Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சத்து மாவில் ஒரு கேக் ரெசிபி | sathu maavil a cake recipe

Vaishnavi Subramani Updated:
சத்து மாவில் ஒரு கேக் ரெசிபி | sathu maavil a cake recipeRepresentative Image.

சத்துகள் அதிகமாக உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. சாக்லேட் அல்லது கேக் போன்றவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு ரெசிபி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபி செய்யவேண்டும் என நினைத்தால் இந்த ரெசிபி செய்யலாம். இந்த ரெசிபி  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் அதில் அதிகமாக சத்துகள் நிறைந்து இருக்கும். வீட்டிலேயே உள்ள சத்துமாவில் கேக் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சத்து மாவில் ஒரு கேக் ரெசிபி | sathu maavil a cake recipeRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ சத்து மாவு – 2கப்

✤ சர்க்கரை – 1/4கப்

✤ ஏலக்காய் -3

✤ முட்டை - 2

✤ எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன் (சூரிய காந்தி எண்ணெய்)

✤ ஆப்பசோடா – 1/4டீஸ்பூன்

✤ பால் – 1கப்

✤ முத்திரி -5

✤ திராட்சை- 5

சத்து மாவில் ஒரு கேக் ரெசிபி | sathu maavil a cake recipeRepresentative Image

செய்முறை

✤ ஒரு கேக் பேன் சில்வரில் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பேன் முழுவதுமாக தேய்த்து கொள்ளவும். அதன் மேல் மைதா மாவு அல்லது கோதுமை மாவு முழுவதுமாக தூவி விடவேண்டும்.

✤ கேக் செய்வதற்கு,தேவையான மாவைத் தயாரிக்கலாம். முதலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு கப் அளவிற்குச் சத்து மாவு  இவை அனைத்தையும் மிக்ஸி, ஜாரில்  சேர்த்து நன்றாக அரைக்கவும். அதில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.

✤ அத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் ஆப்ப சோடா கால் கப் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

✤ அதில் ஒரு கப் அளவிற்குப் பால் எடுத்து சிறிதுசிறிதாகச் சேர்த்து நன்றாகத் தோசை மாவு பதத்திற்கு வரும் வரை அரைக்க வேண்டும்.

✤ அரைத்த மாவை எடுத்து கோதுமை மாவு தூவிய கேக் பேன்னில் முழுவதுமாக ஊற்றாமல் பாதி அளவிற்கு ஊற்ற வேண்டும்.

சத்து மாவில் ஒரு கேக் ரெசிபி | sathu maavil a cake recipeRepresentative Image

✤ அதை  ஓவன் இருந்தால் கேக் பேன்னில் ஊற்றி மாவின் மீது முந்திரி மற்றும் திராட்சை துருவி தூவி விட்டு வேக வைக்க வேண்டும்.

✤ கேக் வெந்த உடன் எடுத்து அதைக் கத்தி வைத்து எடுத்து பேன்னில் இருந்து மற்றொரு தட்டில் மாற்றினால் கேக் தயார்.

✤ இதுவே ஓவன் இல்லை என்றால் அடுப்பில் சமைப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் அல்லது மணல் சேர்த்து 10லிருந்து 20 நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.

✤ அதில் குடத்திற்கு அடியில் வைக்கும் கலவடையை வைத்து அதன் மேல் இந்த கேக் பேன் வைத்து பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு முடி வைத்து 15 நிமிடங்கள் விட வேண்டும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்க வேண்டும்.

சத்து மாவில் ஒரு கேக் ரெசிபி | sathu maavil a cake recipeRepresentative Image

✤ ஆவி வெளியேறாமல் இருப்பதற்குத் தட்டின் மீது ஒரு கல் அல்லது அதிக எடை உள்ள பொருள் வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அதில் முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சை துருவி அதில் தூவி விட வேண்டும்.

✤ அதன் பின் அதை சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வேக விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த கேக் வெந்ததா எனப் பார்க்க வேண்டும்.

✤ ஒரு குச்சி அல்லது ஸ்பூன் மறுமுனை பகுதியை எடுத்து கேக்கில் குத்தி பார்த்தால் அதில் ஒட்டாமல் வந்தால் கேக்  நன்றாக வெந்துவிட்டது கேக் தயார்.

அதை ஒரு பெரிய தட்டில் தலைகீழாகக் கவிழ்த்தால் எடுத்தால் சத்து மாவு கேக் தயார். இதை வீட்டில் உள்ள குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்