Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of Sitting

Gowthami Subramani Updated:
நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image.

தொழில்நுட்பங்கள் வளர வளர, மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையும் குறைகிறது. டிரெண்டிங்கேற்ப, ஒருவரது செயல்பாடுகளும் அமையும். நம் வாழ்க்கை முறையில் ஏற்படும் சில மாற்றங்கள், நமது உடல் ஆரோக்கியத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், நாம் உட்காரும் முறையை மாற்றிக் கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் எழுகின்றன.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல்

ஒருவர் நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்பதும், உட்கார்ந்த படியே வேலை செய்வதும் அவசியமாகிவிட்டது. இதனால், பல்வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால், இந்த ஆபத்தை உணராமல் நீண்ட நேரமாகவே உட்கார்ந்துக் கொண்டு இருப்பர். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதோ, எந்த வேலையும் செய்யாமல் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதோ உயிரைப் பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்துபவையாக அமைகின்றன.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

குறிப்பாக இவர்களுக்கு

அதிலும் குறிப்பாக, கணினி சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய், இருதய நோய் போன்றவை ஏற்படும். பொதுவாகவே, கணினி துறை சார்ந்த பணிகளில் மன அழுத்தம் அதிகமாகவே காணப்படும். மேலும், கணினியில் இருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகளும் ஒரு காரணமாகவே இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும், உயிரைப் பறிக்கும் வகையிலும் அமையும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

ஏன் தெரியுமா.?

மேசை, கணினித் திரைக்கு முன்னதாக ரொம்ப நேரம் அமர்ந்து கொண்டு வேலை செய்தால் அதனால் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது எதனால் ஏற்படுகிறது என்றால், ஒருவர் நிற்கும் போதோ அல்லது நகரும் போதோ செலவாகும் ஆற்றலை ஒப்பிடும் போது, அவர்கள் உட்கார்ந்திருக்கும் போது செலவாகும் ஆற்றலை விட குறைவாகவே செயல்படுகிறது. நம் உடலின் செலவாகக் கூடிய ஆற்றலை வைத்தே நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

ஏற்படும் விளைவுகள்

அதன் படி, உடலில் குறைந்தபட்ச ஆற்றலை உபயோகிப்பது உடல் நலத்தைப் பாதிக்கும். எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது, உடல் பருமனாகவோ, தடிமனாகவோ இருக்கும். இதன் காரணமாக, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல், இடுப்பைச் சுற்றிலும் உடல் கொழுப்புகள் படிவது, தொப்பை போடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும், இருதய நோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

இயல்பான வடிவம்

மனிதர்கள் தங்களின் நிமிர்ந்து நிற்பதற்கான இயல்புக்கேற்ப வடிவமைக்கப்பட்டவர்கள் ஆவர். எனவே, இந்த நிலையில் இருக்கும் போது இதயம் மற்றும் உடலின் பல்வேறு அமைப்புகள் திறம்பட செயல்படுபவையாக உள்ளன. அதே போல, மருத்துவமனை படுக்கைகளில் இருப்பவர்களின் குடல் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படும். அதன் படி, நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது உடல் நலத்திற்குச் சிக்கல்களைத் தரும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

கால் மற்றும் தொடை தசைகள்

இது போன்று, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், கால் மற்றும் தொடையின் தசைகள் பலவீனமடையக் கூடும். இவ்வாறு பலவீனமாக இருக்கும் போது, நடக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ காயமடைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கக் கூடிய சர்க்கரை, கொழுப்புகள் போன்றவை செரிமாணம் செய்வது அவசியம் ஆகும். இவ்வாறு செரிமானம் செய்வதற்கு தசைகளை இயக்க வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கே ஆபத்தாம்! குறிப்பா உங்களுக்கு.. | Disadvantages of SittingRepresentative Image

மூட்டு வலி மற்றும் புற்றுநோய்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், இடுப்பின் தசைகள் வலுவிலக்கப்படுகின்றன. இதனால் இடுப்பு, மூட்டுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது முதுகு தண்டுவட பிரச்சனையையும் தரக்கூடும். இதில் சிக்கலைத் தரும் ஒன்றாக விளங்குவது புற்றுநோய் பிரச்சனையும் ஆகும். இதன் காரணமாக பல்வேறு காரணமான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்