Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in TamilRepresentative Image.

சித்திரை மாதத்தின் முதல் நாளை 'தமிழ் புத்தாண்டாக' நாம் வருடா வருடம் கொண்டாடி வருகின்றோம். ஆங்கில புத்தாண்டிற்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டிற்கும் நம் தமிழ் மக்கள் கொடுத்து வருகின்றனர். இத்தகைய மங்களகரமான நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல், குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் வீட்டின் பூஜை அறையில் பழங்கள், தங்கம், பணம் ஆகியவற்றை வைத்து 'சித்திரை கனி' பார்ப்பதும், பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவது போன்றவையும் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். 

பொதுவாக, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை செழிப்பாக்கும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், இத்தகைய இனிப்பான நாளில் இனிப்போடு வாழ்த்துக்களையும் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துவோம். பல்வேறு விதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்களை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பர்களே!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in TamilRepresentative Image

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 ஸ்டேட்டஸ்:

1. மலரும் இந்த புத்தாண்டில்

மங்களங்கள் பெருகட்டும்

செல்வங்கள் வளரட்டும்

தீயவை ஒழிந்து

நன்மை சேரட்டும்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in TamilRepresentative Image

2.  விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று

மன நிம்மதியும்,

மகிழ்ச்சியும், நிரம்பி வழிய என் மனமார்ந்த

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in TamilRepresentative Image

3. அன்பு சொந்தங்களுக்கும் 

அழகான நட்புக்கள்

அனைவருக்கும் இனிய 

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in TamilRepresentative Image

4. மங்களகரமான சித்திரையை

மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.. | Happy Tamil New Year Wishes Quotes in TamilRepresentative Image

5. அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும்

என் இனிய தமிழ் வருடப்பிறப்பு 

நல்வாழ்த்துக்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்