Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம்

Vaishnavi Subramani Updated:
வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image.

நம் வாழ்வில் பல வேலைகளில் நாம் சோம்பேறித்தனமாக இருப்பதாலும் மற்றும் இந்த வேலை எளிதான ஒன்று அதனால் பிறகு செய்யலாம். இது போன்ற காரணங்களால் நம் வாழ்வில் மற்றும் வேலை தொழில் போன்ற இடங்களில் செய்வதால் பின்வரும் காலத்தில் அது ஒரு தடையாக மாறி உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும்.

இது போன்ற பல காரணங்களால் நமக்கு இந்த வேலையைத் தள்ளிப்போடுவது ஒரு பழக்கமாக மாறிவிடும். இது நமது வருங்காலத்தில் தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் இது ஒரு தடையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பதிவில் சிறந்த 10 வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

1.வேலை அட்டவணை

✤ நீங்கள் இன்று காலை இருந்து மாலை வரை நீங்கள் செய்யும் வேலையை அட்டவணையாக தயார் செய்ய வேண்டும். நேரத்தை வைத்து அட்டவணை வகுக்க வேண்டும்.

✤ இந்த நேரத்திற்குள் இந்த வேலை முடிக்க வேண்டும் என ஒரு பேப்பரில் அட்டவணை எழுதி நீங்கள் பார்க்கும் இடத்தில் ஓட்டிக் கொள்ளவேண்டும். நீங்கள் அந்த பேப்பரை பார்க்கும் போது, இந்த வேலை முடித்து ஆக வேண்டும் என உங்கள் நினைவிலிருந்து கொண்டு இருக்கும்.

✤ நீங்கள் முடிக்கும் வேலையை அவ்வப்போது அதில் அடித்துக் கொண்டு வந்தால் நீங்கள் விரைவில் ஒரு நாளுக்கான வேலை மீதம் உள்ளதைப் பார்த்து ஒரு தன்நம்பிக்கை பிறக்கும் இதனால் விரைவில் வேலை முடிக்க வேண்டும் எண்ணம் இருக்கும்.

✤ ஒரு நாள் முடிவில் அட்டவணையிட்ட அனைத்து வேலைகளும் முடித்து விட்டமா எனப் பார்க்கவும். அப்படி முடித்திருந்தால் அந்த அட்டவணை முடிவில் ஒரு நட்சத்திரம் வரையவும். இது போன்று தினமும் செய்தால் நம் மனம் மிகவும் ஆனந்தமாகவும் மற்றும் மீண்டும் புத்துணர்ச்சியாக வேலை செய்யலாம்.

✤ அப்படி முடிக்கவில்லை என்றால் அந்த வேலை அடுத்த நாள் அட்டவணையில் முதலில் செய்து விட்டு அடுத்து அந்த நாளில் உள்ள வேலை பட்டியலிட்டுச் செய்யவேண்டும்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

2.உங்களிடம் கேள்வி

✤ ஒரு வேலையை தள்ளிப்போடலாம் என நினைத்தால் முதலில் நீங்கள் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேளுங்கள். இந்த வேலையை தள்ளிப்போடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்?.

✤ இந்த கேள்வியால் அந்த வேலைக்குக் கொடுக்கப்பட்ட நேரம் மற்றும் வேலை பற்றிச் சிந்திக்க வேண்டும் ?. உங்கள் வேலைக்கு அளித்த நேரம் குறைவாக இருக்கும் போது அதிகமாக வேலையிருந்தால் நீங்கள் அந்த வேலை தள்ளிப்போடாமல் வேலை செய்வதற்கு இந்த கேள்வி உதவியாக இருக்கும்.

✤ இந்த வேலை நேரத்திற்கு முடித்தால் நமக்கு மகிழ்ச்சி அல்லது அடுத்து புதிய வேலையைக் கிடைக்குமா என யேசிக்க வேண்டும் ?. இந்த வேலை தள்ளிப்போடுவதனால் பின்னர் விளைவுகள் ஏற்படுமா ? அல்லது இல்லையா எனச் சிந்திக்க வேண்டும் ?. 

✤ இந்த கேள்வி அந்த வேலையை ஒரு உத்வேகத்துடன் எளிதில் முடிக்க முடியும். இது போன்ற பல கேள்விகள் தோன்றும் அதனால் வேலையைத் தள்ளிப்போடாமல் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

3. சாதாரணமாக வேலை செய்யுங்கள்

✤  நீங்கள் ஒரு வேலை செய்ய ஆரம்பிக்கும் போது உங்கள் மனதில் மிகவும் இயல்பாக வைத்திருக்க வேண்டும். மற்ற வேலையைச் செய்ததை போல் இந்த வேலையும் செய்ய வேண்டும். கிடைக்கும் வேலை சிறியதாக இருந்தாலும் உடனே செய்வது மிகவும் நல்லது.

✤  சிறிய வேலை பிறகு செய்யலாம் என நினைத்தால் பின்னால் பெரிய வேலை வந்தால் இந்த சிறிய வேலை செய்ய முடியாமல் போகும். அதனால் எந்த வேலை இருந்தாலும் உடனே செய்வது மிகவும் நல்லது. இந்த பழக்கங்கள் தினமும் பின்பற்றினால் வேலையை தள்ளிப்போடும் பழக்கங்கள் எப்பொழுதும் வராது.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

4.வேலையைப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்

✤  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பெரிய வேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் உடனே அந்த வேலையில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து பிறகு அந்த வேலையைச் செய்யலாம் என நினைக்க கூடாது.

✤  அந்த வேலையை முதலில் எப்படி சின்னசின்ன வேலையைப் பிரிக்கலாம் என யோசிக்கவேண்டும். கடினம் அதிகம் உள்ள பகுதியை முதலில் முடித்துவிட்டு அதன் பின், மீதம் உள்ள நேரத்தில் எளிமையாகச் செய்யும் வேலை செய்தால் வேலை கொடுத்த நேரத்திற்குள் முடித்துக் கொடுக்க முடியும்.

✤  இதனை அனைத்து வேலை செய்யும் போது பின்பற்றினால், இது வேலையை தள்ளிப்போடும் எண்ணங்கள் வராமல் மிகவும் உற்சாகமாக அடுத்த வேலை செய்ய உதவும்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

5.காரணங்கள் சொல்லுவதை நிறுத்துங்கள்

✤  ஒரு வேலை உங்களுக்குச் செய்வதற்குக் கொடுத்தால் உடனே இந்த வேலை செய்வதற்கு மனம் சரியில்லை என அந்த வேலை தள்ளிப்போடுவது என்பது அந்த வேலை செய்யாமல் இருப்பதற்குக் கூறும் காரணங்கள்.

✤  இதுபோன்ற காரணங்களைச் சொல்லாமல் நீங்கள் அந்த வேலை முதலில் என்ன வேலை பார்க்கவேண்டும். அந்த வேலை முழு ஈடுபாட்டுடன் செய்ய முயற்சி செய்ய வேண்டும். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் பிறகு எந்த வேலைக்குக் காரணங்கள் கூறவே மாட்டிர்கள்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

6.உங்களைச் சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்

✤  உங்களுக்கு ஒரு வேலை கொடுத்த நேரத்தில் கொடுத்த வேலையை முடித்து விட்டால் உங்களது வேலை அட்டவணையில் நட்சத்திரம் வரைவது மற்றும் பிடித்த பாடல், சின்ன விளையாட்டு இது போன்று எந்த ஒரு விஷியம் மகிழ்ச்சி தருமோ அதை ஒரு ஐந்து நிமிடங்கள் மனமகிழ்ச்சிக்காகச் செய்யலாம்.

✤  இதனால் மனம் மிகவும் உற்சாகமாகவும், அடுத்த வேலை மிகவும் உத்வேகமாகச் செய்வதற்கு உதவியாக இருக்கும். இது போன்று செய்தால் நமக்குச் சோம்பேறித்தனமான எண்ணங்கள் வராமல் இருக்கவும் மற்றும் அடுத்தடுத்த வேலைகளை மிகவும் உற்சாகமாகவும் விரைவில் அனைத்து வேலைகளை முடித்து விடலாம் என மன எண்ணங்கள் தோன்றுவதற்கு உதவியாக இருக்கும்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

7.செய்யாதா வேலையைச் சிந்தியுங்கள்

✤  உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் மறந்து விட்டால் அந்த வேலைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் செய்யாதா வேலை நினைத்து அதனால் பின்வரப்போகும் பிரச்சனைகளைப் பற்றி முன்பாகவே யோசித்து அதில் பிரச்சனைகளை வரவாய்ப்பு இருந்தால் உடனே அந்த வேலை செய்ய வேண்டும்.

✤  இது போன்ற பல பிரச்சனைகளை முன்பாகவே யோசித்து வேலைகளைச் செய்தால் வரும்காலங்களில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. இந்த பழக்கத்தைத் தினமும் செய்தால் வேலையைத் தள்ளிப்போடும் என்ற எண்ணங்கள் எப்பொழுதும் வராது.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

8. மிகவும் கடினமான வேலை முடிப்பது

✤ இங்குப் பலரும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடினமான வேலையைக் கடைசியில் செய்து கொள்ளலாம். என வேலையைத் தள்ளிப்போடுவதால் கொடுத்த நேரத்தில் அந்த வேலை முடிக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

✤ சிறிய வேலையை முதலில் செய்யலாம் என வெகுநேரம் எடுத்துக் கொண்டு அந்த கடினமான வேலையை முடிப்பதற்கு,  போதுமான நேரம் இல்லாமல் அதை எப்படி முடிப்பது எனப் பயம் ஏற்படும்.

✤ இதனால் அடுத்த வேலைகளில் கவனம் குறைவாகவும் மற்றும் நேரம் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.அதனால் கடினமான வேலையை முதலில் முடிப்பது என்பது மிகவும் அவசியம். அதை முடித்தால் ஒரு உற்சாகம் மனதில் ஏற்படும் அதனால் அடுத்த வேலை மிகவும் வேகமாக முடிக்க முடியும்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

9.பொழுதுபோக்கு தவிர்க்கவும்

✤ நீங்கள் அதிகமான நேரத்தைப் பொழுதுபோக்கிற்குச் செலவுசெய்தால் வேலை செய்து முடிப்பதற்கு நேரம் மிகவும் குறைவாகவும் முடிக்கமுடியாமல் போனால் அடுத்த நாள் செய்வதற்கும் தள்ளும்.

✤ பல பொழுதுபோக்குகள் உள்ளது. உங்கள் போன்களில் டேட்டாவை ஆன் செய்து வைத்திருந்தால் அதில் வரும் தேவையற்ற தகவல்களைப் பார்த்து நேரத்தைச் செலவுசெய்வதால் வேலையின் கவனம் சிதறும் அதனால் அதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் போன்னை முழுவதுமாக ஆஃப் செய்யலாம். இந்த முறை பின்பற்றினால் வேகமாக வேலை முடிக்கமுடியும் மற்றும் கவனம் சிதறாமல் தெளிவாக வேலை செய்யலாம்.

வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க இந்த 10 வழிகளை பின்பற்றலாம் Representative Image

10.கவலைப்படுவதைத் தவிர்க்கவும்

✤ கடந்த காலத்தில் வேலைகளைச் சரிவரச் செய்யாமல் இருந்து அதில் ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றி நினைக்காமல் இப்பொழுது என்ன நடக்கிறது என நினைக்க வேண்டும்.

✤ கொடுத்த நேரத்தில் அந்த வேலை செய்யவில்லை என நினைத்து வருந்தாமல் மீதம் உள்ள நேரத்தில் கவனத்தைச் சிதறடிக்காமல் வேலையைச் செய்ய வேண்டும். இந்த வழக்கத்தைத் தினமும் செய்தால் உங்கள் மனதில் கவலைகள் வருத்தம் என அனைத்தும் சேராமல் மனம் அமைதியாக வேலையில் கவனமாகச் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்