Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?

Gowthami Subramani October 22, 2022 & 14:00 [IST]
இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image.

திருமணம் முடிந்த பின் தம்பதியர்கள் முதலில் வரும் தீபாவளியைக் கொண்டாடுவது தான் தலை தீபாவளி என அழைப்பர். தலை தீபாவளி தினத்திற்கெனவே, ஒரு சிலர் திருமணம் செய்து கொள்பவர்களும் இருப்பர். ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று, பெண் வீட்டார்கள் தங்கள் வீட்டுக்கு புதுமணத் தம்பதியர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பான விருந்து ஏற்பாடு செய்து, புத்தாடை அளித்து மகிழ்வர். இது நம் நாட்டில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்.

இந்த ஆண்டு ஏராளமான சினிமா பிரபலங்கள், சீரியல் நட்சத்திரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில், இதில் எந்தெந்த ஜோடிகள் தலை தீபாவளியை இந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டாடுவர் என்பதைப் பார்க்கலாம்.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

நயன் விக்கி

நம் எல்லோராலும், திருமணம் முடிந்தும் இன்றளவும் பேசக் கூடிய தம்பதிகள் என்றால் அது நயன் – விக்கி தான். பெரும் எதிர்பார்ப்புடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. சமீபத்தில், இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளனர். இது குறித்து சட்ட ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் போதிலும், இவர்களுக்கு வாழ்த்து கூறி இன்னும் முடியவில்லை. எத்தனை தீபாவளியை இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டாடி இருந்தாலும், இந்த தலை தீபாவளி அவர்களுக்கு மிகவும் பிரபலமானது.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

புகழ் பென்ஸி

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமானவர் புகழ். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியை திருமணம் செய்து கொண்டார். இவரது காதல் கல்யாணம், அனைவருக்கும் ஆச்சரியத்தையே அளித்தது. இவர் கல்யாணம் செய்ததைக் காட்டிலும், காதலித்து கல்யாணம் செய்ததே அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது. இந்த காதல் கல்யாண ஜோடிக்கு இந்த தீபாவளி தான் தலை தீபாவளி.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

ஆதி நிக்கி கல்ராணி

மரகத நாணயம் படத்தில் வந்த ரீல் ஜோடி, தற்போது ரியல் ஜோடியா இருக்காங்க. மரகத நாணயம் படத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ராணிக்கு கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, ஹனிமூனுக்காக பாரிஸிற்குச் சென்று வந்தனர். இந்த ஜோடி, இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாட தயாராகின்றனர்.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

அஜய் கிருஷ்ணா ஜெர்சி

அஜய் கிருஷ்ணா விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் என்ஜாயி என்ஜாமி பாடலின் மூலம், ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் தனது காதலி ஜெர்சியை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த வருடன் தலை தீபாவளி கொண்டாடப் போகும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

யூடியூபர் கோபி சுதாகர்

யூடியூப் சேனல் மூலம், பல்வேறு ஸ்பூஃப் வீடியோக்களைப் பதிவிட்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபி. இவரும், இவரது நண்பரான சுதாகரும், இந்த ஆண்டு தலை தீபாவளியைக் கொண்டாட உள்ளனர். சுதாகருக்குக் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த மாதம் கோபிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

பிகில் நடிகை காயத்ரி

பெண்களைப் போற்றும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக அசத்தியவர் நடிகை காயத்ரி. இவருக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. இந்த ஜோடியும் இந்த முறை தலை தீபாவளி கொண்டாட காத்திருக்கின்றனர்.

இந்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்… இந்த லிஸ்டில் இவங்களுமா..?Representative Image

ஜஸ்டின் பிரபாகர்

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், பல்வேறு சிறப்பான ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் ஜஸ்டின். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரும் இந்த முறை தலை தீபாவளி கொண்டாட உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்