Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடியரசு பற்றி இந்திய குடிமகன்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஒரு பார்வை..!

Mugunthan Velumani Updated:
குடியரசு பற்றி  இந்திய குடிமகன்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஒரு பார்வை..!   Representative Image.

இந்திய நாடு ஒரு குடியரசு நாடு என்று அனைவரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம், குடியரசு அப்படி என்றால் என்ன? எப்போது ஒரு நாடு குடியரசு நாடாக மாறுகிறது, குடியரசு என்பதற்கு உண்மையான அர்த்தம் தான் என்ன போன்ற எண்ணங்கள் உங்களுக்கு என்றாவது தோன்றியுள்ளதா ..? அது சரி நம் நாட்டின் குடியரசு தலைவர் யார் என்று கேட்டால் அனைவருக்கும் பதில் தெரியும். ஆனால் யார் குடியரசுத் தலைவராக ஆக முடியும், அவரது அதிகாரங்கள் என்ன என்பது நமக்கு முழுமையாக தெரியுமா..? தற்போது நமது மனதில் எழுந்துள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை இந்தப் பதிவில் காண்போம் வாருங்கள்.

குடியரசு பற்றி  இந்திய குடிமகன்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஒரு பார்வை..!   Representative Image

குடியரசு நாள் வரலாறு

குடியரசு என்பது ஒரு ரெஸ் பப்லிக்கா என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தான் பிறந்தது,அதன் அர்த்தம் பப்ளிக் மேட்டர் (பொது விஷயம் ) என்பது தான்,  ஒரு நாடு எப்போது குடியரசு நாடாக மாறுகிறது என்றால்  ஒரு நாட்டின் உயரிய தலைவராக மக்களால் நேரடியாகவோ,  இல்லை மக்களால் மறைமுகமாகவோ தேர்ந்தேடுக்கப்படும் ஒருவர் நியமிக்கப்படும் போது தான் மாறுகிறது. இந்திய நாட்டின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் ஜனவரி 26 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று தான் இந்திய நாடு குடியரசு நாடு என்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு பற்றி  இந்திய குடிமகன்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஒரு பார்வை..!   Representative Image

குடியரசு தலைவர் வரலாறு

இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக அரசியலமைப்பு சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் அவர்களை அரசியல் அமைப்பு குழுவில் இருந்த தலைவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தார்கள். அந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர்.

அதாவது ஒரு நாடு முழுமையாக சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்றால் அந்த நாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் வேண்டும். அப்படி இந்தியாவிற்கு ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்க இந்தியாவின் மூத்த விடுதலைப் போராட்ட வீரர்களை கொண்ட ஒரு அரசியல் சாசன சபையை உருவாக்கி  அவர்களின் உதவியுடன் இந்தியாவின் அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 24 1950 ஆண்டு இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் என்பவர் அந்த நாட்டின் மக்களால் அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்தல் முறையில் நியமிக்கப்படும் ஒருவர் தான் என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆகும்.

குடியரசு பற்றி  இந்திய குடிமகன்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஒரு பார்வை..!   Representative Image

குடியரசு தலைவர் முக்கிய அதிகாரங்கள்

✤ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பவர் தான் நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படுவார். 

✤ இந்திய  நாட்டின் உயரிய தலைவர் பதவி என்பது குடியரசு தலைவர் பதவி தான். 

✤ குடியரசு தலைவர் தான் நாட்டின் குடிமகன்களின் பாதுகாவலராக கருதப்படுவார்.

✤ இந்தியாவின் முப்படைகளின் தலைவர் யார் என்றால் அதுவும் குடியரசு தலைவர் தான். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் முப்படைகளின் வீரர்கள் தங்கள் மரியாதையை குடியரசு தலைவருக்கு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

✤ இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு தான் இந்திய குடிமக்களின் உரிமைகளின் ஆதாரம். அந்த அரசியல் அமைப்பின் பாதுகாவலர் குடியரசு தலைவர் தான்.

✤ இந்தியா வெளிநாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவு, ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளும் இந்தியா சார்பில் குடியரசு தலைவர் பெயரில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குடியரசு பற்றி  இந்திய குடிமகன்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஒரு பார்வை..!   Representative Image

குடியரசு முக்கியத்துவம்

✤ இந்திய ஒரு குடியரசு நாடு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதால் தான், இந்திய குடிமக்களின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் இந்திய அரசியல் அமைப்பின் முதல் பக்கத்திலேயே (பிரீயாம்பிள்) முக்கிய அம்சங்களில் குடியரசு என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

✤ ஒரு குடியரசு நாட்டின் முக்கிய கடமை அந்த நாட்டின் குடிமக்களின் நலன் மற்றும் உரிமைகள் அனைத்து பாதிக்கப்படாமல் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது தான். இந்த நிகழ்வுகள் எல்லாம் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிப்பவர் தான் குடியரசு தலைவர்.

✤ இந்நிலையில் இந்திய நாடு ஒரு முன்னணி குடியரசு நாடு என்பதில் ஐயமில்லை, எனவே இந்த குடியரசு தினத்தின் அருமையை உணர்ந்து நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நமது சுதந்திர போராட்ட தியாகிகள், முன்னணி அரசியல் தலைவர்கள் என அனைவரையும் நினைவு கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு நாடு சுதந்திரம் அடைந்து விட்டால் மட்டும் போதாது அந்த நாடு அனைத்து வித முன்னேற்றங்களையும் பெற்று வளர்ந்து உலகளவில் மதிக்க தக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாடு ஒரு குடியரசு நாடாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்திய நாடு உலகின் முன்னணி நாடுகளில் நன்மதிப்பையும், நிலையையும் பெற்று சிறப்பான முறையில் 73 ஆண்டுகளாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்