Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..!

Nandhinipriya Ganeshan Updated:
காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான 'தோனி தி அன்டோஸ்ட் ஸ்டோரி' ல் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி. தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தனது காதலரும் பிரபல நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடத்தப்போது இவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். அதன்பின்னர், தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை குவித்தது.

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image

இந்த படத்தில் நடிக்கும்போது தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டாலும், அதுக்குறித்து இருவருமே வாயை திறக்கவே இல்லை. இந்த நிலையில் தங்களின் காதலை போல திருமண வேலைகளையும் ரகசியமாக செய்து வந்தனர். தற்போது அதுவும் வெளியில் வந்துவிட்டது.

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image

இவர்கள் இருவருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஜெய் சல்மான் பேலஸில் நேற்றைய தினம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் இவர்களின் திருமணம் நடைபெறும் இடத்தின் உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் செல்போன், கேமரா போன்றவை உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு மட்டும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்தநிலையில், தங்களின் திருமண புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image

தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதால், சித்தார்த் - கியாரா ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்தில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காதலனை கரம்பிடித்த தோனி பட ஹீரோயின்.. வைரல் புகைப்படங்கள்..! Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்