Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எலக்ட்ரிக் காரில் ஒரு சொகுசு வாகனமா.... இந்த Tata Nexon Max | Tata Nexon Max Review in Tamil

Manoj Krishnamoorthi Updated:
எலக்ட்ரிக் காரில் ஒரு சொகுசு வாகனமா.... இந்த Tata Nexon Max | Tata Nexon Max Review in TamilRepresentative Image.

இந்தியாவில் முக்கியமான கார் நிறுவனம் டாடா ஆகும். இந்த நிறுவனத்தின் இவி கார்கள் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. டாடா நெக்ஸான் மேக்ஸ் சுமார் 400 km வரை பயணிக்கும் பேட்டரி பேக்அப் போன்ற சிறப்புகள் பற்றி  இந்த பதிவு எடுத்துரைக்கும்.

எலக்ட்ரிக் காரில் ஒரு சொகுசு வாகனமா.... இந்த Tata Nexon Max | Tata Nexon Max Review in TamilRepresentative Image

டாடா நெக்ஸான் மேக்ஸ் (Tata Nexon Max)

எலக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலக்ட்ரிக் கார் ஆகும். இதன் SUV பாடி டைப் மக்களை எளிதில் கவர்ந்துள்ளது. மேலும் இதன் 30.2- 40.5 kWh 320 V லித்தியம் அய்யான் பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 437 Km வரை செல்லும். முழுமையாக சார்ஜ்  (10%- 80%) ஏற  1 மணி நேர மட்டுமே ஆகும், அத்துடன் 8 வருட வாராண்டி இருப்பது காரின் தரத்தை உயர்த்துகிறது. 143 bhp 250 torque எலக்ட்ரிக் கார்களில் நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கும் காராக காட்டுகிறது. 

எலக்ட்ரிக் காரில் ஒரு சொகுசு வாகனமா.... இந்த Tata Nexon Max | Tata Nexon Max Review in TamilRepresentative Image

சிறப்பம்சங்கள் ((Tata Nexon Max specifications in tamil)

டாடா நெக்ஸான் மேக்ஸ் கார் சுமார் 9 வினாடியிலே 0 to 100 km/hr செல்லும் திறன் கொண்டது. இதுவே டாடா நிறுவனத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது. அதிகபட்சம் 140 km/hr என்பது இந்த இவி காரின் முக்கியமான அம்சம் ஆகும். இண்டென்சி- டில், பிரிஸ்டின் வொயைட், டைடோனா க்ரே போன்ற கிளசிக்கான நிறங்கள் நம்மை நெக்ஸான் வாங்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். பொதுவாக டிசனில் நெக்ஸான் மற்றும் நெக்ஸான் மேக்ஸ் ஆகிய இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. 

இன்டீரியர் டிசைனில் இந்த கார் டாப் க்ளாஸ் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாக்காரானா பேட்ஜ் என்ற கலர் ஸ்கீம் நெக்ஸான் காரை விட நெக்ஸான் மேக்ஸ் காரை சிறப்பாக காட்டுகிறது. வசதியான ஸ்டியரிங் மற்றும் ஸ்டாரங்கான பிரேக்கிங் கொண்ட 5 சீட் காரான இந்த நெக்ஸான் மேக்ஸ்  automatic transmission கார் ஆகும்.

எலக்ட்ரிக் காரில் ஒரு சொகுசு வாகனமா.... இந்த Tata Nexon Max | Tata Nexon Max Review in TamilRepresentative Image

காரின் ஏசி வென்ட்கள் மற்றும் தாராளமான சீஸ்டிங்க் கெப்பாசிட்டி நமக்கு நல்ல ஃபீல் அளிக்கிறது. மேலும், ஏசி வெண்டிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்கள் காரை லாக் மற்றும் அன்லாக் செய்ய உதவும்.  அத்துடன்   12 V USM Port, கியர் நாப் டிசைன், சென்டர் கன்சோலில் வயர்லெஸ் போன்றவை காரை பார்த்தவுடன் வாங்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

எலக்ட்ரிக் காரில் ஒரு சொகுசு வாகனமா.... இந்த Tata Nexon Max | Tata Nexon Max Review in TamilRepresentative Image

விலை (Tata Nexon Max Electric Car Price)

டாடா நெக்ஸன் காரின் பெரிய ஸைஸ் பேட்டரி, அதன் 40.5 kwh பேக்அப் மற்றும் பவர்ஃபுல் மோட்டார் போன்றவையே காரின் முக்கிய சிறப்பாகும்.  நல்ல கம்ஃபோர்ட் காராக தயாரித்து இருக்கும் டாடா நெக்ஸான் மேக்ஸ் உள்ளே அமர்ந்து பயணிக்கும்போது சிறிய அதிர்வும் அளிக்காமல் செல்வது இதன் சிறப்பாகும். அதுவும் இவி என்பதால் சத்தமும் இல்லாமல் இருப்பது நமக்கு மிதக்கிறமோ என்னும் எண்ணத்தை அளிக்குமாம். 

டாடா நெக்ஸான் மேக்ஸ் இவியில் ஒரு சொகுசு கார் என்றாலும் அது மிகையாகாது. சுமார் 18 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் டாடா நெக்ஸான் மேக்ஸ் பாதுகாப்பு அம்சங்களில் குறை வைக்கவில்லை. மொத்தத்தில் பெயருக்கு ஏற்றார் போல அனைத்து தரத்திலும் உயர்ந்து தான் உள்ளது இந்த டாடா நெக்ஸான் மேக்ஸ்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்