Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

ஜீன்ஸ் பேண்ட் டூ துரைமுருகன் கமெண்ட் வரை; உதயநிதி பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்!

KANIMOZHI Updated:
ஜீன்ஸ் பேண்ட் டூ துரைமுருகன் கமெண்ட் வரை; உதயநிதி பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்! Representative Image.

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், பதவியேற்பு நாளில் நடந்த பல சுவாரஸ்ய தகவல்கள் குறித்து காணலாம்... 

ஜீன்ஸ் பேண்ட் டூ துரைமுருகன் கமெண்ட் வரை; உதயநிதி பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்! Representative Image

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இணைந்துள்ளார். கடந்த 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கறுப்பு, சிவப்பு கரை வேட்டியில் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.வான பிறகு பெரும்பாலும் பேண்ட் சட்டையில் தான் வலம் வருகிறார். எனவே அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் கட்டாயம் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வருவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் இதுவரை யாருமே பதவியேற்பு விழாவில் அணிந்து வராத வகையில், நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளைச் சட்டை சகிதமாக வந்து உடை அரசியலை உடைத்துக் காட்டினார். 

ஜீன்ஸ் பேண்ட் டூ துரைமுருகன் கமெண்ட் வரை; உதயநிதி பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்! Representative Image

முதன் முறையாக பதவியேற்க உள்ளதால் சற்றே பதற்றத்துடன் காணப்பட்ட உதயநிதி ஸ்டாலின், பதவிப்பிரமாணம் முடிந்ததும் மேடையை விட்டு இறங்கிய உதயநிதி,  தனது குடும்பத்தினரைச் சந்தித்தார். அம்மா துர்கா, மனைவி கிருத்திகா, அத்தை கனிமொழி, தங்கை செந்தாமரை மற்றும் மாமா சபரீசன் ஆகியோரை கட்டித்தழுவி வாழ்த்து பெற்றார். அப்போது அங்கே இருந்த உதயநிதி மகள் தன்மயா, ஷேர் மீது ஏறி நின்று அப்பாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. 

ஜீன்ஸ் பேண்ட் டூ துரைமுருகன் கமெண்ட் வரை; உதயநிதி பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்! Representative Image

ஆளுநர் மாளிகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட காருடன் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்றார். கருணாநிதி சமாதியில், 'உதயத்தை வரவேற்போம்' என்று மலரில் எழுதப்பட்டிருந்தது. அங்கு மூத்த அமைச்சர்கள், எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோருடன் மலர் தூவி அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின், மீண்டும் அதே வாகனத்தில் தலைமைச் செயலகம் வந்தடைந்தார்.

ஜீன்ஸ் பேண்ட் டூ துரைமுருகன் கமெண்ட் வரை; உதயநிதி பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்! Representative Image

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சராக ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் அழைத்துச் சென்று அவரது அறையில் இருந்த அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தனர். “உங்க அப்பாவையும் நான்தான் முதன்முதலில் இருக்கையில் அமரவைத்தேன், இப்போது உன்னையும்” என தனக்கு உரித்தான புன்னகையுடன் தெரிவித்தார். 

அதன் பின்னர், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக நிதி ஒதுக்கீடு, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுகான மாத ஓய்வுதிய தொகை 3000 ரூபாயிலிருந்து, 6 ஆயிரம் ரூபாயாக உயர்வு, சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் உலக சாம்பியன் ஷிப் பெண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம் பதக்கம் வாங்கிய கோயமுத்தூர் மாவட்டத்தை சார்ந்த வீராங்கனை நிவேதிதாவிற்கு 4 லட்சம் ஊக்கத்தொகை ஆகிய 3 கோப்பைகளில் கையெழுத்திட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்