Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aadhaar Tamil Movie Review : சாமானியன் குரல்.... ஆதார் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்..!

Manoj Krishnamoorthi September 23, 2022 & 12:40 [IST]
Aadhaar Tamil Movie Review : சாமானியன் குரல்....  ஆதார் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்..!Representative Image.

சமுதாயம் என்பது தேரின் சக்கரம் போல் இருபுறமும் சமமாக இருக்க வேண்டும். அதில் ஒரு சக்கரம் பெரியதாகவும் மற்றொன்று சிறிதாக இருந்தால் தேர் நிலை தடுமாறும் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் திரைப்படம் "ஆதார்" ஆகும். அதிகாரம் வர்க்கம் சாமானியம் என்ற இருதரப்பும் சமமாக நடத்தப்பட்டால் மட்டுமே சிறந்த தேசமாக ஒரு நாடு உருவாகும்  என்பதை உணர்த்த முயன்ற  "ஆதார்"  திரைப்படத்தின் திரை விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆதார் திரை விமர்சனம்- (Aadhaar Movie Review)

Aadhaar Tamil Movie Review : சாமானியன் குரல்....  ஆதார் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்..!Representative Image

கதாபாத்திரம் (Aadhar Tamil Movie Cast)

இயக்கம்:- ராம்நாத் பழனிசாமி             

இசை:- ஸ்ரீகாந்த் தேவா 

ஒளிப்பதிவு:-  மகேஷ் முத்துசாமி

நடிகர்கள்:-

கருணாஸ்- பச்சை முத்து

ரித்விகா- துளசி

அருண் பாண்டியன்- வயதான காவலர்

இனியா- சரோஜா

பாகுபலி பிரபாகர்- காவல் ஆய்வாளர் 

உமா ரியாஸ்- துணை காவல் ஆய்வாலர்

திலீபன்- பி.எல். தேனப்பன்

Aadhaar Tamil Movie Review : சாமானியன் குரல்....  ஆதார் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்..!Representative Image

கதைக்களம் (Aadhaar Movie Review)

ஒரு சாமானியனுக்கு ஏற்படும் பிரச்சனையும் அதை இந்த சமுகம் எந்த கோணத்தில் பார்க்கும் என்ற மையக் கருத்தைக் கொண்ட திரைப்படம் "ஆதார்" ஆகும். நம் தேசத்தில் இன்னும் ஒரு தரப்பினர் வறுமையில் இருந்து மீளவில்லை என்பதைக் கதாநாயகனை திரையில் காண்பித்த விதமே திரைப்படத்தின் முகவரி ஆகும்.

கட்டிடத் தொழிலாளியான கதையின் நாயகன் பச்சை முத்து  (கருணாஸ்)ன்   காணாமல் போன மனைவி  மீட்கப்படுவாரா என்ற கேள்வியுடன் தொடங்கும் கதைக்களமே "ஆதார்" ஆகும்.

Aadhaar Tamil Movie Review : சாமானியன் குரல்....  ஆதார் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்..!Representative Image

திரை பார்வை (Aadhaar Tamil Movie Review)

சென்னை மாநகரத்தில் கட்டிடத் தொழிலாளியாக இருக்கும் பச்சை முத்து (கருணாஸ்) தன் மனைவியை (ரித்விகா) மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் சேர்கிறார். குழந்தை பிறந்த பின் மனைவி காணாமல் போகும் நிலையில் கதை தொடங்குகிறது. 

திரைக்கதை முழுவதும் கருணாஸ் அவர்களை தொடர்ந்தே செல்கிறது. அதிகார வர்க்கத்தின் நடுவில் சாமானியன் நீதி எப்படி தள்ளாடுகிறது என்பதை தன் நடிப்பில் கருணாஸ் தத்ரூபமாகக் காட்டியுள்ளார். கதையில் முக்கிய கதாபாத்திரமாக வரும் அருண்பாண்டியன் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருப்பது நம்மை கதையில் எளிதில் பின்னி பிணைய வைக்கிறது. 

சிறந்த கருத்தை கதையாகக் கொண்ட இந்த படம் திரைக்கதையில் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு உயிர் கொடுத்துள்ளது.  திரைக்கதையில் அதிக நேரம் கர்ப்பிணி துளசி (ரித்விகா) அதிக நேரம் இல்லை என்றாலும் அவர் திரையில் வரும் சிறிய நேரத்திலே தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர செய்கிறார். 

கருணாஸ் கையில் குழந்தையுடன் தன் மனைவி தேடும் போராட்டத்தில் தான் இயக்குநர் சொல்ல வரும் கருத்து உணர்கிறது. கருணாஸ் அவர்கள் கதாபாத்திரம் கொள்ளும் ஆளுமை மற்ற கதாபாத்திரமான ஸ்ரீதர், இனியா போன்ற கதாபாத்திரத்திற்கு குறைவாக இருப்பது கதையின் தொய்வாக உள்ளது. 

திரைக்கதை- 3.75/ 5

வசனம்- 4/ 5

இசை- 3/ 5

ஒளிப்பதிவு- 4/ 5

இயக்கம்- 3.5/ 5

மொத்தத்தில் அதிகாரம் வர்க்கத்துக்கு வளைந்து செல்லும் ஒரு சமுகத்தால் சாமானிய வர்க்கம் என்ன நிலையாகும் என்பதைக் கண்முன் காட்சிப்படுத்திய  யதார்த்தம் "ஆதார்" ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்