Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022

Manoj Krishnamoorthi Updated:
2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022 Representative Image.

கார் வாங்கும் எல்லோரும் அனைத்து வகையான சாலையிலும் சிறப்பாக  செல்லும்படியான கார் வாங்க தான் எண்ணுவர். ஆம்... கரடுமுரடான சாலை என்றாலும் ஸூமுத்தாக போகும் வாகனம் தான் நம் தேர்வாக இருக்கும். அதற்கு SUV கார்கள் நல்ல தேர்வாகும். இந்த வாசகத்தில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த SUV கார்களை பார்ப்போம்.

சிறந்த 5 SUV கார்கள் 2022

2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022 Representative Image

Mahindra Thar

SUV கார் எடுக்க நினைக்கும் ஒவ்வொரு நபரின் எண்ணத்தில் Mahindra Thar நிச்சயம் ஒருமுறை வந்து போயிருக்கும். அதற்கு காரணம் இதன் 1997- 2184 cc ஹை பர்ஃபாமன்ஸ் தான். 2010 இல் இருந்து இன்று வரை Mahindra Thar காருக்கு நிலையான இடம் உண்டு. பெட்ரோல்/ டீசல் என இரு வேரியண்டில் இருக்கும் Thar 15.2 km மைலேஜ் கார் ஆகும். சுமார் 13 லட்சம் ரூபாய் கிடைக்கும் இது பர்ஃபாமன்ஸ் மட்டுமின்றி  ஹை மெயிண்டனஸ் கார் ஆகும். 

2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022 Representative Image

Toyota Innova Crysta

எந்த கவலையும் இல்லாமல் கம்ஃபோர்ட்டான லாங்க் ட்ரைவ் போக விரும்பும் நபர்களுக்கு Toyota Innova Crysta நல்ல தேர்வாகும். இதன் பயன்பாட்டை பார்க்கும்போது இதன் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்காது. 2694 CC @ 163.6 bhp பர்ஃபாமன்ஸ் நமக்கு ஹை வேவில் நல்ல பயணம் அளிக்கும். 7- 8 நபர்கள் தாராளமாக உட்காரும் வசதி கொண்ட  Innova Crysta 18- 26.77 லட்சம் வரை ரூபாய்க்கு கிடைக்கும். 

2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022 Representative Image

Mahindra XUV700

Mahindra XUV700 கார்  5, 7 சீட் கொண்ட 1999- 2198 cc கார் ஆகும். பெட்ரோல்/ டீசல் வேரியண்டில் இயங்கும் இந்த கார் 152.87- 197.13 bhp பவர் உற்பத்தியும் செய்யும் இன்ஜின் கொண்டது ஆகும். மிகவும் பாதுகாப்பான அம்சங்கள் நிறைந்த Mahindra XUV700 கார் 13.45- 16.84 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022 Representative Image

Toyota Fortuner

மலை  பகுதியிலும் உள்ளே அமர்ந்திருப்பவர்களை கம்ஃபோர்ட்டாக எடுத்து செல்லும் திறன் கொண்டது Toyota Fortuner கார். இதன் 2694- 2755 cc திறன்  BS6 norms அடிப்படையில் சிறப்பாக செயல்படுகிறது. இதன் 10 km மைலேஜ் 163.6- 201.15 bhp பவர் முன் பெரியதாக இருக்காது. சுமார் 32.59- 50.34 லட்சம் வரை Toyota Fortuner விற்பனை செய்யப்படுகிறது. 

2022 சிறந்த SUV கார்கள்..... | Top 5 SUV cars 2022 Representative Image

Jeep Meridian

SUV கார் என்றால் நமக்கு தோன்றுவது ஜீப் போன்ற மாடல் தான். Jeep நிறுவனம் பல வருடங்களாக இதில் முன்னிலை வகுக்கிறது. 15.43- 16.2 km மைலேஜில் பயணிக்கும் 1956 cc இந்த Jeep Meridian மெனுவேல் கியர் ஆப்சன் கொண்டது ஆகும். 7 சீட் டிசல் வேரியண்டாக மட்டும் விற்பனை செய்யும் Jeep Meridian 29.90 லட்சம் ரூபாய் ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்