Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 Lakh

Manoj Krishnamoorthi Updated:
1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 LakhRepresentative Image.

பெட்ரோல் விலை அதிகரிப்பு நம்மை வேறு எதாவது மாற்று வழி இருக்காதா என யோசிக்க வைக்கிறது. இதற்கு மாற்றாக ஏற்கனவே மார்க்கெட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் உள்ளது. இதில் எந்த வண்டி வாங்குவது என்ன பட்ஜெட்டில் வாங்குவது போன்றவை குழப்பம் இருக்கலாம். இதோ இந்த பதிவு 1 லட்சம் ரூபாய் குறைவாக உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்னென்ன என்பதைக் காட்டும்.

1 லட்சம் ரூபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் List of Electric Bike Under 1 Lakh) 

1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 LakhRepresentative Image

Vespa Elettrica

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 km வரை எந்த கவலையும் இல்லாமல் போகும் DC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் ஆக  3.5 மணி நேரம் ஆகும். 3600 w பவரில் @ 200 Nm டார்க்கில் செயல்படும் Vespa Elettrica அதிகபட்சமாக 70 kmph செல்லும். 

ஃப்ரண்டு பிரேக் disc ஆக இருந்தாலும், ரியர் பிரேக் drum brake ஆக உள்ளது. மேலும் ப்ளுடூத் கனைக்ட்விட்டி, டிஜிட்டல் ஓடொமீட்டர், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டூப் லெஸ் டையர் உள்ளது, ஆனால் ABS வசதி மட்டும் கொடுக்காது சற்று எதிர்ப்பில் சரிவாக உள்ளது. இதன் விலை 90,000 இருக்குமாம், மேலும் இதன் லான்ச் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதமாக இருக்கும்.

1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 LakhRepresentative Image

Everve EF1

Everve மோட்டார்ஸ் உருவாக்கிய Everve EF1 ஸ்கூட்டர் 3 kw மற்றும் 5 kw இரண்டு வேரியண்டில் உள்ளது. 90,000 ரூபாய் மதிப்புள்ள Everve EF1 ஸ்கூட்டர் ஜனவரி 2023 வெளியாகும். முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் ஆகும். 3300 w மோட்டார் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட EF1 அதிகபட்சம் 90 km செல்லும். 

1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 LakhRepresentative Image

Hero Electric AE75

நம்பிக்கையான Hero நிறுவனம் உருவாக்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Hero Electric AE75 ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 km செல்லும் திறன் கொண்ட Hero Electric AE75  Hub மோட்டர் கொண்டது. 80,000 ரூபாய் மதிப்புள்ள AE 75 மார்ச் 2023 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 LakhRepresentative Image

Hero Electric AE 8

Hero நிறுவனத்தின் இன்னொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Hero Electric AE 8 ஆகும். இதன் அதிகபட்ச வேகம் 45 km என எதிர்பார்க்கப்படுகிறது, முழுமையாக சார்ஜ் செய்தால் 80 km செல்லும் திறன் கொண்டது. இதன் Drum பிரேக், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்றவை உள்ள AE 8 2023 ஜனவரியில் வெளியாகும்.  இதன் விலை 70,000 ரூபாய் இருக்கும். 

1 லட்சம் ரூபாய் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்..! | e scooters Under 1 LakhRepresentative Image

Ola S1

இந்தியாவில் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Ola S1, 79999 ரூபாயில் இருந்து தொடங்கும்  Ola S1 8500 w மோட்டார் பவரில் செயல்படும். ஒரு முறை சார்ஜ் செய்தல் அதிகபட்சம் 181 km செல்லும். ஆனால் முழுமையாக சார்ஜ் ஏற 6.5 மணி நேரம் ஆகுமாம். 

சராசரியாக 170 km போகும் திறன் கொண்ட Ola S1 remote start ஆப்சன் கொண்டது ஆகும். மேலும் ஆண்டி தெஃப்ட் அலாராம், மீயூசிக் கண்ட்ரோல், டிஜிட்டல் ஸ்பீடோமிட்டர், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், ப்ளுடூத், போன் கால்/ sms அலர்ட் போன்ற பல ஆப்சன்கள் இதில் உள்ளது.   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்