Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..

Nandhinipriya Ganeshan Updated:
நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image.

நம் உடலுக்கு ஒரு நாள் முழுவதும் உழைக்க தேவையான ஆற்றல் காலை உணவிலிருந்து தான் கிடைக்கிறது. அந்தகாலத்தில் நம் முன்னோர்கள் கம்பு, கேழ்வரகு, திணை போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். ஆனால், இந்த காலத்தில் அம்மாதிரியான உணவுகளை நம்மில் பலரும் நுகர்ந்துக்கூட பார்ப்பது கிடையாது. 

அதற்கு பதிலாக பீட்ஸா, பர்கர் என நாவிற்கு சுவையான உணவுகளை சாப்பிட்டுவிட வேண்டியது, பின்னர் உடல் எடை அதிகமாகிவிட்டதே என்று கவலைப்பட்டு காலை நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டியது. இன்னும் பலர் அறக்க பறக்க வேலைக்கு ஓடுவதில் காலை உணவை மறந்துவிடுகிறார். எனவே, காலை உணவை தவிர்ப்பதால் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம். 

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

மனஅழுத்த பிரச்சனைகள்:

காலை உணவை தவிர்ப்பதால், மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்காக நம் உடலில் சுரக்கும் 'டோபமைன்' மற்றும் 'செரடோனின்' என்ற ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இதனால், மற்றவர்களிடம் எரிந்து விழுவது, படபடப்பு, சின்ன விஷயத்திற்கும் அதிகமாக கோபப்படுவது, கடிந்துக் கொள்வது, நிதானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பித்துவிடும்.

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

பசி உணர்வு:

உணவை தவிர்க்கும்போது, நமது பசியை தூண்டக்கூடிய 'க்ரெலின்' என்ற ஹார்மோன் மற்றும் பசியை கட்டுக்குள் கொண்டுவரும் 'லெப்டின்' ஹார்மோனின் நிலையிலும் மாற்றங்கள் நிகழும். லெப்டின் ஹார்மோனின் அளவு குறைந்து, கெர்லின் ஹார்மோன் அளவு அதிகரித்தால், சாப்பிடும் போது 'போதும்' என்ற வார்த்தையே வராது. அதாவது, பசி உணர்வு அவ்வளவு சீக்கிரம் அடங்காது. 

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

வெயிட் போடும்:

நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக காலை நேரத்தில் சாப்பிடாமல் இருப்போம். அது தான் மிகப்பெரிய தவறே. ஏனென்றால், காலை நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், கெர்லின் ஹார்மோன் அளவு அதிகரித்து பசியை தூண்டும். அதனால், மதியம் சேர்த்து சாப்பிடுவோம். இப்படி சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது. 

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

சுகர் வரும்:

காலை உணவை தவிர்ப்பவர்கள் நீங்களே உங்களுக்கு சர்க்கரை நோயை வர சொல்லி அழைப்பதற்கு சமம். அதாவது, காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ் - இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். இதனால், மதியம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸை சமன்செய்ய, உடலில் அதிகளவு இன்சுலின் சுரக்கப்படும். இப்படி தொடர்ச்சியாக நிகழும்போது, சில நாட்கள் கழித்து 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' ஏற்பட்டு, சர்க்கரை நோய்க்கு ஆளாவீர்கள். 
 

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

மறதி அதிகரிக்கும்:

காலை உணவை தவிர்ப்பதால் மூளையின் செயல்பாடு குறையும். ஏனென்றால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸிலிருந்து தான் மூளைக்கு ஆற்றல் கிடைக்கிறது. நாம் சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளை ஒழுங்காக செயல்படாமல் போகும். இதனால், வேளைகளில் முழு கவனத்துடன் ஈடுபட முடியாது. மறதியும் வரும். நாள் முழுக்க சோர்வாகவே இருப்பீர்கள். 

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

அல்சர் வரும்:

நாம் சாப்பிடும் உணவு குடலை அடைந்ததும் பெப்சின் மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் என்ற திரவம் சுரக்க ஆரம்பிக்கும். இதன்மூலம் செரிமானம் நடைபெறும். தினமும் காலை நேரத்தில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. அந்த நேரத்தில், நாம் சாப்பிடாமல் இருந்தல், சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். இதனால், குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்படும். இதனாலும் வாயில் துர்நாற்றம் வீசும்.

நேரமில்ல.. உடம்பை குறைக்கிறேன்.. என்றெல்லாம் காலை உணவை ஸ்கிப் செய்வதால் வரும் ஆபத்து..Representative Image

வாய் துர்நாற்றம்:

நாம் காலை நேரத்தில் உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது, நமது எச்சில் சுரப்பில் இருக்கும் 'லைஸோசைம்', வாய்ப்பகுதியில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழித்துவிடும். ஆனால், நாம் சாப்பிடாமல் இருந்தால் லைஸோசைம் இல்லாமல், வாயில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரித்து, வாய் துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். அதனால், இனி எக்காரணத்திற்காகவும் காலை உணவை மட்டும் தவிர்க்காதீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்