Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - சென்னை, கரூரில் பரபரப்பு..!

Saraswathi Updated:
அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - சென்னை, கரூரில் பரபரப்பு..!Representative Image.

சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மின்சாரம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், நிறுவனங்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எட்டு நாட்கள் நடைபெற்ற அந்த சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - சென்னை, கரூரில் பரபரப்பு..!Representative Image

அந்த பரபரப்பு சற்று அடங்கிய நிலையில, இன்று காலை முதல் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லம் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  மேற்கொண்டு வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - சென்னை, கரூரில் பரபரப்பு..!Representative Image

இந்த சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இந்த திடீர் சோதனை குறித்து தனக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தற்போது சோதனை நடைபெற்றுவருவதால் அது தொடர்பாக எந்தக் கருத்தும் கூற முடியாது என்றும் கூறினார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை மற்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்த பிறகு, அது தொடர்பான விவரங்களைத் தெரிவிப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - சென்னை, கரூரில் பரபரப்பு..!Representative Image

இதனிடையே,  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் நெருங்கிய  நண்பர் கொங்கு மெஸ் சுப்பிரமணி என்கின்ற மணி என்பவர் வீட்டில் இரண்டு கார்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிப்பவர் சண்முகம் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி செய்து வருகிறார். இவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது  மூன்று வாகனங்களில் ஐந்து இருக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும்  மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்