Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

வெந்து தணிந்தது காடு திரைப்படம் எப்படி இருக்கு? | சிம்பு வெந்து தணிந்து காடு திரைப்பட விமர்சனம் | சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம்

UDHAYAKUMAR September 14, 2022 & 21:14 [IST]
வெந்து தணிந்தது காடு திரைப்படம் எப்படி இருக்கு? | சிம்பு வெந்து தணிந்து காடு திரைப்பட விமர்சனம் | சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் Representative Image.

venthu thaninthathu kaadu review tamil | venthu thaninthathu kaadu padam eppadi irukku | venthu thaninthathu kaadu tamil review


வெந்து தணிந்தது காடு திரைப்படம் எப்படி இருக்கு? | சிம்பு வெந்து தணிந்து காடு திரைப்பட விமர்சனம் | சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 

Image


இயக்கம் - கௌதம் வாசுதேவ்

நடிப்பு - சிம்பு, சித்தி இதானி, ராதிகா சரத்குமார்

Image

எழுத்து - ஜெயமோகன்

தயாரிப்பு - ஐசரி கணேசன்

இசை - ஏ ஆர் ரஹ்மான்

ஒளிப்பதிவு - சித்தார்த்தா நுனி

எடிட்டிங் - அந்தோணி

வெந்து தணிந்த காடு ஆக மாறிய நதிகளிலே நீராடும் சூரியன்? - என்ன நடந்தது?

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதியான இன்று காலை 4 மணிக்கு வெளியானது. 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்க, ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக சித்தி இதானி நடித்துள்ளார். 

கதைச்சுருக்கம் 

தூத்துக்குடியிலிருந்து வறுமை காரணமாக மும்பைக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன், அங்கு நடக்கும் சில விசயங்களால் தடம் மாறி எப்படி கேங்ஸ்டராக மாறினார் என்பதே கதைச் சுருக்கம். 

 

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை! கௌதம் மேனனின் சூப்பர் சுவாரஸ்யங்கள்...!

விமர்சனம்

கௌதம் மேனன் - சிம்பு - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் கதை ரீதியாகவும், பாடல்கள், பின்னணி இசை, நடிப்பு, வசூல் என அத்தனை வகையிலும் பாராட்டைப் பெற்ற படம். 

ஜெயமோகன் எழுதிய நாவலின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை இந்த வெந்து தணிந்தது காடு என்பதாலும், மூவர் கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதாலும் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா இந்த படம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். 

படம் ஆரம்பத்திலிருந்து மிகவும் மெதுவாகவே செல்லும் என்பதை இயக்குநரே கூறிவிட்டார்.  முதல் பாதி முழுக்கவே சிம்புவின் அழகான எதார்த்தமான நடிப்பை கேமரா கேப்ச்சர் செய்திருக்கிறது.  உடல்மொழியிலும் கூட சிம்பு அப்படியே சாதாரண இளைஞனாக கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  21 வயது இளைஞனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். 

கதாநாயகனாக வரும் சிம்பு அளவுக்கு இல்லை என்றாலும் நாயகிக்கு முதல் பாதியில் ஓரளவுக்கு நடிக்க வாய்ப்பிருக்கிறது. ராதிகாவும் அவ்வப்போது வந்தாலும் நடிப்பில் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டு செல்கிறார். 

முதல் பாதி முடியும் இடத்தில் நமக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதிலிருந்து துவங்குகிறது அதிரடி. வழக்கமான கதைக்களத்துக்கு படம் திரும்புகிறது. அதிரடி பாதையில் பயணிக்கும் என்றாலும் இது விக்ரம், கோப்ரா மாதிரி வேகமான கதைக்களமாக இருக்காது. வேகம் கூடியிருக்கிறது. பின்னணி இசையிலும் பாடல்களிலும் ஏ ஆர் ரஹ்மான் தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். 

கிளைமாக்ஸ் காட்சி பலருக்கு பிடித்தாலும் சிலருக்கு இது ஏன் வருகிறது என்பதைப் போல தோன்றக்கூடும். காரணம் அடுத்த பார்ட்டில் சந்திக்கலாம் என்பதற்காக அப்படி வைத்திருக்கிறார்கள் போல.. படம் நிச்சயமாக தியேட்டரில் சென்று பார்க்க ஒர்த்தானது. 

வெந்து தணிந்தது காடு ஓடிடி ரிலீஸ்! எதுல வருது.. எப்போ வருது?

டிவிட்டர் விமர்சனம்

1 நபர் மற்றும் , ’Rakesh Gowthaman @VettriTheatres #VendhuThanindhathuKaadu 1st Half @SilambarasanTR literally lived the character. Great control in emote & body language After so long a good score from @arrahman in Kollywood A very different attempt from @menongautham Slow paced yet makes you travel along. 6:32 AM Sep 15, 2022 Twitter for iPhone’ எனச்சொல்லும் உரை இன் Twitter ஸ்கிரீன்ஷாட்டாக இருக்கக்கூடும்

1 நபர் மற்றும் , ’VCD @VCDtweets #VendhuThanindhathuKaadu Interval- Totally different #GVM film. Matured Performance from #SilambarasanTR #ARRahman' Songs & BGMs are a Consistent Breather. Takes lot of time to settle in. Slow paced. Single Take Interval Block is Superb .Decent so far. 7:67 AM Sep 15, 2022 Twitter for Android’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

1 நபர் மற்றும் , ’Siddarth Srinivas @sidhuwrites #VendhuThanindhathuKaadu: The film wouldn't have been half as efficient if not for @arrahman's crazy good score. Marakkuma Nenjam is definitely the heart of the film, being omnipresent in the narrative. Personally loved the picturization of Mallipoo it was so well done! 8:38 AM Sep 15, 2022 Twitter for iPhone’ எனச்சொல்லும் உரை இன் Twitter ஸ்கிரீன்ஷாட்டாக இருக்கக்கூடும்

பாடல்கள் 

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே பாடல் வரிகள்

காலத்துக்கும் நீ வேணும் பாடல் வரிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்