Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in Office

Gowthami Subramani Updated:
மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் பெண்களின் உரிமையைப் பாதுகாக்கவும், பெண்களைப் பற்றிப் பேசவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நவீன உலகில், பெண்கள் பல்வேறு துறைகளில் பங்கேற்பதுடன், தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அலுவலகம், விண்வெளி, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பெண்கள் அனைவரையும் போற்றும் வகையிலும், அவர்களது முன்னேற்றங்களை வெளியுலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலும் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் பல்வேறு விதமாக மகளிர் தினத்திய கொண்டாட முடியும். அதன் படி, இந்தப் பதிவில் அலுவலகத்தில் எப்படி மகளிர் தினத்தைக் கொண்டாடுவது என்பது பற்றி இதில் காணலாம்.

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image

மகளிர் தினம் 2023

பெண் இல்லையென்றால், எந்த ஒரு ஆக்கமும் இல்லை என்றே கூறும் அளவிற்கு பெண்களுக்கான முக்கியத்துவம் உள்ளது. ஏராளமான சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டு விளங்கும் பெண்களைப் போற்றிட இந்த 2023 ஆம் ஆண்டின் மகளிர் தினத்தைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. அலுவலகத்தில் பெண்களைப் போற்றி மகளிர் தினத்தைக் கொண்டாடும் முறைகளைப் பற்றிக் காணலாம்.
 

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image

அலுவலகத்தில் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான வழிகள்

சாதனையாளர்களை அழைத்தல்

எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும், அந்த அலுவலகத்தில் இருந்து தனது பணியை சிறப்பாகச் செய்து, பணியிலிருந்து நிறைவு பெற்ற பெண்களை அழைத்துப் பேச வைக்கலாம். இது அந்த அலுவலகத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறும் வகையில் அமையும். இதன் மூலம், அலுவலகத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் அலுவலகத்தில் பெண்களுக்கான ஆதரவை பற்றித் தெரியும் வகையில் அமையும்.

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image

விருது வழங்குதல்

வீட்டு வேலைகள் மட்டுமல்லாமல், அலுவலக வேலைகளிலும் பெண்கள் கெட்டிக்காரர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள், தங்களுக்குள் உள்ள தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, அனைத்து வேலைகளையும் செய்வார்கள். 

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image

வீடியோக்கள் பகிர்தல்

அலுவலகத்தில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வீடியோக்கள் பகிர்தல் நிகழ்வை நடத்தலாம். இது கிட்டத்தட்ட படத்தில் வரும் நிகழ்வைப் போன்றே அமையும். அதாவது, அலுவலகத்தில் உள்ளவர்களின் நெருங்கியவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு, அவர்களுக்கே தெரியாமல் வீடியோக்கள் எடுத்து நிகழ்ச்சி அன்று சர்ப்ரைஸ் செய்யலாம். 

மற்றொரு முறையாக, முழு குழுவும் பங்கேற்று, ஒற்றுமையுடன் பணியிடத்தில் இருப்பது போன்று மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறியவாறு அதனை வீடியோகவாக எடுத்து வாழ்த்துக்களைப் பகிரலாம்.

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image

தற்காப்புப் பயிற்சி

பெண்களுக்கான உரிமைகள் எத்தனை கொடுக்கப்பட்டாலும், அவர்களின் பாதுகாப்பிற்கான கேள்விக்கு இன்றளவும் பதில் தெரியாதவாறே உள்ளது. எனவே, இந்த மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில், அவர்களுக்குத் தற்காப்புக் கலைகள் குறித்து பயிற்சி வழங்கலாம். ஆபத்தில் இருந்து எப்படி ஒரு பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு விளக்கக் காட்சியை வழங்க பயிற்றுவிப்பாளரையோ அல்லது காவல் துறை அதிகாரியையோ அழைக்கலாம்.

மகளிர் தினத்தை உங்க ஆஃபிஸில் இப்படி செலிபிரேட் பண்ணுங்க.. | Womens Day Celebration Ideas in OfficeRepresentative Image

மகளிர் தின டி-ஷர்ட்

மகளிர் தினத்தைப் போற்றும் வகையில், பிரத்யேக டி-ஷர்ட்களை உருவாக்கி, நிகழ்வு கொண்டாடும் போது, அதனை அலுவல உரிமையாளர்கள் அணிந்து கொள்ளலாம். இது அவர்களுக்குரிய தோழமையை வளர்ப்பதாக அமையும். அந்த டி-ஷர்ட்களில் பெண்களை மையப்படுத்தி வாசகங்கள் அல்லது லோகோக்கள் வைத்துக் கொடுக்கலாம்.

இது போன்ற எண்ணற்ற முறைகளில் அலுவலகத்தில் மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்