Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in TamilRepresentative Image.

"டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம்" (Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் இரண்டு பிரசவங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ. 18000 நிதி உதவி (Pregnanct Scheme in Tamil) வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது, இத்திட்டத்தினால் என்னென்ன பயன்கள் போன்றவற்றை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். 

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in TamilRepresentative Image

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டத்தின் நன்மைகள்:

இத்திட்டத்தின் கீழ் 5 தவணைகளில் பணத்தொகையுடன் கூடவே 2 முறை ஊட்டச்சத்துக் கருவிகளும் (Maternity Benefit Scheme in Tamil) வழங்கப்படும்.

1வது தவணை: பிரசவத்திற்கு முன் 12 வாரத்தில் அல்லது அதற்கு முன் - ரூ. 2,000/-

கைண்ட் பெனிஃபிட்: மூன்றாவது மாத இறுதியில் + முதல் ஊட்டச்சத்து பெட்டி - ரூ. 2,000/-

2வது தவணை: 4 மாதங்களுக்குப் பிறகு - ரூ. 2,000/-

கைண்ட் பெனிஃபிட்: இரண்டாவது ஊட்டச்சத்து பெட்டி - ரூ. 2,000/-

3வது தவணை: டெலிவரிக்குப் பிறகு - ரூ. 4,000/-

4வது தவணை: OPV/Rota/Penta valent இன் அனைத்து 3வது டோஸ்கள் மற்றும் IPV இன் 2 டோஸ்கள் முடிந்த பிறகு - ரூ. 4,000/-

5வது தவணை: குழந்தைகளின் 9வது மற்றும் 12வது மாதத்திற்குள் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை முடித்த பிறகு - ரூ. 2,000/-

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in TamilRepresentative Image

அம்மா மகப்பேறு சத்துணவு கிட்:

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "அம்மா மகப்பேறு சத்துணவு கிட்" (Tamilnadu Amma Maternity Nutrition Kit Scheme) வழங்கப்படுகிறது.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 2,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். அவையாவன;

  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர் - 1Kg
  • IFA சிரப் - 3
  • பேரிச்சம்பழம் - 1Kg
  • புரோட்டீன் பிஸ்கட் - 500 gms
  • ஆவின் நெய் - 500 gms
  • டி.அல்பெண்டசோல் - 3
  • துண்டு - 1
கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in TamilRepresentative Image

இத்திட்டத்திற்கான தகுதி வரம்பு:

  • கருவுற்ற பெண் இந்திய நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • கருவுற்ற பெண் 19 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • கருவுற்ற பெண் BPL குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் முதல் 2 பிரசவங்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • கருசிதைவிற்கோ, கருக்கலைப்பிற்கோ உதவி தொகை வழங்கப்படாது.
  • தாய் மரணம் அடைந்துவிட்டால் குழந்தை பாதுகாவலருக்கு உதவி தொகை வழங்கப்படும்.
  • குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்தவுடன் இறந்து விட்டாலோ தாய்க்கு உதவி தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் திட்டத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியானவர்கள்.
  • மகப்பேறு நிதியுதவி பெற விண்ணப்பித்தவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் தடையில்லா (No Objection Certificate) சான்றுதலை பெற்று, தமிழக அரசு மூலம் வழங்கப்படும் மகப்பேறு நிதி, கர்ப்பிணி தாய்மார்கள் ஏதாவது ஒரு துறை மூலம் மட்டுமே நிதியுதவி பெற முடியும். 
கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in TamilRepresentative Image

இந்த திட்டத்தில் பயன் பெற நிபந்தனைகள்:

  • PICME எண் பெற வேண்டும்
  • களப்பணியாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளிகள் பெயரில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாளச் சான்று - வாக்காளர் ஐடி, ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம் (இவற்றில் ஏதேனும் ஒன்று)
  • வங்கி கணக்கு (Bank Account)
  • BPL ரேஷன் கார்டு
  • வயதுச் சான்று - வாக்காளர் ஐடி, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம் (இவற்றில் ஏதேனும் ஒன்று)

திட்டத்தின் செயல்முறை:

கர்ப்பிணி பெண் தான் கர்ப்பமாக இருப்பதை 12 வாரங்களுக்கு முன் VHN / UHN உடன் பதிவு செய்ய வேண்டும் அல்லது 12 வாரங்களுக்கு முன் தன் கர்ப்பத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்