Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூலை 18, 2022 அன்று நாட்டின் 15 குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக திருமதி. திரௌபதி முர்மு போட்டியிட்டு வெற்றிபெற்று, ஜூலை 25, 2022 ஆம் தேதி இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் 'முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி' என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவருடைய வாழ்க்கை பயணத்தை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக குடியரசு என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

குடியரசு என்றால் என்ன?

ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முறை இருந்துவந்தது. அதாவது, மன்னர் இறந்த பிறகு அவருடைய மகன் தான் அடுத்த மன்னராக பொறுப்பேற்று ஆட்சி நடத்த வேண்டும். இந்த மன்னர் ஆட்சி முறையின் போது பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்யும். இந்த வகையான ஆட்சி முறைக்கு மாற்றாக உருவான ஆட்சி முறை தான் 'குடியரசு ஆட்சி' முறை, அதாவது மக்களாட்சி முறை.

அந்த குடியரசு ஆட்சிக்கு தலைவராக இருப்பவரே ஜனாதிபதி. இவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ தான் தேர்வு செய்வார்கள். அந்தவகையில், நமது இந்திய இரண்டாவது முறையை தான் பின்பற்றி வருகிறது. அப்படி பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது குடியரசு தலைவரின் கடந்த பாதையை சற்று திரும்பி பார்க்கலாம். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

பிறப்பும் படிப்பும்:

ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி சந்தாலி என்னும் பழங்குடி இனத்தில் பிறந்தவர் திரௌபதி முர்மு. பழங்குடி இனத்தில் பிறந்திருந்தாலும் அவருடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சர்பஞ்சிகளாக இருந்ததால் அவருடைய பகுதியில் செல்வாக்கான குடும்பத்திலே தான் வளர்ந்தார். பின்பு, அவருடைய தந்தை பிரஞ்சி நாராயணன் ஜார்கண்டில் உள்ள ரமாதேவி மகளிர் பல்கலைகழத்தில் (1974 ஆம் ஆண்டு) முர்முவை பட்ட படிப்பை முடிக்க வைத்தார். அதன்பிறகு 1979 ஆம் ஆண்டு, ஒடிசா அரசாங்கத்தின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கினார். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

உதவி பேராசிரியராக பணி:

பட்ட படிப்பை முடித்த திரௌபதி தனக்கு பிடித்தமான ஆசிரியர் பணியை தான் தேர்வு செய்தார். அதற்காக முதுகலையும் பயின்று, 1994 ஆம் ஆண்டு ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். அந்த காலக்கட்டத்தில் ஒடிசா அரசின் சார்பாக அவ்வப்போது இண்டிகரேசன் புரோகிராம்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக தான் அவர் அரசு துறைகள் சார்ந்த விஷயங்களில் அவர் காலடி எடுத்து வைத்தார். 

பின்னர், 1997 இல் தற்போது இருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக தன்னை இணைந்து கொண்டார். அதே வருடத்தில் ராய்ரங்பூ நகர் பஞ்சாய்த்துத் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படியாக தனது அரசியல் பயணைத்தை தொடங்கினார் திரௌபதி முர்மு. 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

அரசியல் பயணம்:

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க சார்பில் ராய்ரங்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதன்முறை எம்.எல்.ஏ வாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் 2000 - 2002 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துராய் அமைச்சராகவும், 2002 - 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

பின்னர், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் 2வது முறையாக எம்.எல்.ஏ வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 இல் பா.ஜ.க -வின் பழங்குடி பிரிவான 'எஸ்.டி மோர்ச்சா' - வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட திரௌபதி முர்மு 2009 வரை அந்த பதவில் இருந்தார். 2007 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தால் சிறந்த எம்.எல்.ஏ -வுக்கான 'நீலகந்தா' விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

2010 ல் பா.ஜ.க -வின் மயூர்பஞ்ச் மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு தான் அவரது வாழ்க்கையில் பல இன்னல்கள் தொடங்கியது. 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

அடுத்தடுத்து மரணங்கள்:

ஆசிரியாக பணியாற்றி வந்த காலத்தில் வங்கியில் பணியாற்ற வந்த ஷ்யாம் சரண் முர்மு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் பிறந்தனர். இப்படி 2010 ஆம் ஆண்டு வரை நிம்மதியாக வாழ்க்கை நடத்திய குடும்பத்தில் ஒரு பெரிய சோகம் குடிக்கொண்டது. 2010 இல் அவருடைய 2 மகன்களில் ஒருவரை பறிகொடுத்தார். அதிலிருந்து முழுவதுமாக வெளிவருவதற்குள் அடுத்த 3 வருடங்களிலேயே மற்றொரு மகனும் கார் விபத்தில் உயிரிழந்தார். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

அதன்பிறகு, 2014 ஆம் ஆண்டு திரௌபதியின் கணவரும் இதய கோளாறு காரணமாக இறந்து போனார். தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து 4 ஆண்டுகளுக்குள் குடும்பத்தில் 3 பேரை இழந்து நிலைக்குலைந்து போனார் திரௌபதி. ஆனால், அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் மறைத்துக்கொண்டு தனது ஒரே மகளுக்காக மனஉறுதியுடன் தன்னுடைய அரசியல் பணியை தொடர்ந்தார். இதற்கிடையில், தனது தாயையும் தன்னுடைய ஒரே சகோதரியையும் இழந்த திரௌபதி விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையுடன் தன்னுடையை அரசியல் பயணத்தை தொடங்கினார். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

முதல் பெண் ஆளுநர்:

2013 ஆம் ஆண்டு பா.ஜ.க - வின் எஸ்.டி பிரிவு தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த திரௌபதி தற்போது அவருடைய ஒரே மகளுடன் தான் வாழ்ந்து வருகிறார். எப்போதும் தன்னை சமூக ஈடுபாடுகளில் மூழ்கடித்து தீவிரமாக பணியாற்றியதன் பலனாக 2015 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தின் 'முதல் பெண் ஆளுநர்' என்ற பெயரையும் பெற்றார். தொடர்ந்து 2021 வரை அந்த பகுதிலேயே ஆளுநராக பதவி வகித்தார். 

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி:

ஜூன் 2022 இல் நடைபெற்ற 15 வது குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பா.ஜ.க பரிந்துரைத்தது. தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து அமோக வெற்றிபெற்றார். ஜூலை 25, 2022 ஆம் தேதி நாட்டின் இரண்டாவது பெண் குடியரசு தலைவராக பதிவி ஏற்றார்.

திரௌபதி முர்மு வாழ்க்கை வரலாறு..| Draupadi Murmu History in TamilRepresentative Image

திரௌபதி உண்மை பெயர் இல்லை:

சந்தாலி பழங்குடி சமூகத்தை பொறுத்தவரையில் ஆண் குழந்தைக்கு தாத்தாவின் பெயரையும், பெண் குழந்தைக்கு பாட்டியின் பெயரையும் வைப்பது வழக்கம். அதன்படி, இவருடைய பெயர் "புடி". ஆனால், 1960 களில் பாலாசோர் மற்றும் கட்டாக் போன்ற பகுதிகளில் இருந்துவரும் ஆசிரியர்கள் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது வழக்கமாக இருக்கும். அப்படி, ஒடிசாவின் மயூர்பாஞ்சை சேராத வெளிமாவட்டத்தில் இருந்த வந்த ஒரு ஆசிரியர் அவருடைய பெயர் பிடிக்கவில்லை என்று, 'மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரத்திரமான திரௌபதி என்ற பெயரை வைத்தார். திருமணத்திற்கு பிறகு, கணவரின் பெயரில் உள்ள கடைசி பெயரை துணை பெயராக பயன்படுத்தத் தொடங்கினார். அன்றிலிருந்து "திரௌபதி முர்மு" என்று அழைக்கப்பட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்