Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in Tamil

Gowthami Subramani Updated:
மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in TamilRepresentative Image.

ஆண்டுதோறும், மார்ச் மாதம் 8 ஆம் நாள் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைப் போற்றும் விதமாகவும், அவர்களின் பிரதிநிதித்துவத்திய வெளிப்படுத்தும் விதமாகவும் அமையக் கூடிய மகளிர் தினத்தைப் பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
 

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in TamilRepresentative Image

ஆரம்ப காலத்தில்

18 ஆம் நூற்றாண்டில், பெண்கள் தங்களுக்கென வாழாமல், வீடுகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் பணிவிடை புரிவதுடன், எந்த ஒரு உரிமையும் இன்றி காணப்பட்டனர். அதிலும், பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு, அந்த சூழ்நிலையிலேயே தள்ளி வைக்கப்பட்டனர். இது மெதுவாக மாறி 1850 ஆம் ஆண்டுகளில், அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் கால் பதித்தனர். இருப்பினும், அவர்களுக்கான ஊதியத்திலும், உரிமை தருவதிலும் அநீதி இழக்கப்பட்டது.
 

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in TamilRepresentative Image

உரிமை மாநாடு

இதனைத் தொடர்ந்தே, 1910 ஆம் ஆண்டு டென்மார்க் கோபநேகனில் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இதில், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பெண்களும் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக, அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புரட்சிப் பெண்ணான கிளாரா ஜெட்கின். இவர் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த புரட்சியாளர் எனவும் கூறுவர்.
 

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in TamilRepresentative Image

பெண்களின் கோரிக்கை

பெண்களின் உரிமைக்காக, அவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை வலுப்படுத்தியவர் கிளாரா. இந்தப் போராட்டத்தில், பெண்களின் உரிமைகளைப் பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்களின் தினமாக கடைபிடிக்க வேண்டும் எனக் கருதினர். அதன் படி, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த தீர்மானம் நிறைவேற்றவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும், வெவ்வேறு தினங்களில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தது.
 

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in TamilRepresentative Image

உலகையே திருப்பிப் பார்க்க வைத்த புரட்சி

அதன் பிறகு, 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் போராட்டம் நடந்தது. இது உலகையே திருப்பிப் பார்க்க வைத்த புரட்சியாக மாறியது. ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சியாகும். இந்த போராட்டத்தின் தாக்கத்தால், அப்போதைய ரஷ்ய மன்னராக இருந்த ஜாரின் ஆட்சியே கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1920 ஆம் ஆண்டில், சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் பெண்களுக்கான போராட்டத்தில் அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டு பெண்களுக்காக போராடினார்.
 

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.! நீங்கள் அறியாத சில உண்மைகள்.. | Womens Day History in TamilRepresentative Image

உலகம் முழுவதும் மார்ச் 8

ரஷ்ய பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில், பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏனெனில், இந்நாளே புரட்சி நடைபெற்ற நாளாகும். க்ரிகோரியன் காலண்டர் படி, அவர்கள் கோரிக்கை வைத்த கடைசி ஞாயிற்றுக்கிழமையானது மார்ச் 8 ஆம் தேதியாக இருந்தது. இதனையடுத்தே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்