதவுகிறது.  இதன் சென்சார் வசதியும், Anti- Thef Alarm மற்றும் Child Safety Locks மேலும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.  

BMW X7 : பிரமாண்ட விலையில்  பிரமாண்ட வசதி....  நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!Representative Image

BMW X7 விலை (BMW X7 Price)

சொகுசான பல வசதிகளைக் கொண்ட BMW X7  1.44- 2.18 கோடி ரூபாய் ஷோ ரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த BMW X7 காரின் இன்னொரு சிறப்பு இதன் ஆலாய் வீல் மற்றும் ஃபாக் லைட் ஆகிய இரண்டு ஆப்சனும் காரை பிரமாண்டமாக மாற்றியுள்ளது.  சுமார் 258/45 R21 சைஸ் டூயுப் லெஸ் காராக இருப்பது இந்த காரை off road car ஆக மாற்றியுள்ளது. இருப்பினும் BMW X7 2023 கார் 1.18- 1.78 கோடி ரூபாய்க்கு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

BMW X7 கார் இதுவரை வந்த BMW X series காரில் பெரியதாகும்.  X5 194.4 inch  அளவு இருக்கையில் X7 203.3 inch இல் சற்று பெரியதாகும். இது சிட்டி சாலையைக் காட்டிலும் ஹைவே அல்லது மலைப் பகுதி போன்ற தொலைதூர பயணத்திற்கு ஏற்ற சொகுசு கார் ஆகும்.  இந்த X7 series 2023 சில முன்னேற்றங்களுடன் விற்பனைக்கு வரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்