Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage Car

Manoj Krishnamoorthi Updated:
இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage CarRepresentative Image.

CNG கார்கள் LPG, பெட்ரோல் மற்றும் டீசல் காருக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. மார்க்கெட்டில் இவி கார்கள் இருந்தாலும்  CNG கார்கள் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்த வகை கார்கள் மீது நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. CNG கார்கள் பொருத்தவரை நல்ல மைலேஜ் கிடைப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவில் சிறந்த 5 CNG கார் மாடல்கள் மற்றும் அதன் விலை விபரம், பர்ஃபாமன்ஸ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage CarRepresentative Image

Maruti Suzuki XL6 

மாருதி நிறுவனத்தின் கார்களில் XL6 ஒரு பிரீமியம் ரக காராக இருக்கிறது.  20.2- 26.32 km மைலேஜ் அளிக்கும் இந்த XL6 1462cc கார் ஆகும். பெட்ரோல் அல்லது CNG வேரியண்ட், 6 சீட் மற்றும் மெனுவேல் கியர் ஆப்சனில் இயங்கும். இதன் விலை 11.29- 12.24 லட்சம் வரை உள்ளது.

இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage CarRepresentative Image

Maruti Suzuki Baleno CNG 

மாருதி சுஸுகி பெலினோ 22.3- 30.6 km மைலேஜ் அளிக்கும் புதிய CNG வகை கார் ஆகும். sigma, Delta, Delta AGS, Zeta MT போன்ற வேரியண்டில் 6.42- 8.28 லட்சம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.  1197 cc கொண்ட 5 சீட் பெலினோ CNG மற்றும் பெட்ரோல் வேரியண்டில் கிடைக்கும். 

இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage CarRepresentative Image

Toyota Glanza CNG

CNG கார்களில் குறைந்த விலைக்கு அதிக மைலேஜ் அளிக்கும் கார் Toyota Glanza ஆகும்.  பெட்ரோல் மற்றும் CNG வேரியண்ட், 5 சீட், மெனுவேல் கியர் ஆப்சன் போன்றவையில் 1197 cc திறன் கொண்டது. இதன் விலை 6.59 லட்சம் முதல் ஆரம்பிக்கிறது. 

இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage CarRepresentative Image

Hyundai Grand i10 Nios CNG

சுமார் 5.42 லட்சம் ரூபாய்க்கு Hyundai Grand i10 Nios நல்ல CNG கார் ஆகும்.  998- 1197 cc திறன் கொண்ட இந்த கார் 25 km மைலேஜ் அளிக்கும். 5 சீட், மெனுவேல் கியர், பாதுகாப்பில் 2 ஸ்டார் (Global NCAP) கொண்டது.  

இந்த 5 CNG காரில் டக்கரான மைலேஜ்... அதுவும் கம்மியான விலையில்....! | Top 5 CNG Mileage CarRepresentative Image

Tata Tiago NRG CNG, Tata Tigor CNG 

மக்களின் நம்பிக்கையான நிறுவனம் டாடா, இந்த நிறுவனத்தின் Tiago மற்றும் Tigor 26.49 km மைலேஜ் கார் ஆகும். 3 சிலிண்டர் இன்ஜின் கொண்ட Tiago மற்றும் Tigor சிறப்பான செயல்திறன் கொண்ட 5 ஸீபீடு மெனுவேல் கியர் கார் ஆகும். CNG மற்றும் பெட்ரோல் வேரியண்டில் செயல்படும், CNG இல் 73hp@95Nm & 86hp@113Nm பெட்ரோல் வேரியண்டில் செயல்படும். Tiago 6.35- 7.90 லட்சம், Tigor விலை 7.45- 8.84 லட்சம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்