Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாற்றியமைக்கப்பட்டது தமிழக அமைச்சரவை; ஜாக்பாட் அடித்தது யாருக்கு?

KANIMOZHI Updated:
மாற்றியமைக்கப்பட்டது தமிழக அமைச்சரவை; ஜாக்பாட் அடித்தது யாருக்கு?Representative Image.

திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், முதன் முறையாக தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் கூடுதல் பொறுப்பு எனும் ஜாக்பாட் அடித்துள்ளது?, அமைச்சர்கள் பட்டியலில் டாப் 10 இடம் பிடித்த டாப் 10 அமைச்சர்கள் யார் யார் என விரிவாக பார்க்கலாம்... 

 
 

மாற்றியமைக்கப்பட்டது தமிழக அமைச்சரவை; ஜாக்பாட் அடித்தது யாருக்கு?Representative Image

அமைச்சரவை மாற்றம்: 

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35வது அமைச்சராக இணைந்துள்ள நிலையில், நேற்று அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு, கிராமப்புற செயல்திட்டங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த இ.பெரியசாமி-க்கு ஊரக வளர்ச்சித் துறையும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத் துறை வழங்கப்பட்டிருக்கிறது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பணுக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த க.ராமச்சந்திரன்

சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்றியமைக்கப்பட்டது தமிழக அமைச்சரவை; ஜாக்பாட் அடித்தது யாருக்கு?Representative Image

ஜாக்பாட் அடித்தது யாருக்கு?

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் வசம் இருந்த பெருநகர வளர்ச்சி குழுமம், அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர் பாபுவிற்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஊரக வீட்டு வசதி, நகர அமைப்பு திட்டமிடுதல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் க.ராமச்சந்திரன் வசமிருந்த கதர் மற்றும் கிராம தொழில்கள் இலாக்கா, பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருந்த ஆர்.காந்திக்கு  பூதான மற்றும் கிராம தானம் துறையும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் மற்றும் புள்ளியல் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்டது தமிழக அமைச்சரவை; ஜாக்பாட் அடித்தது யாருக்கு?Representative Image

டாப் 10 அமைச்சர்கள் யார், யார்?

தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், மூன்றாவது இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் உள்ளனர்..

4வது இடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், 5வது இடத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியும் உள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு 6 வது இடத்திலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 7வது இடத்திலும் உள்ளனர்.

8வது இடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும், 9வது இடத்தில் தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசுவும் உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் முதல் இரண்டு வரிசைகளில் முதல் வரிசையில் அமர்வார் எனக்கூறப்படுகிறது.

இந்த பட்டியலில், சீனியர் அமைச்சர்களான நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் 27வது இடத்திற்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23 இடத்திற்கும், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 28வது இடத்திற்கும், இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர்பி.கே. சேகர்பாபு 26வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்